மனைவிக்கு தேர்தல் வெற்றி வாய்ப்பு எப்படி?

தான் சார்ந்துள்ள அரசியல் கட்சி , நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தனக்கு வாய்ப்பு வழங்கும் என்று ஆவலோடு காத்திருந்த தொண்டர் ஒருவர், குறிப்பிட்ட தொகுதி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதை எண்ணி ஏமாற்றமடைந்தார். எனினும் தன் முயற்சியில் முற்றும் தளராத விக்கிரமாதித்தன் கதையாக, தனக்கு பதில்  தனது மனைவியை தேர்தலில் நிறுத்தலாம் என்று எண்ணினார். நமக்குத்தேவை “அரசியலில் “சம்பாதிக்க” ஒரு வாய்ப்பு, அது மனைவி மூலம் வந்தால் என்ன என்பது அவரது எண்ணம். அவரது கேள்விகள் இரண்டு. முதலாவது,, தனது மனைவிக்கு தேர்தல் வெற்றி வாய்ப்பு எப்படி?. இரண்டாவது  தேர்தலுக்காக ஒரு கணிசமான தொகையை செலவு செய்ய வேண்டியுள்ள தற்போதைய அரசியல் சூழலில், செலவு செய்யும் தொகையை சம்பாதிக்க முடியுமா? என்பதே.  இதில் என்ன வேடிக்கை என்னவென்றால், வந்தவர் தனது பிறந்த நாளை மட்டும் உத்தேசமாக தெரிந்து வைத்திருந்தார். அவரது மனைவிக்கு  ஜாதகமே இல்லை. இந்த சூழலில் இக்கேள்வியை அணுகுவது பிரசன்னத்தின் மூலம்தான் இயலும். இங்கு நாம் ஜாமக்கோள் பிரசன்னத்தின் மூலம் இக்கேள்விக்கான பதிலை ஆராய்வோம். 

பிரசன்னனம் ஜாதகரின் எண்ணத்தை சுட்டிக்காட்டுகிறதா? என முதலில் காண்போம்.

உதயத்தில் சந்திரன் செவ்வாயுடன் பரிவர்த்தனை ஆகியுள்ளது. இது மற்றொருவரின் வாய்ப்பு ஜாதகிக்கு இடம் மாறி வந்துள்ளதை   உறுதி செய்கிறது. ஆதாவது நண்பர், தான் எதிர்பார்த்த வாய்ப்பை மனைவி மூலம் அடைய எண்ணுகிறார். பரிவர்த்தனை உதயாதிபதிக்கும் அரசியல் பாவாதிபதி 9 ஆமதியோடும் ஏற்படுவதால் கேள்வியை இது தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. சனி-சந்திர தொடர்பே பொது  மக்கள் சேவையை குறிக்கும். இதனால் கேள்வியாளருக்கு அரசியல் மூலம் பொதுச் சேவை செய்ய வாய்ப்பு வந்துள்ளது. சூரியன் உதயத்திற்கு 1௦ ஆமதிபதியாகி, அடித்தட்டு மக்களை குறிக்கும் சனியோடு இணைவது கேள்வியாளரின் அரசியல் நோக்கத்தை  வெளிப்படுத்துகிறது.  

இப்போது ஜாதகரின் போட்டிச் சூழலை ஆராய்வோம்.

உதயாதிபதி செவ்வாய்க்கு இரு சனி பார்வையும் இருப்பதால், கேள்வியாளரின் அரசியல் தொடர்பில் கருப்பு மற்றும் சிவப்பு வண்ண தொடர்பு இருக்கும்.  உதய சந்திரனும் மகர சனியும் நட்சத்திர பரிவர்த்தனையில் உள்ளனர். இதனால் பரிவர்த்தனைக்கு பிறகு சனியின் தொடர்பு விருட்சிகத்திற்கு வருகிறது. அதே சமயம் கடக செவ்வாய் , பரிவர்த்தனைக்குப் பிறகு விருட்சிகத்திற்கு வந்து அங்கு நட்சத்திர பரிவர்த்தனையில் வந்தமர்ந்த சனியோடு தொடர்புகொள்கிறார். இதனாலும் கேள்வியாளரின் அரசியல் கட்சி தொடர்பில் கருப்பு சிவப்பு வண்ணம் இருக்கும். விருட்சிக உதயத்தில் கேது இருப்பதால், கேள்வியாளருக்கு ஒரு இயக்கம் சார்ந்த  தொடர்பு இருக்கும். திடீர் எண்ணத்தில் வந்த அரசியல் ஆசை அல்ல இது என்பது தெளிவாகிறது.  ஆரூடம் போட்டியைக் குறிக்கும் 6 ஆமிடத்தில் சூரியனின் நட்சத்திரத்தில் நிற்பது கேள்வியாளரின் நோக்கத்தை உறுதி செய்கிறது. கவிப்பு, உதயத்திற்கு 3ல்   அரசாட்சியை குறிக்கும் சூரியனின் உத்திராடத்தில் நிற்பது, கேள்வியாளரின் அரசியல் முயற்சியை தெரிவிக்கிறது.

இப்போது கேள்விக்கான பதிலை பார்க்கலாம். 

அரசியல்  தொடர்பை குறிக்கும் பாவம் 9 ஆம் இடமாகும். ராசியில் தனுசு ஆகும். கிரகங்களில் சூரியன், சந்திரன், குரு, செவ்வாய் ஆகியவை அரசியலின் முக்கிய கிரகங்களாகும். சுக்கிரன் எதிர்க்கட்சி தலைமையை குறிக்கும் கிரகமாகும். இந்த பிரசன்னத்தில் உதயம் கால புருஷனின் 8 ஆமிடத்தில் அமைகிறது. இது அரசியல் வெற்றி பாவம் 9ன் விரைய பாவமாகும். உதயம் பரிவர்த்தனையில் இருந்தாலும், பரிவர்த்தனை பாதக பாவத்தோடு தொடர்பாவதால் கேள்வியாளர் பாதிப்பை அடைவதை இது குறிக்கிறது. இரு  நீச கிரகங்கள் பரிவர்த்தனை ஆவது, இதர பரிவர்த்தனையை விட சிறப்பான பலனை தரும் என்றாலும், பாதக ஸ்தானத்தோடு பரிவர்த்தனை பாதிப்பையே தரும். பொது மக்கள் செல்வாக்கை குறிக்கும் இரு சனியும் கவிப்போடு தொடர்பாவது கேள்வியாளருக்கு மக்கள் செல்வாக்கு கிடைக்காது என்பதை குறிக்கிறது. ஒரே கிரகம் உள்வட்டதிலும் வெளி வட்டத்திலும் நிற்பது அதன் காரக பலனை அனுபவிக்க விடாது என்பதற்கேற்ப, கேள்வியாளருக்கு பொதுமக்கள் அதரவு தரமாட்டார்கள் என்பதை இது குறிக்கிறது. கவிப்போடு தொடர்புகொண்ட சனியின் நட்சத்திரத்திலேயே  ஜாம உதயாதிபதி பரிவர்த்தனைக்கு முன்னும் பின்னும் அதாவது பூசம்-அனுஷத்தில் அமைவது கேள்வியாளர் துணிச்சலாக செயல்படுவதை குறித்தாலும், பாதிப்பு அடைவதையும் அது குறிக்கிறது. கவிப்பு அரசாங்கத்தை குறிக்கும் சூரியனின் சாரத்தில் நின்று சூரியனோடு இணைந்திருப்பது, அரசு வகையில் கேள்வியாளருக்கு நன்மை ஏற்பட வாய்ப்பில்லை என்பதை குறிக்கிறது. உதயம் அடுத்து ஜாம பாதகாதிபதியான சந்திரனை நோக்கித்தான் செல்கிறது. அடுத்து சனி, கவிப்பு ஆகியவற்றோடு தொடர்கிறது. எனவே கேள்வியாளர் தற்போதைய நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்பதை தெரிவித்தோம். 

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

Tarot

பணம் செய்ய விரும்பு.

வேகமாக உழைத்தவர்களைவிட விவேகமாக உழைத்தவர்களே விரைந்து முன்னேற இயலும் என்பது கடந்த காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திற்கும் பொருந்தும் விதியாகும். இன்று இந்தியா வளரும் நாடு என்பதியிலிருந்து   வளர்ந்த நாடு எனும் நிலையை நோக்கி வேகமாக

மேலும் படிக்க »
இல்லறம்

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனுமா?

இன்றைய நிலையில் பணத்துடன் நல்ல கல்வியும் சிறப்பான உத்யோகமுமே சொந்தங்களை தீர்மானிக்கிறது என்பது நிதர்சனம். இத்தகையவர்களுக்கு  அவர்கள் வாழ்க்கை வட்டத்தில் வந்ததெல்லாம்  சொந்தம்தான். வறுமை இந்தியாவை வளைத்துப் பிடித்திருந்த எண்பதுகள் வரை பணம் மட்டுமே

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சுரங்கத் தொழில் சுக வாழ்வு தருமா?  

இன்றைய உலகில் போருக்கான முக்கிய காரணம் ஒன்றே ஒன்றுதான். பூமியில் கிடைக்கும் எரிபொருள் அல்லது கனிம வளங்கள். இவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டால், உலக நாடுகளை எரிபொருள், கனிம தேவைகளுக்காக தங்களை மட்டுமே சார்ந்திருக்க

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

தந்தையின் தொழில்…

குடும்ப பாரம்பரியமாக ஒரு தொழிலை செய்யும்போது அதில் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் கற்றுக்கொள்ளல்களின் நேர்த்தி இருக்கும். தங்களது திறமைகளின் அடிப்படையில் தொழிலை தேர்ந்தெடுத்து அதில் பாராட்டும், பணமும் கிடைத்து மன நிறைவைவும் தந்த

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா?

திருமணக் கனவுகளில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும்  இளைஞர்கள் அனைவருக்கும் தங்கள் துணைவர் என்ன கலரில் இருப்பார் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும். கருப்பு, வெண்மை, மாநிறம், பாந்தமான முகம் என்று பலவகைத் தோற்றங்களில் மனிதர்கள் காணப்படுகின்றனர். துணைவர்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சண்டையில் கிழியாத சட்டை!

இருமனம் இணையும் திருமணம் என்பது கடவுள் போட்ட முடிச்சு என்பர். இளம் வயதில் இவ்வாசகத்தை கேட்கும்போது வீணர்களின் பேச்சு இது என்ற எண்ணம் கூட பலருக்கு வரும். அவர்களிடமே திருமண வாழ்வை ஒரு தசாப்தமாவது

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil