சம்பவங்கள் மூலம் பிறந்த நேரத்தை சரி செய்தல்.

ஒருவரின் பிறந்த மாதம், வருடம் தெரிந்து, பிறந்த நாள் தெரியவில்லை எனும் சூழலில் அவரது வாழ்க்கைச் சம்பவங்களின் அடிப்படையில் நஷ்ட ஜாதகம் எனும் முறையில் அவரது ஜாதகத்தை கணித்து பலன் கூறுவது ஜோதிட மரபு. எனினும் நஷ்ட ஜாதகத்தில் தசா-புக்திகளின் அடிப்படையில்  பலன் கூறுவது துல்லியமாக இருக்காது. அத்தகைய சூழலில் ஜனன கிரகங்களையும் கோட்சார கிரக நிலைகளையும் இணைத்து பலன் கூறுவது ஓரளவு சரியாக வரும். பிருகு நாடி போன்ற முறைகள் நஷ்ட ஜாதகம் மூலம் பலன் கூற சரியாக இருக்கும். ஒருவருக்கு பிறந்த நேரம் உத்தேசமாக தெரிந்திருந்தால் அதைக்கொண்டு ஜாதகரது குணாதிசயங்கள், அவரது வாழ்வில் நடந்த சம்பவங்களின்  அடிப்படையில்   அதை நேரத் திருத்தம் செய்தால் தசா-புக்திகளின்  அடிப்படையில் பலன் கூறலாம். ஏனெனில் தசா-புக்திகளின் அடிப்படையில் பலன் காண்பதே நம்பகத்தன்மை மிக்கது. பிறப்பு நேரத்தை துல்லியமாக திருத்தம் செய்ய பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன. குறிப்பாக வர்க்கச்சக்கரங்களின் பங்கு இதில் மிக முக்கியமானது. திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் நடக்கும் சம்பவங்களிலேயே மிக முக்கியமான சம்பவமாகும். இன்றைய பதிவில் ஒருவரின் திருமண காலத்தைக்கொண்டு சில நிமிட வேறுபாடு கொண்ட ஒரு ஜாதகத்தை எப்படி நேரத் திருத்தம் செய்வது என்பது பற்றி காண்போம்.

கீழே நீங்கள் காண்பது பெண்ணின் பிறந்த ஜாதகம்.

28.03.1974 ல் பிறந்த 43 வயது பெண்ணின் பிறப்பு ஜாதகம் இது. பிறந்த நேரம் மாலை 5.30 மணிக்கு மேல் 5.45 மணிக்குள். 15 நிமிட வேறுபாடு இது. 5.45 மணி வரை சிம்ம லக்னமும் அதன் பிறகு கன்னி லக்னமும் வருகிறது. இதனால் இவர் பிறந்தது சிம்மமா? அல்லது கன்னியா? என்றொரு கேள்வி எழுகிறது.  சிம்ம லக்னம் என்றால் ஜீவன காரகர் சனி லக்னத்தில் வந்து அமர்ந்துள்ளதால் ஜாதகி பணி புரிபவராக இருக்க வேண்டும். கன்னி லக்னம் எனில், லக்னத்திற்கு 12 ல் சனி அமைந்தால் வேலையில் அதிக அலைச்சலை சந்திப்பவராகவும், 12 ஆமிட சனி, 2 ஆமிடத்தை பார்ப்பதால் சரியான வேலை இன்றி குடும்பம்  வருமானத்தில் பாதிப்புகளையும்  எதிர்கொள்பவராகவும் இருக்க  வேண்டும். உண்மையில் ஜாதகி சிறப்பாக பணி புரிந்தவர். நல்ல சம்பாத்தியம் புரிந்தவர். ஜாதகியின் இக்கூற்றை வைத்து ஜாதகி சிம்ம லக்னத்தில்தான் பிறந்துள்ளார்  என்பதை  உறுதி செய்யலாம். ஜாதக கிரகங்கள் ராசி மண்டலத்தில் விளிம்பு பாகையில் அமைந்தான்றி சில நிமிட மாறுபாட்டால் அவர்கள் அமைந்த ராசியில் இருந்து மாறாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு ஜாதகரது திருமண  உறவை ஆராயப் பயன்படுவது நவாம்சமாகும். லக்னமானது தோராயமாக 2 மணிக்கு ஒரு முறை மாறும் என்றால் நவாம்ச லக்னமானது 13 நிமிடங்களுக்கு சில வினாடிகள் குறைவான நேரத்தில் மாறும். 15 நிமிட வித்தியாசம் கூறப்படுவதால் இரு நவாம்ச லக்னம் அமையும். இங்கு அவை தனுசுவாகவும் மகரமாகவும் அமைகிறது. இவ்விரண்டில் எது சரி என்று ஆராய்வோம். 

ஜாதகியின்  திருமணம் 02.09.2009 ல் நடந்துள்ளது. திருமணத்தை நடத்தி வைப்பது உயிர்க் காரகங்களுக்கு பொறுப்பு வகிக்கும் ஒற்றைப்படை பாவங்களும் அதில் அமர்ந்த கிரகங்களுமே ஆகும். இரட்டைப்படை பாவங்கள் பொருளாதாரத்தை முன்னிட்டுச் செயல்படுபவை. அவை திருமணத்தை  செய்விக்காது. ஜாதகி பிறந்தது மாலை 5.30 மணி எனில், நவாம்ச லக்னம் விருட்சிகமாகவும் 5.33 எனில் நவாம்ச லக்னம் தனுசுவாகவும் அமையும். பிறந்த நேரம் 5.30 என எடுத்துக் கொண்டு, அதாவது நவாம்ச லக்னம் விருச்சிகம் என்று எடுத்துக்கொண்டு  தசா-புக்தி ரீதியாக திருமண நாளை ஆராய்ந்தால், ஜாதகியின் திருமணம் நடந்தது ராகு தசா-சுக்கிர புக்தி சனி அந்தரம் என்று தெரிகிறது. ராகு நவாம்ச லக்னத்திற்கு 6 ல் அமைகிறது இது திருமண பாவமான 7 க்கு விரயமான இரட்டைப்படை  பாவமாகும். எனவே இது சரியாக இருக்க வாய்ப்பு குறைவு. 

இப்போது நவாம்ச லக்னம் தனுசு என எடுத்துக்கொண்டு பார்ப்போம். 5.33 க்கு தனுசு நவாம்ச சக்கரம் கீழ்க்கண்டவாறு அமையும்.

இப்போது திருமண நாளை கவனித்தால்  திருமணம் அதே ராகு தசை,  சுக்கிர புக்திதான். அந்தரம் குரு அந்தரமாக அமைகிறது. இப்போது தசாநாதன் ராகு களத்திர பாவமான 7 க்கு லாபத்தில் மேஷத்தில் இருந்து இருந்து தசை நடத்துகிறார்.  புக்தி நாதன் சுக்கிரன், முதலாவது காமத்திரிகோணம் கும்பத்தில் இருந்து புத்தி நடத்துகிறார். கோட்சார குரு நவாம்ச லக்னத்திற்கு 2ல் மகரத்திற்கு வந்து வக்கிரமான காலத்தில் திருமணம் நடந்துள்ளது. எனவே நவாம்ச லக்னம் தனுசுதான் என்று இதன் மூலம் உறுதியாகிறது. ஆனால் நவாம்சத்தில் தனுசு லக்னம்  5.45 வரை நீடிக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

நவாம்சம் திருமண பந்தத்தை கூறுவது என்றால் அதை மேலும் நுட்பமாக ஆராய ராசியை ஒன்பது கூறுகளாக்கி நவாம்சம் காண்பது போல, நவாம்சத்தை 9 கூறுகளாக்கி நவாம்ச நவாம்சம் மூலம் , அதாவது ஒரு ராசியை 81 பகுதிகளாக   பகுத்து மேலும் தெளிவாக அறியலாம். ஒரு நவாம்ச நவாம்ச சக்கரத்தின் கால அளவானது 2 நிமிடங்களுக்கும் சற்று குறைவான நேரமாகும். பிறந்த நேரம் 5.33 க்குப் பிறகு தான் என்பது  உறுதியாகிவிட்டதால் பிறந்த நேரத்தை 5.33 க்கும்  5.45க்கும் இடைப்பட்ட 5.39 என எடுத்துக் கொண்டால் நவாம்ச நவாம்சம்    கீழ்க்கண்டவாறு அமையும்.

இப்போது ஜாதகியின் திருமண நாளை ஆராய்வோம். ஜாதகிக்கு ராகு தசையில் திருமணம் நடந்துள்ளது. ராகு 4 , 9 பாவங்களோடு தொடர்பு கொண்டு தசை நடத்துகிறார். இதில் ஒற்றைப்படை பாவமான 9 வது பாவம் என்பது 7 ன் முயற்சி பாவமாகும். ராகு செவ்வாயின் வீட்டில் விருச்சிகத்தில் நின்று தசை நடத்துவதால் செவ்வாயின் இரு வீடுகளுக்கும் தனது ஆதிக்கத்தை செலுத்துவார். ராகு செவ்வாயோடு இணைந்தால் களத்திர காரகர் செவ்வாயின் காரகத்தை தனதாக்கிக்கொண்டு தனது காரகங்களை செவ்வாய்க்கு வழங்குவார். இதனடிப்படையில் ராகு தசையில் சிம்ம லக்னத்திற்கு 7 ல் நிற்கும் சுக்கிர புக்தியில் 11 ல் நிற்கும் 7 ஆம் அதிபதி சனியின் அந்தரத்தில் ஜாதகிக்கு திருமணம் நடந்துள்ளது. முன்னர் பார்த்தபடி குரு அந்தரத்தில் அல்ல. ஏனெனில் குரு இங்கு 8 ஆமதிபதி ஆகிறார்.

நவாம்சம் ஒரு ஜாதகர் மற்றும் அவரது வாழ்க்கைத்துணையின் உள்ளார்ந்த சுபாவத்தை கூறும் என்பது அனைவரும் அறிந்ததே. நவாம்ச நவாம்சம் அதை மேலும் துல்லியமாக காட்டும். இதன்படி கணவனை குறிக்கும் செவ்வாய், ராகுவுடன் இணைந்துள்ளதால், ஜாதகியின் கணவர் ராகு குறிக்கும் கணினித்துறையோடு தொடர்புடையவர். குருவும் புதனும் ராசிப்பரிவர்தனை போலவே, நவாம்ச நவாம்சத்திலும் பரிவர்த்தனையுடன் 2, 5 ஆம் பாவ தொடர்பு பெறுகிறார்கள். இதனால் ஜீவன காரகர் சனிக்கு, பரிவர்த்தனைக்கு முன் புதன் தொடர்பும், பரிவர்த்தனைக்கு பின் குரு தொடர்பும் ஏற்படுகிறது. ஜாதகி ஆசிரியையாக 17 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிகிறார். நவாம்சமும், நவாம்ச நவாம்சமும் திருமணத்தொடர்பை மட்டுமல்ல ஒருவரின் கூட்டாளிகள் மற்றும் அடிக்கடி தொடர்பு கொள்ளும் நபர்களையும் கூறும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஜீவன கார கிரகத்தோடு புதன், குரு மற்றும் இவர்களின் பாவங்கள் தொடர்பாவதால் இவரது வாழ்க்கையில் ஜீவனத்தொடர்புகள் கல்வியோடு தொடர்புடையவை என்பதை நவாம்ச நவாம்சம் தெளிவுற எடுத்தியம்புகிறது. வேலை பற்றி தசாம்சம் மூலம் ஆராயலாம் என்றாலும் பதிவின் நீளம் கருதி திருமணம் எனும் ஒரு முக்கிய சம்பவம் மூலம் ஜனன நேரத்திருத்தம் செய்வது பற்றி மட்டுமே இங்கு ஆராய்வதே நமது நோக்கம் என்ற அடிப்படையில் இதர வர்க்கச் சக்கரங்களின் மூலம் ஜனன நேரத்திருத்தம் செய்வது பற்றி பிற்காலத்தில் வேறு பதிவுகள் மூலம் ஆராயலாம்.

விரைவில் மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

கடுமை காட்டும் கிரகங்களும் கருணை காட்டுவது எப்போது?

வர்க்கங்களில் செவ்வாய்.

ஜோதிடத்தில் ஒரு கிரகம் எப்படிச் செயல்படும் என்பதை அறிய எண்ணற்ற  யுக்திகள் கடைபிடிக்கப்படுகின்றன. உதாரணமாக அஷ்டவர்க்கத்தை சொல்லலாம். ஒரு ஜோதிடர் எத்தனை யுக்திகளை கற்று வைத்துள்ளாரோ? அத்தனை துல்லியம் அவரது பலனில் வெளிப்படும். ஜோதிடத்தில்

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

பிரியாத வரம் வேண்டும்!…

“ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்” போன்ற திரையிசைப் பாடல்களை கேட்கும்போது நமது இளமை புதுப்பிக்கப்படுகிறது. சமீபத்தில் இப்பாடலை கேட்டபோது இதன் வரிகள் இன்றைய திருமண வாழ்வில் எத்தனை பாடு படுத்துகிறது

மேலும் படிக்க »
ஜாமக்கோள் ஜாலங்கள்

சரியும் சந்தையை சாதகமாக பயன்படுத்தலாமா?

இன்று வேலை, திருமணம், பொருளாதாரம் ஆகியவற்றை பற்றி ஜோதிடர்களை தொடர்புகொள்ளும் அளவுக்கு சமமாக தற்போது பங்கு வணிகம் சார்ந்தும் ஜோதிடர்களை அணுகுகின்றனர் என்பது ஆச்சரியம். முந்தைய காலங்களில் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக நீண்டகால தொடர்

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

புத்திசாலிகள் வெல்லுமிடம்!

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனிச்சிறப்பான குண நலன்கள் உண்டு. ஆனால் அவை மற்றொரு கிரகத்துடன் இணைகையில் அதற்கு குணமாறுபாடு ஏற்படும். இணையும் கிரக குணத்தையும் கிரகம் கிரகிப்பதுதான் இதற்குக் காரணம். இதில் மூன்றாவது கிரகமும்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

திருமணத்தடை பரிகாரம்.

இன்று பெரும்பாலான இளைஞர் சமுதாயத்தினருக்கு திருமணத் தடை என்பது பெரும் மன உழைச்சலைத் தருகிறது. கடந்த தலைமுறையினருக்கு அதாவது 199௦ க்கு முன் இருந்தவர்கள் நமது சமுதாயம் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைத்த காலத்தில்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

Beware of Scammers

உலகம் வேகமாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வறுமையின் பிடியில் இருந்து பலகோடி மக்களை தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியால் மீட்டெடுத்துள்ளது என உலக வங்கி பாராட்டியுள்ளது. பலதரப்பட்ட காலாச்சார வேறுபாடுகளைக்கொண்டிருந்தாலும், அடிப்படையில்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil