கங்காணி!

காவல்துறையினரை நேசமுடன் அணுகுவோர் அரிது. பக்கத்து வீட்டுக்காரரானாலும் ஒரு மன நெருடலுடன் காவலர்களுடன் பழகுவோர்தான் அதிகம். காரணம் அவர்களின் வேலை அப்படி. ஆனால் அவர்கள்தான் தவறுகளை அடையாளங்கண்டு அதை கட்டுப்படுத்தவும், கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும் வல்லமை உள்ளவர்களாக இருக்கிறார்கள். வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் காவலர்கள் உண்டு. கண்காணிப்பாளர்கள் என்று கூறுவர். கங்காணி என்பது பாமரத்தமிழ் வார்த்தை. மனசாட்சியே இல்லாத கண்காணிப்பாளர்களால் இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் நமது தமிழர்கள் அடைந்த வேதனைகளை கிராமியப் பாடல்களில் கண்ணீர் வடிய சொல்லிச் சென்றிருக்கிறார்கள். பணியிடக் கண்காணிப்பு வேறு விதம். இங்கு திறமைக்கு முன்னுரிமை. இதனால் கண்காணிப்பாளர்கள் இரண்டாம்தர ஊழியர்களாகிரார்கள். அலுவலக கண்காணிப்புகள் இன்று மின்னணுக் கண்காணிப்பு கருவிகளின் வசம் வந்துவிட்டன. அதிலும் இல்லத்தில் இருந்துகொண்டே அலுவலகத்தில் நடப்பவனவற்றை கண்காணிக்கும் செயலிகளும் வந்துவிட்டன. தொழில்கள் நவீனமாக ஆக கண்காணிப்பிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. இன்றைய  பெருந்தொழில்கள் பல தேசங்களுடன், பல்லாயிரம் கோடி முதலீட்டில் நடத்தப்படுகின்றன. போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில் அதற்கேற்ப கண்காணிப்புகளை ஏற்படுத்தி தவறுகள் நேராவண்ணம் காப்பது இன்றியமையாதது. எந்த ஒரு அமைப்பிலும் கண்காணிப்பு அமைப்புகள் நவீனமாக அமைந்திருந்தாலும் அவை செயல்படாமல் தடைபடுவது, அவற்றின் செயல்பாடுகளில் தடை ஏற்படுத்துவதும் அவ்வமைப்பு சீற்குலைய முக்கிய காரணமாக அவை  இருந்தும் இல்லாதது போல அமைந்துவிடும். கண்காணிப்பு அமைப்புகள் நவீனமாகும் காலத்திலேயே களவாடும் அமைப்புகளும் இன்று நவீனமாகின்றன. கைபேசி வழித் திருட்டுகள், இணையத் திருட்டுகள் இன்று அதிகரித்துவிட்டன. கைபேசியை இயக்கும் போதே நமது அரசின் எச்சரிக்கை அறிவுரை ஒலிக்கிறது. (நல்ல வேலை கொரானா இருமல் இல்லை). ஆனாலும் திருடனாகப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க இயலாது என்பதுதான் உண்மை. திருட்டுக்கும் கண்காணிப்பிற்கும் ஒரு நெடிய போராட்டம் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. இன்றைய மேற்குலக நாடுகளே இந்தியா உள்ளிட்ட உலகின் சாமான்ய நாடுகளின் வளங்களைத்  திருடித்தான் தங்களை வளர்ந்த நாடுகளாக அமைத்துக்கொண்டுள்ளன. பணியிடத்தில் கண்காணிப்பு அமைப்புகள் நிர்வாகத்தின் ஒரு பகுதியாகவே அமைந்திருக்கும். அல்லது நிர்வாகத்திற்கு அடுத்த இடம் அதற்கு வழங்கப்பட வேண்டும். நிர்வாகம் மதிக்கும் பணியாளர்களுக்கும் கண்காணிப்பு அமைப்புகளுக்கும் எப்போதுமே ஒரு மறைமுகப் போர் நடந்துகொண்டே இருக்கும். இன்றைய பதிவு இதைப்பற்றியதே.

