மாறிவரும் பணிச் சூழல்கள்!

வேலை வாய்ப்பு உலகம் தற்போது பல்வேறு மாறுதல்களை எதிர்கொண்டு வருகிறது. இந்நூற்றாண்டின் துவக்கத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை மெதுவாக இயங்கிய உலகிற்கு புத்தெழுச்சி தந்தது. அதன் காரணமாக கடின உழைப்பு உயர்வு தரும் என்ற நிலை மாறி அறிவை பிரதானமாகக்கொண்ட உழைப்பே உயர்வு  தரும் எனும் நிலை உருவானது. பல நூற்றாண்டுகளாக நமது இந்திய பொருளாதாரத்தை தாங்கிப்பிடிதிருந்த விவசாயம் பின்னுக்குத் தள்ளப்பட்டு திடீரென புகுந்த தகவல் தொழில் நுட்பத்துறை முதலிடத்தை பிடித்தது மட்டுமின்றி, விவசாயத்தை விட எண்ணிப்பார்க்க இயலாத அளவு பொருளாதார வளர்ச்சிக்கு உதவி வருகிறது. தகவல் தொழில் நுட்பத்துறையின் எழுச்சியை அறிவும், நெகிழ்த்து கொடுக்கும் தன்மையும்கொண்ட இந்தியா மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டது என்றே சொல்ல வேண்டும். அதன் காரணமாகவே வல்லரசு நாடுகளின் பல்வேறு துறைகளின் முக்கியப் பொறுப்புகளில் இந்தியர்கள் இன்றும் கோலோச்சி வருகின்றனர். நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையற்ற சீன, ஜப்பானிய அறிவு இந்திய அறிவைவிட சற்றே பின்தங்கிவிட்டது என்பது தெளிவு.  உலகின் இதர நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), ஒன்றிற்கும் இரண்டிற்குமிடையே  ஊசலாடிக்கொண்டிருக்கையில் இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 வரை சென்றது யாவரும் அறிந்ததே. உலக வளர்ச்சியில் தகவல் தொழில்நுட்ப அறிவுத்துறை பாய்ச்சிய புது ரத்தத்தால் அதிக முதலீடுகள் அதில் செய்யப்பட்டதன் விளைவாக 2G , 3G ,4G கடந்து இன்று 5G அனுபவத்தை பெற்றுக்கொண்டுள்ளோம். கணினி வந்த புதிதில் மனித வேலை வாய்ப்புகளை இது தட்டிப்பறித்துவிடும் என்று கூறியவர்கள் ஏராளம். ஆனால் அதற்கு மாறாக கணினித்துறை உலக வளர்ச்சிக்கு வித்திட்டது மட்டுமின்றி அனைத்து வகை தொடர்புகளையும் எளிதாக்கியது. தகவல் தொழில்நுட்பத்துறை உலகிற்கு நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகளை வழங்கியுள்ளது என்றாலும் நேர்மறை விளைவுகள் அதிகம். ஆனால் உலகின் போக்கு தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்தும் காரணியாக விளங்குகிறது என்றால் அது மிகையல்ல. அறிவு வலு அணைத்து வலுவையும் வெல்லும் என்பதுதான் எப்போதுமே உண்மை. உலகை பல ஆண்டுகளாக கட்டுப்படுத்தி வந்துள்ள அமெரிக்காவும், NATO கூட்டணி நாடுகளும் தற்போது வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகள் முன்னேறிச் செல்ல வழிவிட வேண்டிய கட்டாயத்திற்கு இன்று வந்துள்ளதற்கு அதுதான் காரணம். இன்றைய பதிவில் அறிவும் பொருளாதாரமும் கைகோர்த்துச் செயல்படும் இப்போதைய வேலைச் சூழல்கள் அடைத்து வரும் பாதிப்புகளின் தாக்கத்தை ஒரு உதாரண ஜாதக அலசல் மூலம் காணவிருக்கிறோம்.

கீழே ஒரு ஜாதகம்

ஜென்ம லக்னத்திற்கும் கோட்சார லக்னத்திற்குமான தொடர்பு மூலம் ஒருவரின் தற்போதய செயல்பாட்டை அறியலாம். ஜன்ம லக்னம் ரிஷபம். கோட்சார லக்னம் ஜன்ம லக்னத்திற்கு 12 ல் மேஷத்தில் அமைந்து ஜன்ம லக்னாதிபதியும் மேஷத்திலேயே அமைந்துள்ளார். ஜாதகர் தற்போது வெளிநாட்டில் வசிக்கிறார் என்பதை இது தெரிவிக்கிறது. கோட்சார  சந்திரன் விருட்சிகத்தில் அமைந்த ஜனன சனி மீது செல்கிறார். கோட்சார சனி 1௦ ஆமிடத்தில் அமைந்த ஜனன சந்திரன் மீது சென்றுகொண்டிருக்கிறார். விஷயம் வேலை தொடர்பானது என்பதை இது தெரிவிக்கும் அதே நேரம் வேலையில் மாற்றங்களையும் சுட்டிக்காட்டுகிறது. கோட்சார சனி ஜனன சந்திரனின் பாகையை இனிமேல்தான் கடக்க வேண்டும் என்பதால் மாற்றங்கள் இனிமேல்தான் வரவுள்ளது. கோட்சார சனி தனது  மூலத்திரிகோண வீட்டிற்கு வருவதாலும், ராசியாதிபதி ராசிக்கு வருவதும் ஒருவகையில்  நன்மையே. இதர ராசிகளுக்கு சந்திரன் மீது கோட்சார சனி வரும் ஜென்ம சனிக்காலம் மிகுந்த சிரமங்களை கொடுத்தாலும் சனி இந்த ஜாதகத்தில் ராசி அதிபதி என்பதால் ஜாதகரை சிரமங்களை கடந்து முன்னேற்றப் பாதையில் செலுத்துவார். ஆனால் அதற்கு கடினமான சூழல்களை கடந்துதான் ஆக வேண்டும். ஜாதகர் ஒரு இந்தியர். தான் வசிக்கும் வெளிநாட்டில் பிரபல நிறுவனம் ஒன்றில் பணி புரிகிறார். அவர் மாறிவரும் தற்போதைய 5G கால நவீன தொழில் நுட்பங்களை தொழிலாளர்களுக்கு சொல்லித் தந்து தான் பணிபுரியும் தற்போதைய நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது அவரது பணி. அதற்காகவே நவீன தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் ஜாதகருக்கு கணிசமான ஊதியம் வழங்கப்படுகிறது. ஜாதகர் தனது கடமையில் தவறினாலும் தனது நிறுவனம் வீழ்ந்தாலும் அதன் பாதிப்பு இங்கு அதிகம்.

ஒரு நிறுவனம் முன்னேற அதில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களின் ஆதரவும் தேவை. என்னதான் தொழில்நுட்ப மாற்றங்களுக்காண கல்வியை தொழிலாளர்களுக்கு போதித்தாலும் கற்பவர்களின் ஒன்றுதலும் ஈடுபாடுமே அத்தகைய நுட்பங்களால் பலனை ஏற்படுத்தும். இந்த ஜாதகத்தில் போதிப்பவர் ஜாதகர் என்றால் 7 ஆமிடம் கற்பவர் ஆகிறார். 7 ல் சனி திக்பலம் பெற்று அமைந்துள்ளார். அதனால் தொளிலாளர்கள் நேர்மையானவர்களே. அதே சமயம் 7 ல் நிற்கும் சனிக்கு 1௦ ல் சனியின் வீட்டதிபதி செவ்வாய் நின்று திக்பலத்தை தருவதுடன் செவ்வாயும் சனியும்  முறையே 4, 1௦ பார்வையில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கின்றனர். இதனால் தொழிலாளர்கள் கடினமாக முயன்றுதான் நவீன நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டிய சூழல் உருவாகிறது. 7 ல் நிற்கும் சனி தொழிலாளர்கள் நேர்மையானவர்களாக இருப்பதை சுட்டிக்காட்டினாலும் சனிக்கே உரிய மந்தத்தன்மை உள்ளவர்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. ஜோதிடத்தில் செவ்வாய் தொழிலாளர்களை மேற்பார்வை செய்யும் உயரதிகாரிகளை குறிக்கும். இங்கு சனி திக்பலம் பெறுவதால் தொழிலாளர்கள் நேர்மையும் உண்மையும் மிக்கவர்கள் என்பதன் அடிப்படையில் அவர்களின் மீது கடுமை காட்ட வேண்டிய அவசியத்தை மேற்பார்வையாளரான செவ்வாய், சனியின் 1௦ ஆம் பார்வையை பெறுவதால் இழந்துவிட்டிருப்பார். ஆனால் இது நவீன மாற்றங்களுக்கான நேரம். தொழிலாளர்களுக்கு நவீன நுட்பங்களை போராடியே ஜாதகர் சொல்லித்தர வேண்டியிருக்கும் என்பதை கோட்சார சனியை நேர் பார்வை பார்க்கும் ஜனன சிம்ம செவ்வாயின் நிலை தெளிவாக்குகிறது. கோட்சார கும்ப சனி இங்கு உயரதிகாரிகளை குறிக்கும் செவ்வாயை 7 ஆம் பார்வையாகவும், தொழிலாளர்களை குறிக்கும் ஜனன சனியை 1௦ ஆம் பார்வையாகவும் பார்க்கிறார். கோட்சார சனியும் ஜனன செவ்வாயும் ஒருவரை ஒருவர் பார்ப்பது சூழலின் தீவிரத்தை உணர்த்துகிறது. ஆனால் ஜனன சனியை கோட்சார சனி பார்ப்பதால் சனியின் அம்சமான தொழிலாளர்கள் தங்களை கடின சூழ்நிலைக்கு இடையே புதுப்பித்துக் கொள்வர். தொழிலாளர்கள் மட்டுமின்றி உயரதிகாரிகளும் மந்தமான இருக்கும் சூழலில் அவர்களிடையே மாற்றங்களை ஜாதகர் ஏற்படுத்த வேண்டும். அதனால் அவர்களது அறிவுப் பக்குவத்தின் அடிப்படையில் அவர்களுக்கு போதிக்க வேண்டியிருக்கும். லக்னத்திற்கு 1௦ ஆமிடமான கும்பத்தில் ஜனன சந்திரன் மீது கோட்சார சனி ஏற்படவுள்ள மாற்றங்களை குறிக்கிறது. கோட்சாரத்தில் அங்கு நிற்கும் புதன் தேவையான நுட்பங்களை போதிக்கவுள்ளதை  குறிப்பிடுகிறது. இவர்களுடன் கும்பத்தில் கோட்சாரத்தில் திக்பலம் பெற்று நிற்கும் சூரியன் மூலம் ஜாதகர் நிர்வாகத்தின் முழு ஆதரவையும் பெற்றுக்கொண்டிருப்பதையும் அறிய முடிகிறது.   



காலத்தின் மாற்றங்களுக்கு கலங்க வேண்டியதில்லை. காலம் பழைய வாய்ப்புகளை தட்டிவிட்டாலும் புதிய வாய்ப்புகளை அது வழங்குகிறது. இன்றைய பணியிழப்புகளுக்காக கலங்குவதை தவிர்த்து அதை தங்களை புதிப்பித்துக்கொள்ள வேண்டிய வாய்ப்புகளாக பார்ப்பவர்களை காலம் ஒருபோதும் கைவிடுவதில்லை.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501.   

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

மன்னாரு & கம்பெனி மேனேஜர்…

எனது நீண்ட நாள் வாடிக்கையாளர் ஒருவர் பெங்களூரில் மென்பொருள் துறையில் பணிபுரிபவர். வெகு நாட்களுக்கு முன் அவரது ஜாதகத்தை பார்த்துவிட்டு வேலை அமைப்புகள் சிறப்பாக உள்ளன. ஆனால் வேலையில் அடிக்கடி மாறுதல்களை ஏற்கும் அமைப்பு

மேலும் படிக்க »
Tarot

பணம் செய்ய விரும்பு.

வேகமாக உழைத்தவர்களைவிட விவேகமாக உழைத்தவர்களே விரைந்து முன்னேற இயலும் என்பது கடந்த காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திற்கும் பொருந்தும் விதியாகும். இன்று இந்தியா வளரும் நாடு என்பதியிலிருந்து   வளர்ந்த நாடு எனும் நிலையை நோக்கி வேகமாக

மேலும் படிக்க »
இல்லறம்

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனுமா?

இன்றைய நிலையில் பணத்துடன் நல்ல கல்வியும் சிறப்பான உத்யோகமுமே சொந்தங்களை தீர்மானிக்கிறது என்பது நிதர்சனம். இத்தகையவர்களுக்கு  அவர்கள் வாழ்க்கை வட்டத்தில் வந்ததெல்லாம்  சொந்தம்தான். வறுமை இந்தியாவை வளைத்துப் பிடித்திருந்த எண்பதுகள் வரை பணம் மட்டுமே

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சுரங்கத் தொழில் சுக வாழ்வு தருமா?  

இன்றைய உலகில் போருக்கான முக்கிய காரணம் ஒன்றே ஒன்றுதான். பூமியில் கிடைக்கும் எரிபொருள் அல்லது கனிம வளங்கள். இவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டால், உலக நாடுகளை எரிபொருள், கனிம தேவைகளுக்காக தங்களை மட்டுமே சார்ந்திருக்க

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

தந்தையின் தொழில்…

குடும்ப பாரம்பரியமாக ஒரு தொழிலை செய்யும்போது அதில் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் கற்றுக்கொள்ளல்களின் நேர்த்தி இருக்கும். தங்களது திறமைகளின் அடிப்படையில் தொழிலை தேர்ந்தெடுத்து அதில் பாராட்டும், பணமும் கிடைத்து மன நிறைவைவும் தந்த

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா?

திருமணக் கனவுகளில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும்  இளைஞர்கள் அனைவருக்கும் தங்கள் துணைவர் என்ன கலரில் இருப்பார் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும். கருப்பு, வெண்மை, மாநிறம், பாந்தமான முகம் என்று பலவகைத் தோற்றங்களில் மனிதர்கள் காணப்படுகின்றனர். துணைவர்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil