நமது பாரதம் கடும் உழைப்பாளிகளையும் வறியவர்களையும் கொண்ட நாடு என்ற காலகட்டத்தை கொள்ளைக்கார வெள்ளையர்கள் வெளியேறிய 70 வருடங்களுக்குப் பிறகு தாண்டிவிட்டோம். இன்று நமது நாட்டில் வறுமை மிகக் குறைவு. தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களை உலகிற்கு அளிக்கும் இந்தியா இல்லாமல் தாங்கள் அதில் நிபுணத்துவம் பெற இயலாது என்ற பிரம்மிப்புடன் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகள் நம்மை பார்க்கின்றனர். உடலுழைப்பு குறைந்து புத்தியால் பொருளீட்டும் காலகட்டத்திற்கு வந்துள்ளோம். ஆனால் நம்மோடு இணைந்து சுதந்திரம் பெற்ற அண்டை நாடுகள் உலகிற்கு தீவிரவாதிகளையும் பிச்சைக்காரர்களையும் அனுப்பிக்கொண்டு இன்னும் வறுமையில்தான் வாடுகின்றன என்பது கண்கூடு. நமது இந்திய நிறுவனங்களின் உழைப்பினால் கிடைத்த லாபங்களை மேலை நாடுகளின் FII எனும் (Foreign Institutional Investors) முதலீட்டாளர்கள் தற்போதும் அபகரித்துக்கொண்டுதான் உள்ளனர். பெருமளவு முதலீடுகள் அவர்கள் கைவசம் இருப்பதால் அதன்மூலம் நமது பொருளாதாரத்தை கட்டுப்படுத்த முயல்கின்றனர். இந்நிலையை மாற்ற உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு எனும் அடிப்படையில் நாமும் பெருமளவு பங்கு வணிகத்தில் ஈடுபட்டு நமது தேசத்தின் பொருளாதாரத்தை வெளியோர் கட்டுப்படுத்த இயலாவண்ணம் செய்வது நமது தேசக் கடமை.
ஒவ்வொருவரின் பொருளாதாரத் தேவையும் வேறு வேறாக இருப்பதால் தனிப்பட்ட ஒருவரின் வயது, சம்பாத்தியம், சேமிப்பு, குடும்பச் சூழல் ஆகியவற்றை பொறுத்தே பங்கு முதலீட்டில் நாம் பங்கேற்க வேண்டும். “பங்கு வணிகம் என்பதே அவரசக் குடுக்கைகளுக்கும் பொறுமைசாலிகளுக்கும் நடக்கும் போராட்டம்” என்று கூறப்படுவதுண்டு இருவரில் யார் லாபமடைவர் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பொறுத்தார் பூமி ஆழ்வார் என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை பங்குச் சந்தையில் பொறுமைசாலிகளே லாபம் பார்க்கின்றனர் என்பது. இந்நிலையில் ஜோதிடத்தின் மூலம் எந்த நிறுவனப் பங்கு ஒருவருக்கு லாபகரமாக இருக்கும் என்று குறிப்பிட்டு சொல்ல முடியுமா? என்று பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அன்பர்கள் சமீப காலமாக கேட்கின்றனர். இவர்களுக்காக முதலீட்டு ஆலோகர்கள் சமீப காலங்களாக நிறையக் கிளம்பியுள்ளனர். ஆனால் இத்தகைய ஆலோசனைகள் அனைவருக்கும் பலனளிக்கிறதா? என்பது கேள்விக்குறி. ஏற்கனவே சில பதிவுகள் பங்குச் சந்தை பற்றி வந்த நிலையில் இன்றைய பதிவு பங்கு வணிக முதலீட்டு ஆலோசகர்களுக்கான ஜாதக அமைப்பை ஒரு உதாரண ஜாதகத்துடன் ஆராய்கிறது.
கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

கும்ப லக்னத்திலேயே லக்னாதிபதி சனி அமைந்தாலும் அவர் வக்கிரமடைந்துவிட்டதால் வலுக்குன்றித்தான் உள்ளார். இது ஜாதகர் ஜீவன விஷயத்தில் பிடிவாதமான நிலையில் இருப்பதை குறிப்பிடுகிறது. 6 ஆமதிபதி சந்திரன் 12 ல் மறைந்து 6 ஐ பார்ப்பது நன்மையே என்றாலும் கிடைத்த வேலையை தனது பிடிவாதத்தால் ஜாதகர் உதறுவதையும் இது குறிப்பிடும். இவருக்கான தொழில் அமைப்பை பார்த்தால் 1௦ ஆமதிபதி செவ்வாய் 1௦ க்கு விரையத்தில், லக்னத்திற்கு பாதக ஸ்தானமான 9 ல் அமைவது சுய தொழில் நன்மையில்லை என்பதையே குறிப்பிடுகிறது. இதனால் இவரது சம்பாத்திய அமைப்பை 1, 2, 6, 1௦ உடன் தொடர்புடைய வலுவான கிரகமே முடிவு செய்யும். இதன்படி ஜீவனகாரகரும் லக்னாதிபதியுமான சனி கெட்டுவிட்ட நிலையில், 2 ஆமிடத்தை சூரியன், குரு, புதன் ஆகியோர் பார்க்கின்றனர். இதில் புதன் தனது உச்ச வீட்டிலிருந்து பார்க்கிறார். 6 ஆமிடத்தை அதன் அதிபதி சந்திரன் 12 ல் இருந்து பார்க்கிறார். 1௦ ஆமிடத்தில் ராகு அமைந்துள்ளார். லக்ன பாகையான 10.11க்கு நெருக்கமாக ராகு-கேதுக்கள் 12.3௦ பாகையில் நிற்கிறார்கள். இது இவரது தொழிலில் ராகு-கேதுக்கள் குறிப்பிடும் நவீன மின்னணுத் தொழில் நுட்பம் தொடர்புபெறும் என்பதை குறிக்கிறது. 7 ஆமிட சுக்கிரனும் கேதுவின் மகம்-4 ல் லக்னப் பாகைக்கு நெருக்கமாக 1௦.56ல் நின்று லக்னத்தை பார்ப்பதால் ராகு-கேதுக்கள் குறிப்பிடும் மின்னணுத் தொழில் நுட்பம் சுக்கிரன் குறிப்பிடும் கணினி சார்புடையது என்பது புரிகிறது. ஜாதகர் கணினித் துறையில்தான் பணிபுரிறார். 12 ஆமிட சந்திரனின் நிலையால் வேலையை உதறுவார் என்ற அமைப்பின்படி தற்போதைய கணினி மென்பொருள் வேலையை விட்டுவிட்டு தனக்கு பிரியமான பங்கு வணிகம் தொடர்பான துறையில் ஈடுபட எண்ணியுள்ளார்.
மிதுன ராசி பங்கு வணிகத்தை குறிப்பிடும் ராசியாகும். 5, 8 ஆகிய பாவகங்கள் பங்கு வணிகத்துடன் தொடர்புடைய பாவகங்களாகும். மேற்கண்ட ஜாதகத்தில் மிதுன ராசியதிபதியும், 5 ஆமதிபதியுமான புதனே உழைக்காமல் வரும் தனத்தை குறிப்பிடும் 8 ஆமிடமான கன்னிக்கும் அதிபதியாகி அவர் உச்சம் பெற்று ஜாதக கிரகங்களிலேயே அதிக பாகை 28.17 ல் அமைந்துள்ளார். இதனால் இவரது சம்பாத்தியத்தில் உடல் உழைப்பைவிட புதன் குறிக்கும் புத்தி, ஆலோசனை, பயிற்சி ஆகியவைகளே முன்னுரிமை பெறும். இத்தொடர்பு இவரை பங்கு வணிகத்திற்கு அழைத்து வரும். பங்குச் சந்தையில் இவர் ஈடுபடுவது மற்றுமின்றி ஆலோசனை காரகர் புதன் உச்சம் பெற்றதால் ஜாதகர் பிறருக்கு வணிக ஆலோசனைகளையும் வழங்கலாம். இத்தகைய ஜாதக அமைப்பினர் SEBI நடத்தும் தேர்வில் கலந்து வெற்றி பெற்று முதலீட்டு ஆலோசகர்களாகலாம். ஆனால் இவர் வழங்குவது வேறு விதமான சேவை. அதை மேலும் விரிவாக தொழிலுக்கான வர்க்கச் சக்கரம் தசாம்சம் மூலம் ஆராய்வோம் வாருங்கள்.

கால புருஷனுக்கு பணவரவை குறிக்கும் ரிஷபமே லக்னமாகி லக்னத்துடன் ராகு கேதுக்கள் தொடர்பாகி நிற்பதால் ஜாதகர் பங்கு வணிக பரிந்துரைக்கான மென்பொருளை வடிவமைத்து தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறார். ராசிச் சக்கரத்தில் 5 ஆமிடத்தில் வலுபெற்ற புதனே தசாம்சத்திலும் 5 ஆமதிபதியாகி 1௦ ஆமிடமான கும்பத்தில் அதனதிபதி சனியுடன் இணைந்துள்ளது இத்தொழிலுக்கு சாதகமான அமைப்பாகும். 1௦ ஆமிடத்தை செயற்கை கிரகம் ராகு, லக்னாதிபதியும் மென்பொருள் காரகருமான சுக்கிரனுடன் இணைந்த 7 ஆமிட செவ்வாய் 4 ஆம் பார்வையாக பார்ப்பது இவர் பங்கு வணிக ஆலோசனைகளை வழங்கும் மென்பொருளை வடிவமைத்துத் தருவதை துல்லியமாகக் குறிப்பிடுகிறது. ராசிச் சக்கரம் போன்றே இங்கும் மனோ காரகரும் தினக்கோளுமான சந்திரன் லக்னத்திற்கு 8 ல் மறைந்து, சந்திரனுக்கு வீடு கொடுத்த லாபாதிபதி குரு நீசமாகியுள்ளதால் இவர் பிறருக்கு ஆலோசனைகள் மட்டுமே வழங்கலாம் என்பதை குறிப்பிடுகிறது. ஆனால் ஜாதகர் தினசரி வர்த்தகத்தில் ஈடுபட்டால் தோல்வியுறுவது உறுதி. 1, 7, 10 ஆகியவை ஸ்திர வீடுகளானதால் நிதானமாக நீண்டகால அடிப்படையில் ஜாதகர் தனக்கான முதலீடுகளை செய்து வரலாம்.
மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்.
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி: +91 8300124501.