மென்பொருள் நிறுவனம் ஒன்றில் இணைய பாதுகாப்பை (Cyber Security) கையாளும் அன்பர் ஒருவர் பணியிட சம்பவங்கள் மனதை வருத்துவதாக புலம்பலுடன் என்னை அணுகினார். பணிச் சூழலால் வேறு நிறுவனம் மாற உள்ளதாகவும், அப்படி மாறுவது தனக்கு சாதகமா? அல்லது பாதகமா? என்பது அவரது கேள்வி. இக்கேள்விக்காக பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னமே கீழே நீங்கள் காண்பது.

ரிஷப உதயம். உதயம் மாற்றத்தின் காரகர் சந்திரனின் ரோஹிணி நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. இது கேள்வியாளர் மாற்றத்தை எதிர்பார்ப்பதை உறுதி செய்கிறது. உதயத்தில் 8 ஆமதிபதி குரு நிற்க, அவமான ஸ்தானமான 8 ஆமிடத்திலும் அதே குரு நிற்கிறார். இது கேள்வியாளர் தன்னை பணியிடத்தில் அவமானப்படுதுவதாக உணர வைக்கிறது. 1௦ ஆமிட சனி கும்பத்தில் எட்டாமதிபதி குருவின் பூரட்டாதியில் நிற்பதும் இதை உறுதி செய்கிறது. ஆரூடம் 8 ஆமிடத்திலேயே உதயாதிபதி சுக்கிரனின் பூராடத்தில் அமைந்துவிட்டதால், கேள்வியாளர் தன்னை அவமானமாக உணர்வது புரிகிறது. கவிப்பு 7 ஆமிடம் விருட்சிகத்தில் சனியின் அனுஷத்தில் அமைந்துள்ளதால் பணியை முன்னிட்ட பாதிப்பு, அவமானம் கேள்வியாளருக்கு ஏற்பட்டுள்ளது புரிகிறது. இப்போது கேள்வியாளரின் கேள்விகளுக்கு பதில் சொல்லுமுன் கேள்வியின் பின்னணியை தெளிவாக ஆராய்ந்துவிட்டு பதில் கூறுவது, பிரசன்னம் கேட்க வந்தவருக்கு உபயோகமானதாக இருக்கும்.

ரிஷப உதயம் ஸ்திர உதயமாகும். உதயம் சந்திரனின் ரோஹிணியில் அமைந்து உதயத்தை நோக்கி சந்திரன் வருவதால், கேள்வியாளருக்கு ஒரு மாற்றம் காத்துள்ளது. இதனால் அவருக்கு வேலையில் மாறுதலுடன் ஸ்திரத் தன்மையும் கிடைக்கும். இந்த ரிஷப உதயத்திற்கு, 6 ஆமிடம் துலா ராசியே உதயத்தின் மற்றொரு வீடாக அமைவது கேள்வியாளரின் செயல்களே அவருக்கு எதிர்ப்புகளையும் உருவாக்கும் என்பதே ஆகும். ஆரூடம் கேள்விக்கான காரணத்தை தெளிவாகக் சுட்டிக்காட்டிவிடும். தனுசு ஆரூடமும், ஆரூடாதிபதி குருவும் அங்கு நிற்கும் புதனும் சுக்கிரனின் பூராடத்தில் நிற்பதால், சுக்கிரனின் காரகமான பெண்களே கேள்வியாளர் அவமானமாக தன்னை உணர காரணம். ஏனெனில் 6 ல் நிற்கும் புதனே, 8 ஆமிடத்திலும் நிற்கிறார். 6 ஆமிடம் வேலையையும், 8 ஆமிடம் அவமானத்தையும், சுக்கிரன் சாரம் பெற்ற புதன் கணினியை கையாளும் பெண்ணையும் குறிப்பிட்டால், தனுசில் அமைந்த குரு மெத்தப்படித்த, நல்ல சம்பாத்தியம் பெறும் பெண்களையும் குறிப்பிடும்.

