சுரங்கத் தொழில் சுக வாழ்வு தருமா?  

இன்றைய உலகில் போருக்கான முக்கிய காரணம் ஒன்றே ஒன்றுதான். பூமியில் கிடைக்கும் எரிபொருள் அல்லது கனிம வளங்கள். இவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டால், உலக நாடுகளை எரிபொருள், கனிம தேவைகளுக்காக தங்களை மட்டுமே சார்ந்திருக்க வைக்க முடியும் என்று அனைத்து நாடுகளும் நினைக்கின்றன. பூமியை தாண்டி வேற்று கிரகங்களிலும் இவர்களது தேடல் தொடர்கிறது.

புத்திசாலிகள் தங்களுக்குத் தேவையானவற்றை தாங்களே உருவாக்கிக்கொள்பவர்கள். ஆனாலும் இவர்களும் தங்களது அடிப்படை தேவைகளுக்கு சில உபகரணங்களை சார்ந்திருக்க வேண்டியிருக்கும். அந்த உபகரணங்களில் சில கனிமங்கள் பயன்படுத்தப்படும். தங்கம், வெள்ளி, லித்தியம், யுரேனியம் போன்ற கனிமங்கள் நாம் அனைவரும் அறிந்த சில உதாரணங்கள்.    

இந்நிலையில் எனது நீண்ட நாள் வாடிக்கையாளர் ஒருவர் வெளிநாட்டில் தொழில் செய்தவர். தற்போது வெளிநாடுகளில் தொழில் நிலவரங்கள் சிறப்பாக இல்லாததால் ஓரிரு ஆண்டுகள் முன்னதாக இந்திய திரும்பியவர். தற்போது இந்தியாவில் பல துறைகளில் முனைந்தும் தனது தாய் மண்ணில் தொழில் வளத்தை உருவாக்கிக்கொள்ள இயலவில்லை. தற்போது வெளி மாநிலங்களில் கனிம வளங்களை வெட்டி எடுத்து விற்கும் தொழில் செய்ய விரும்புகிறார். இத்தகைய கனிம வளங்கள் தொடர்பான தொழிலில் ஈடுபட ஜாதக அமைப்பு என்ன? என்பது குறித்து நான் அவரது ஜாதகத்தை ஆராய்ந்து கூறிய பதில்தான் இன்றைய பதிவாக வருகிறது.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

மேஷ லக்ன ஜாதகத்தில் சூரியன் உச்சம். இதனால் ஜாதகர் ஒரு நிர்வாகியாக இருப்பார். உடன் 3, 6 அதிபதி புதன் வக்கிரமாகி நிற்கிறார். இது ஜாதகர் திட்டமிடலில் தேர்ந்தவராக இருப்பார் என்பதை காட்டுகிறது. 2 ல் லாபாதிபதி சனி உச்ச சந்திரனுடன் இணைந்து நிற்கிறார். சந்திரன் 2 ல் உச்சம் பெற்றாலும் சந்திரனின் வீட்டில் கேது நின்று, கேதுவின் நிழல் சந்திரனின் மீது படிவதால் ஜாதகருக்கு உள்ளூரில் வருமானம் இல்லை. ஜீவன காரகர் சனி நீர் கிரகம் சந்திரனுடன் 2 ல் இணைந்துள்ளதால், ஜாதகர் கடல் கடந்து சென்று சம்பாதிக்க இயல்பாகவே விரும்புவார். 2 ஆமதிபதி சுக்கிரன் 12 ல் இருப்பது இதை உறுதி செய்கிறது. 2, 12 ஆகிய இடங்களை நீர் ராசியான விருட்சிகத்திலமைந்த வக்கிர குரு பார்க்கிறார். குருவும் நீர் கிரகம்தான் என்பதும் அவர் கால புருஷ 12 ஆமதிபதி என்பதும் குறிப்பிடத்தக்கது. நான்காமிட கேதுவின் நிழல் 2 ஆமிடத்தில் இருக்கும் சனி மீதும் படிவதால் ஜாதகர் பூமி தொடர்புடைய தொழில் செய்யும் அமைப்பு உள்ளது. பூமியை குறிக்கும் 4 ஆமிட கேது, பூமி காரகர் செவ்வாய் பார்த்த கேது என்பதை நினைவில் கொள்க. ஜாதகர் சனி தசை, சுக்கிர புக்தி வரை வெளிநாட்டில் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டிருந்தார். பிறகு சூரிய புக்தியில் இந்தியா திரும்பினார்.

ஜாதகரது தாசாம்ச சக்கரம் கீழே.

லக்னாதிபதி சூரியன் வெளிநாட்டை குறிக்கும் 12 ஆமதிபதி சந்திரனுடன் லக்னத்தில் இணைந்திருப்பதால் ஜாதகர் வெளிநாடு தொடர்புடைய விஷயங்களில் ஆர்வமுடையவராக இருப்பார். சுரங்கத்தொழிலை குறிக்கும் சனி லக்னாதிபதி சூரியனின் சாரம் உத்திராடத்தில் மகரத்தில் நிற்பதால் ஜாதகருக்கு சுரங்கத் தொழிலில் ஆர்வமிருக்கும். சனி தசை நடந்தால் ஜாதகர் சுரங்கத் தொழிலில்  ஈடுபடுவார். சனியை 4 ஆமதிபதியும் பூமி காரகருமான செவ்வாய் 4 ஆம் பார்வையாக குருவுடன் இணைந்து பார்க்கிறார். இதனால் ஜாதகர் வெளிநாட்டில் சுரங்கத்திலிருந்து கனிமங்களை வெட்டி எடுக்கும் தொழில் செய்தார். 1௦ ஆமதிபதி சுக்கிரன் புக்தி முடிந்ததும் சூரிய புக்தியில் இந்தியா திரும்பினார்.

தற்போது ஜாதகர் இந்தியாவில் அதே தொழிலை செய்ய விரும்புகிறார். அதுவும் தனது சொந்த மாநிலமான தமிழ்நாடு தவிர்த்து பிற மாநிலங்களில் சுரங்கத் தொழில் செய்ய விரும்புகிறார். காரணம் என்ன?. ஏன் ஜாதகருக்கு தான் பிறந்து வளர்ந்த மண் கை கொடுக்கவில்லை?. சந்திரன் தசாம்சத்தில் கேதுவின் சாரம் மகத்தில் உள்ளார். ராசிச் சக்கரத்தில் சந்திரனின் கடக ராசியில் நிற்கும் கேதுவின் நிழல் சந்திரன் மீது படிக்கிறது. ராசியின் 2 ஆமதிபதி சுக்கிரன் 12 ஆமிடத்தில் உள்ளது ஆகியவையே இதற்கு காரணம். லாபாதிபதி சனி ராசிச் சக்கரத்தில் 2 ல் சந்திரனுடன் இருப்பதால் ஜாதகர் உள்ளூரில் நல்ல லாபம் கிடைத்தால்தான் தொழில் செய்வார். ஜாதக அமைப்பு இவருக்கு வெளி தேசம், வெளி மாநிலங்களில்தான்  நல்ல லாபம் கிடைக்கும் என்று தெரிவிக்கிறது. இதனால் ஜாதகர் குறைவான லாபம் கிடைக்கும் உள்ளூரில் தொழில் செய்வதை தவிர்த்து, வெளி தேசங்களில் அல்லது வெளி மாநிலங்களில் தொழில் செய்ய விரும்புவார்.  2 ஆமிடமும், இரண்டாம் அதிபதியும் ஜாதகத்தில் பாதிக்கபடாமல், நல்ல நிலை பெற்று, தசா-புக்திகள் உள்ளூரில் தொழில் செய்ய சாதகமான அமைந்தால்தான் ஒருவர் உள்ளூரில் தொழில் செய்ய முடியும். 

இப்போது கேள்விக்கு வருவோம். ஜாதகருக்கு தற்போது வெளி மாநிலத்தில் சுரங்கத்தொழில் செய்யலாமா? என்பதே கேள்வி. இவர் இப்போதும் சனி தசையில்தான் இருக்கிறார். எனவே ஜாதகர் சுரங்கத்தொழில் செய்யலாம். உள்ளூரில் தொழில் செய்யும் அமைப்பு இல்லை என்று கூறிவிட்டோம். அண்டை மாநிலங்களில் தொழில் செய்ய மூன்றாமிடம் தொடர்புடைய புக்தி நடப்பிற்கு வர வேண்டும். தசாம்சத்தில் சிம்ம லக்னத்திற்கு மூன்றாமிடத்தில் நிற்கும் செவ்வாய்  புக்திதான் நடக்கிறது இதனால் ஜாதகர் அண்டை மாநிலங்களில் சுரங்கத் தொழில் செய்யலாம். ராசிச் சக்கரத்தில் 1௦ ல் பூமி காரகர் செவ்வாய் திக்பலம் பெற்று, உடன் ராகு அமைந்துள்ளார். இது ஜாதகருக்கு பூமியிலிருந்து கனிமங்களை வெட்டியெடுக்கும் அமைப்பு உள்ளதை குறிப்பிடுகிறது. செவ்வாய் பூமி என்றால், ராகு பூமியிலுள்ள பாறையை, கனிமங்களை குறிப்பிடும். தசாம்சத்தில் செவ்வாய் 8 ஆம் பார்வையாக 1௦ ஆமிட ராகுவை பார்ப்பதை கவனிக்க இதனால் ஜாதகர் அண்டை மாநிலங்களில் சுரங்கத் தொழில் செய்யலாம். 

ஜாதகருக்கு சனி தசை நடக்கிறது. சுரங்கத் தொழில் செய்ய இது சாதகம் என்றாலும், சனி ஒரு பணியாள் கிரகம் என்பதை அறிக. இதனால் ஜாதகர் சுரங்கத் தொழிலில் ஒரு பணியாளாகத்தான் ஈடுபட முடியும். இவருக்கு சுரங்கத் தொழிலில் பெருமளவு முதலீடு செய்யக்கூடிய   கூட்டாளியாக ஒரு முதலாளி தேவைப்படுவார். சனி தசை நடந்தாலும் ராசிச் சக்கரத்தில் சனி உச்ச சூரியனின் சாரத்தில் கார்த்திகை-2 ல் ரிஷபத்தில் இருப்பதால் ஜாதகர் தொழிலை முழுப் பொறுப்பேற்று நடத்துவார். மேஷத்தில் உச்சம் பெற்ற சூரியன் 12 ல் உச்சம் பெற்ற சுக்கிரனின் சாரமான பரணி-1 ல் இருப்பதால் தொழிலில் பெருமளவு பணத்தை முதலீடு செய்துவிட்டு கூட்டாளி வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருப்பார். ஓய்வு பாவகமான 12ல் உச்சம் பெற்று நிற்கும் சுக்கிரன் கூட்டாளி பாவகமான 7 ஆமதிபதி என்பதை அறிக. எனிவே ஜாதகர் வெளிமாநிலத்தில் ஒரு கூட்டாளியுடன் இணைந்து தொழில் செய்வார். நிர்வாகத்திற்குரிய சூரியன் லக்னத்தில் இருப்பதால் ஜாதகரே நிர்வாகத்தை கவனிப்பார். சனி ராசியிலும், தசாம்சத்திலும் சூரியன் சாரத்தில் இருப்பதால் செய்தொழிலில் நிர்வாக செலவை சமாளிக்க போராடுவார். கூட்டாளி ஜாதகர் சம்பாதித்துக் கொடுக்கும் வருமானத்தில் வெளிநாட்டில் தனது விடுமுறையை கழித்துக்கொண்டிருப்பார்.

மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: +91 8300124501.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

இல்லறம்

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனுமா?

இன்றைய நிலையில் பணத்துடன் நல்ல கல்வியும் சிறப்பான உத்யோகமுமே சொந்தங்களை தீர்மானிக்கிறது என்பது நிதர்சனம். இத்தகையவர்களுக்கு  அவர்கள் வாழ்க்கை வட்டத்தில் வந்ததெல்லாம்  சொந்தம்தான். வறுமை இந்தியாவை வளைத்துப் பிடித்திருந்த எண்பதுகள் வரை பணம் மட்டுமே

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சுரங்கத் தொழில் சுக வாழ்வு தருமா?  

இன்றைய உலகில் போருக்கான முக்கிய காரணம் ஒன்றே ஒன்றுதான். பூமியில் கிடைக்கும் எரிபொருள் அல்லது கனிம வளங்கள். இவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டால், உலக நாடுகளை எரிபொருள், கனிம தேவைகளுக்காக தங்களை மட்டுமே சார்ந்திருக்க

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

தந்தையின் தொழில்…

குடும்ப பாரம்பரியமாக ஒரு தொழிலை செய்யும்போது அதில் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் கற்றுக்கொள்ளல்களின் நேர்த்தி இருக்கும். தங்களது திறமைகளின் அடிப்படையில் தொழிலை தேர்ந்தெடுத்து அதில் பாராட்டும், பணமும் கிடைத்து மன நிறைவைவும் தந்த

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா?

திருமணக் கனவுகளில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும்  இளைஞர்கள் அனைவருக்கும் தங்கள் துணைவர் என்ன கலரில் இருப்பார் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும். கருப்பு, வெண்மை, மாநிறம், பாந்தமான முகம் என்று பலவகைத் தோற்றங்களில் மனிதர்கள் காணப்படுகின்றனர். துணைவர்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சண்டையில் கிழியாத சட்டை!

இருமனம் இணையும் திருமணம் என்பது கடவுள் போட்ட முடிச்சு என்பர். இளம் வயதில் இவ்வாசகத்தை கேட்கும்போது வீணர்களின் பேச்சு இது என்ற எண்ணம் கூட பலருக்கு வரும். அவர்களிடமே திருமண வாழ்வை ஒரு தசாப்தமாவது

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

காளி!

ஒருவரின் வாழ்வில் எத்தகைய சூழலில், என்னவித கர்மங்களில் ஈடுபடுவார் என்பவை யாவும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டவை  என்று ஜோதிடத்தில் குறிப்பிடப்படுவதுண்டு. தசா-புக்திகளும், கிரகப் பெயர்ச்சிகளும் மனித வாழ்வில் மாற்றங்களை கொண்டு வருவதை ஜாதக ரீதியாக ஆராயும்போது

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil