காலம் ஒரு இரக்கமற்ற அரக்கன் என்று கூறக் கேட்டுள்ளேன். வெயில் காலம் ரொம்ப கொடுமையாக இருக்கும். இன்னும் சில காலம் பனிக்காலத்தை அனுபவித்துக்கொள்கிறேனே என்றெல்லாம் அதனிடம் கோரிக்கை வைக்க முடியாது. அது யார் பேச்சையும் கேட்காது. எந்தப் பருவ காலமும் நிலையில்லாதது போலவே எந்த வாழ்க்கை சூழலும் நிலையில்லாது மாறிக்கொண்டே இருப்பதே. மாற்றத்தை சந்திக்காத வாழ்க்கை சுவாரஸ்யங்களற்றது. இரவும் பகலும் மாறுவது எனும் சூழலில் இன்பமும் துன்பமும் வாழ்வில் மாறி மாறி வருவதே.
இந்நிலையில் அன்பர் ஒருவர் என்னை தொடர்புகொண்டார். ஒரு முக்கிய முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் உள்ளேன். பணிபுரியும் இடத்திலிருந்து மாற்றத்தை எதிர்நோக்கி உள்ளேன். நான் செல்லவுள்ள இடத்தில் எனக்கு வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்பது துல்லியமாக தனக்குத் தெரிய வேண்டும். தனக்கு ஜாதகமும் ஓரளவு தெரியும் என்பதால் ஜாதக அமைப்பு எப்படி இருப்பினும் இடம் மாறும் நிலையில் உறுதியாக உள்ளதால் ஜாதகம் பார்க்க வேண்டாம். துல்லியமான பலன்களுக்கு பிரசன்னம், டாரட் என்று எந்த முறையை வேண்டுமானாலும் பயன்படுத்துங்கள் எனது வாழ்வின் முடிவு உங்களது பதிலை நம்பியதாக இருக்கிறது என்றார்.
கீழே கேள்விக்கான டாரட்

எந்த முறை ஜோதிட முறையானாலும் கேள்வியை அது சுட்டிக்காட்ட வேண்டும். அப்போதுதான் கேள்வி சரி. இல்லையேல் அது அர்த்தமற்ற பதிலை சுட்டிக்காட்டும். மேற்கண்ட டாரட் அட்டையில் ஒருவர் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு குடும்பத்துடன் படகில் இடம் பெயர்கிறார். கேள்வி பணியிட மாற்றத்தைப் பற்றியது. இந்த டாரட் அட்டையும் இடம் பெயர்வதை சுட்டிக்காட்டுவதால் கேள்வி கேட்டவர் உண்மையான நோக்கத்துடன் கேட்கிறார். இனி பதிலுக்கு செல்லலாம்.
படகை செலுத்தும் நபர் மகிழ்வாக இல்லாமல் வருத்தமாக செல்கிறார். இது வருத்தமுற்ற சூழலிலில் பாதிக்கப்பட நிலையில் நல்ல பணியிடம் தேடி செல்கிறார் என்பதை குறிப்பிடுகிறது. துடுப்பு அவர் செய்யும் தொழில் போராட்டங்கள் நிறைந்தது என்பதை குறிப்பிடுகிறது. குடும்பத்துடன் செல்கிறார் என்பதால் புதிய பணியிட ஊரிலேயே நிரந்தரமாக வசிக்க எண்ணுகிறார். கையிலுள்ள துடுப்பை ஆயுதமாகவும் அதிகாரத்திற்கான சின்னமாகவும் எடுத்துக்கொள்ளலாம். இது ஆயுதத்தை பயன்படுத்தி தொழில் செய்பவர் என்றும் அதிகாரமான தனிப்பொறுப்பில் பணிபுரிபவர் என்றும் கொள்ளலாம். நபர் செலுத்தும் படகில் 6 கத்திகள் தலைகீழாக ஓய்வெடுக்கும் வகையில் சொருகி வைக்கப்பட்டுள்ளன. இது இவர் பணியிடத்தில் நடத்தி முடித்துவிட்ட சண்டைகளை குறிப்பிடுகிறது. நபர் சிவப்பு வர்ண ஆடையுடன் கையில் துடுப்புடன் பயணிக்கிறார். சிவப்பு வர்ணம் ரத்தம், உயிர் பாதிப்பு போன்ற நிலையை குறிப்பிடுகிறது. ஆடையிலுள்ள பச்சை வர்ணமும் குத்தி வைக்கப்புள்ள கத்திகளும் மருந்துவம், மருந்துகள், குணப்படுத்துதல், பயிற்றுவித்தல், ஆற்றுப்படுத்துதல் என்பதுடன் சிறந்த கல்வி அறிவையும் குறிப்பிடுகின்றன. அதிக பச்சை நிறம் அதிக கல்வியறிவு. அதன் மூலம் அதிக சம்பாத்தியம். 6 கத்திகளும் 6 மாதங்களாக இவர் பணியிடத்தில் கடுமையான சூழலில் பணிபுரிந்துள்ளதையும், அடுத்த 6 மாதங்களில்தான் இவரது வாழ்வு மாறும் என்பதையும் குறிப்பிடுகிறது.
பணி மாறவுள்ள இடத்தில் எதிர்காலச் சூழல் எப்படி இருக்கும் என்பதே கேள்வி. எதிரே தெரிவது இளம் பச்சையுடன் கூடிய வெண்ணிறம். இதனால் புதிதாக மாறுதலாகி செல்லவுள்ள இடத்தில் உடனடி நற்பலன்கள் இல்லை என்பதை குறிப்பிடுகிறது. எதிரே தெரியும் இளம் மஞ்சள் நிறம் நல்ல பணவரவு அங்கு எதிர்காலத்தில் உண்டு என்பதை குறிப்பிடுகிறது. இதுவே கிளிப் பச்சையும் , அடர் மஞ்சளுமாக இருப்பின் மிகச் சிறந்த தனவரவு புதிதாக செல்லுமிடத்தில் உண்டு என்று கூறலாம். ஆனால் அணிந்திருக்கும் உடையில் உள்ள அடர் சிவப்பு வர்ணம் தற்போதைய இடத்தில் கடுமையாக உழைப்பதையும், அடர் மஞ்சள் வர்ணமும் அடர் பச்சை வர்ணமும் தற்போது பணிபுரிந்துகொண்டுள்ள இடத்தில் நல்ல சம்பாத்தியம் கிடைப்பதையும் கூறுகிறது. இதனால் இடம் மாறி செல்லவுள்ள இடம் தற்போதைய பணியிடத்தைவிட குறைவான ஊதியத்தையே தரும் என்று கூறலாம். அங்கு நல்ல சம்பாத்தியத்தை அடைய 6 மாதங்களுக்கு மேலாகலாம். ஏனெனில் எதிரே கறை தெரிகிறது என்பதால் 6 கத்திகள் என்பதை 6 மாதங்கள் என்று அனுமானிக்கலாம். கறை தெரியாவிட்டால் இதையே 6 வருடங்களாகும் என்று கொள்ளலாம்.
மேற்கண்ட ஆய்வின் அடிப்படையில் கேள்வியாளரிடம். நீங்கள் பணியிடத்தில் கடந்த 6 மாதங்கள் கடுமையாக போராட்டத்தை சந்தித்துள்ளீர்கள். ஆயுதங்களை பயன்படுத்தி பிறரது பாதிப்பை போக்கும் மருத்துவத்துடன் நீங்கள் தொடர்புடையவர். தொழிலில் துறைத்தலைவராக இருப்பீர்கள். அதில் கடுமையான சூழலாக இருந்தாலும் நல்ல சம்பாத்தியமும் உங்களுக்கு வந்துகொண்டுள்ளது. புதிதாக செல்லவுள்ள இடத்தில் பழைய ஊதியத்தைவிட குறைவான ஊதியமே கிடைக்கும். நல்ல சம்பாத்தியமான இடத்திற்கு செல்ல மேலும் 6 மாதங்களாகும். இதனடிப்படையில் வேலை மாற்றத்தை முடிவு செய்யுங்கள் என்றேன். அதற்கு வந்தவர் குறிப்பிட்டவை கீழ்க்கண்டவாறு.
“மருத்துவத் துறையில் குறிப்பிட்ட ஒரு துறையின் தலைமை பொறுப்பில் சிறப்பு மருத்துவராக உள்ளேன். தற்போது பெரியதொரு மருத்துவமனையில் நல்ல சம்பாத்தியத்தில் பணிபுரிகிறேன். மருத்துவமனையில் பணிபுரிவதொடல்லாமல் மருத்துவ மாணவர்களுக்கு பாடங்களும் எடுக்க வேண்டிய நிலையில் பணிபுரிகிறேன். காலையில் மருத்துவமனைக்கு வந்தால் வீட்டிற்கு இரவு திரும்பும் நேரம் உறுதியாக தெரியாக நிலையில் பணி நேரத்தையும், கடுமையையும் குறைக்க கடந்த 6 மாதங்களாக நிர்வாகத்திடம் போராடி பயனற்ற நிலையில் எனது உடல், மன ஆரோக்கியத்தை பேணும் பொருட்டு வேலை மாற வேண்டிய நிலையிலேயே உங்களிடம் ஆலோசனை பெற வந்தேன். நீங்கள் குறிப்பிட்டவை துல்லியமானவை. செல்லவுள்ள இடத்தில் தற்போது வாங்கும் ஊதியத்தைவிட குறைவான ஊதியம் தரவே ஒப்புக்கொண்டுள்ளனர். அவசரப்படாமல் நிதானித்து இடம் மாறுவதே நன்று என்று உங்கள் பதில் குறிப்பிடுகிறது. உங்கள் மதிப்புமிகு ஆலோசனைகளுக்கு நன்றி” என்று கூறினார்.
நன்றி இக்கலையை கற்பித்த எனது ஆசான்களுக்கு உரியவை.
மீண்டும் விரைவில் மற்றுமொரு பதில் சந்திக்கிறேன்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி: +91 8300124501