கேள்வியின் பின்னணியில் உச்ச நீசக் கிரகங்கள் இயங்கிக்கொண்டிருக்கும். மேற்கண்ட பிரசன்னத்தில் ஜாமச் சுக்கிரன் கன்னியில் செவ்வாயின் சாரத்தில் நீசம். அதாவது உதயாதிபதியே 6 ஆமதிபதி என்பதால் கேள்வியாளரும், எதிரியும் கோபக்காரர்கள். ஆனால் எதிரியை குறிக்கும் 6 ஆமிடத்தில் நிற்கும் புதன், 5 ஆமிட நீச சுக்கிரனுடன் பரிவர்த்தனையாவது கேள்வியாளரை  எதிர்க்கும் பெண்மணி, தனது வேலையை மாற்றி செய்கிறார் என்பது புரிகிறது. அதாவது வேலையை பார்க்க வேண்டிய நேரத்தில், தனது விருப்பச் செயல்களை செய்கிறார் என்பதை பரிவர்த்தனை புலப்படுத்துகிறது. அதே சமயம் உதயாதிபதியே 6 ஆமதிபதியுமாவதால் எதிர்ப்பாளர் செய்யும் செயல்களை உதயாதிபதியும் அறிகிறார் என்பதை இவ்வமைப்பு காட்டுகிறது. 

உதயத்திற்கு 2 ஆமிடத்தில் சந்திரனும், செவ்வாயும் அமைந்திருப்பதிலிருந்து கேள்வியாளர் பணி விதிகளுக்கு மாறாக பிறர் செயல்படுவதை அறிந்தால் கடுமையாக எச்சரிப்பவர் என்பதையும் காட்டுகிறது. இது எதிரிக்கு மோசமானதாகும். இதனால் பாதிக்கப்படும் எதிரி கேள்வியாளரின் கண்காணிப்பை மீறி செயல்பட முடியாத நிலையில், கேள்வியாளர் தன்னை மோசமான வார்த்தைகளால் புண்படுத்துவதாக அவர் மீது குற்றச் சாட்டுகளை வைக்கிறார். உண்மையும் அதுவேதான். சுக்கிரன் துலாத்தில் புதனுடனான பரிவர்த்தனைக்குப் பிறகு சந்திரனுடன் இணைவதால் கேள்வியாளர் மீது குற்றம் சாட்டும் பெண்ணிற்கு வயதான ஒரு பெண்ணும் ஆதரவாக இருப்பார். புதன் பரிவர்த்தனைக்குப் பிறகு தன் வீட்டிற்குச் சென்று உச்சமாகிறார். இதனால் புதன் குறிக்கும் இளம் வயதுப் பெண் ஒருவர் கேள்வியாளர் மீது குற்றம் சாட்டும் பெண்ணிற்கு ஆதரவாக நின்றாலும், அவர் நிறுவன விதிகளின்படி செயல்படவே விரும்புவார். காரணம் பரிவர்த்தனையால் உச்சமாகும் புதன் சட்ட திட்டங்களை குறிக்கும் கேதுவுடன் இணைவதுதான்.

மேற்கண்ட விஷயங்களை ஆராய்ந்துவிட்டு கேள்வியாளரிடம், பணியிடத்தில் விதிகளுக்கு புறம்பாக செயல்பட நினைக்கும் ஒரு பெண்ணால்தான் உங்களுக்கு அவமானம். அப்பெண்மணிக்கு ஒரு வயதான பெண்ணும் உதவுகிறார். இணைய மேற்பார்வையாளராக பணிபுரியும் நீங்கள் இதை கண்டிப்பதுதான் பிரச்சனைக்குக் காரணம். இதுதான் உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணி. அதை நிறைவேற்றத் தவறினால் உங்கள் வேலை பறிபோகும். உரிய காரணத்தை நிர்வாகத்திடம் எடுத்துச் சொல்லி உங்கள் மதிப்பை மீட்டெடுக்கலாம். இதற்காக பணி மாறவேண்டிய அவசியமில்லை என்று கூறினேன். அதற்கு கேள்வியாளர் நீங்கள் கூறுவது உண்மையே என்றும். இருவரும் பெண்கள் என்பதால் தன்மீது தேவையற்ற குற்றச் சாட்டுகளை வைப்பதாகவும், எனினும் தான் அவர்களை எச்சரித்ததையும் பதிவுகளாக நிர்வாகத்திடம் காட்டியதாகவும்,  நிர்வாகம் அதற்காக வருத்தபட்டாலும், உயர்நிலைப் பணியாளர்களான அவ்விருவரையும் முழுமையாக கண்டிக்காமல் இருப்பதால் தனக்கு மன உழைச்சல் என்றார். ஆனால் நிர்வாகம் தனது பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தனக்கு பணி நிரந்தரமும், ஊதிய உயர்வையும் தரவுள்ளதாகவும் கூறினார். ஆனால் இவ்வகை பாதிப்புகளை எப்படி எதிர்கொள்வது என்றும் வினவினார். வேலையில் விதிகளுக்கு மாறாக செயல்படுபவர்கள் மீது தயவு தாட்சண்யம் பார்த்தால் எந்த நிறுவனத்திலும் உங்களால் பணிபுரிய முடியாது என்று கூறி அவரை சமாதானப்படுத்தினேன்.  

“உலகில் அனைவரையும் சிரிக்க வைக்க வேண்டுமென்றால் கோமாளி வேஷம்தான் போடவேண்டும். கண்காணி தனது பணியை சரியாகச் செய்யாவிட்டால் கோமாளிவிடுவான்”  

மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

வெளிநாட்டு வேலைக்கு வருட கிரகப் பெயர்ச்சிகளால் பாதிப்பு வருமா? 

தற்போதைய உலகளாவிய சூழல்களில் வெளிநாட்டில் பணிபுரிந்துகொண்டிருக்கும் அன்பர்களுக்கு தங்கள் வேலையை தக்கவைத்துக்கொள்ள முடியுமா? என்பது கவலைக்குரிய விஷயமாகவுள்ளது. வருடாந்திர கிரகப் பெயர்ச்சிகள் பொதுவாக அனைவர் வாழ்விலும் மாறுதல்களைக் கொண்டுவரும் பொதுவான நிகழ்வுகளே. இந்நிகழ்வுகள் தற்காலிகமானவையா?

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு…

அடித்தட்டு மக்கள் பணம் சம்பாதிக்க நாய் படாத பாடு படுகிறார்கள் என்றால், தனவந்தர்கள் பணத்தை வைத்து அடிக்கும் கூத்துக்களை பார்த்தால் சில நேரங்களில் அட கொடுமையே என்று இருக்கும். சமீபத்தில் என்னிடம் ஒரு அன்பர்

மேலும் படிக்க »
சந்திரன்

ஜாதகம் சரியானதா?

கால்குலேட்டர் வந்த பிறகு கணக்குப் போடுவது மறந்துவிட்டதா? என்றால் அதில் ஓரளவு உண்மையும் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. பெரும்பாலோருக்கு வாய்ப்பாடுகள் மறந்துவிட்டிருக்கும்.  இன்று கூகிள் ஜெமினி போன்ற கைபேசி சேவகர்கள் வந்துவிட்ட பிறகு

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

மூன்றாமிடமும் காமமும்!

பல்வேறு ஊர்களில் இருந்து என்னை தொடர்புகொள்ளும் மனிதர்களை அவர்களது ஜாதகங்கள் மூலம் படிக்கிறேன் என்றால் அது மிகையல்ல. நம் பார்வையில் கடந்து செல்லும் பல மனித முகங்களில் ஒரு சிநேகப் புன்னகையை நாம் கண்டாலும்

மேலும் படிக்க »
கல்வி

நீச புதன் மருத்துவராக்குமா?

ஒரு கிரகத்தின் செயல்பாடு அதை மட்டும் சார்ந்திருப்பதில்லை. அதனோடு தொடர்புடைய பல்வேறு காரணிகளை ஆராய்ந்தே அதன் செயல்பாட்டை அறிய இயலும். உதாரணமாக ஒரு  கிரகம் ஜாதகத்தில் சாதகமற்ற நிலையில் இருந்தாலும்கூட அது நின்ற ராசி,

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

நிலாச் சோறு!

வாழ்வில் சில விஷயங்கள் நமக்கு எளிதில் வாய்த்துவிடும். சில விஷயங்கள் நம்மைத் தேடி வரும் என்று கூடச் சொல்லலாம். சில விஷயங்கள் எவ்வளவு தேடிச் சென்றாலும்  கிடைக்காமல் நம்மை ஏங்க வைத்துவிடும். கல்வி, வேலை,

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil