புத்திசாலிகள் வெல்லுமிடம்!

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனிச்சிறப்பான குண நலன்கள் உண்டு. ஆனால் அவை மற்றொரு கிரகத்துடன் இணைகையில் அதற்கு குணமாறுபாடு ஏற்படும். இணையும் கிரக குணத்தையும் கிரகம் கிரகிப்பதுதான் இதற்குக் காரணம். இதில் மூன்றாவது கிரகமும் இணைகையில் அதன் தனித்துவமான குணம் முதலிரு கிரக குணத்தையும் மாற்றியமைத்துவிடும். உதாரணமாக ஜீவனத்திற்கும் ஏழ்மைக்கும் உரிய சனி கௌரவம், மதிப்பிற்குரிய குருவோடு இணைகையில் மதிப்பான, கௌரவமான நிலைக்கு ஜாதகரின் ஜீவன வகையை மாற்றிவிடும். அதே சமயம் ஜாதகருக்கு குடும்பம், புத்திர வகையில் தடை, தாமதமேற்படும். இங்கு சனியின் ஜீவன வகை குருவின் மதிப்பிற்கு மாறும். குருவின்  குடும்பம், கௌரவம் ஆகியவை  சனியின் தாமதத்திற்கு  உள்ளாகும். ஒரே ராசியிலமைந்த கிரக சேர்க்கைகளில் இதர கிரகங்களைவிட அதிக பாகையில் நிற்கும் கிரகம் தன்னுடன் இணைந்த மற்ற கிரகங்களை ஆளுமை செய்யும் கிரகமாக செயல்படும். ஆனால் அது வக்கிரமடைந்துவிட்டால் அதன் ஆளுமையை ராகு-கேதுக்கள் தவிர இதர கிரகங்கள் ஏற்காது. மேலும் அக்கிரகம் சூரியனுடனான இணைவில் அஸ்தங்கமடைந்திருப்பின் தனது ஆளுமையை இழந்துவிடும். ஆனால் அது ஆட்சி, உச்சமடைந்திருப்பின் அஸ்தங்க தோஷத்தை மீறிச் செயல்படும். இரு கிரகங்கள் இணைவில் ஒரு தோஷமான அமைப்பை அவற்றுடன் இணையும் அல்லது பார்க்கும் கிரகம் மாற்றியமைத்துவிடும். அதேபோல சாதகமாகத் தெரியும் இரு கிரக இணைவு யோகம் அவற்றுடன் இணையும் அல்லது பார்க்கும் பிற கிரகங்களால் செயல்படாமல் போவதும் உண்டு. இப்படி கிரக இணைவினால் ஏற்படும் குண மாறுதல்கள் ஒரு ஜாதகரின் வாழ்வில் ஏற்படுத்தும் விளைவுகளை ஒரு உதாரண ஜாதகம் மூலம் ஆராய்வதே இன்றைய பதிவு.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

கும்ப லக்னத்தில் 6 ஆமதிபதி சந்திரன் ரிஷப சனியின் 1௦ ஆம் பார்வையில் அமைந்துள்ளார். இவரது ஜாதக இயல்புப்படி செய்தொழில் எதுவாகினும் அதில் மன அழுத்தங்கள். ஏற்படும். மனநிலையை குறிப்பிடும் 5 ஆம் பாவகத்துடன் ராகு-கேதுக்கள் தொடர்புகொள்வது தோஷமென்றாலும் 5 ஆமதிபதி புதன் 8 ல் உச்சம் பெற்றிருப்பதாலும், 5 ஆமிடத்திற்கு குரு பார்வை கிடைப்பதாலும் ஜாதகர் மன அழுத்தங்களை சமாளிக்கும் திறன் படைத்தவராக இருப்பார். அதனால் கடுமையாக பாதிக்கபடமாட்டார். பொதுவாக உபஜெய ஸ்தானமான 6 ஆமதிபதி  லக்னத்தில் அமைந்தால் ஒருவருக்கு போராட்ட குணமிருக்கும் என்றாலும், இங்கு மனோ காரகர் சந்திரனே 6 ஆமதிபதியாகி லக்னத்தில் அமைந்துள்ளதால் ஜாதகருக்கு போராட்ட குணமும் மன உறுதியும் மிக அதிகம்.

சூரியன், செவ்வாய் சேர்க்கை ஒரு ஜாதகருக்கு கோபம், கௌரவம் என்ற வகையில் பாதிப்புகளை ஏற்படுத்தும். இவ்விரு கிரக இணைவு பெற்ற ஜாதகர்கள் எந்த உறவையும், எவ்வளவு பெரிய வேலையையும் கடுமையான சூழலை எதிர்கொள்ள முடியாமல் உதறிவிடும் இயல்பினராவர். ஆயுள், அவமானம், விபத்து போன்ற கடுமையானவற்றை குறிப்பிடும் 8 ஆம் பாவகத்தில் சூரியன், செவ்வாய் சேர்க்கை ஏற்பட்டிருப்பதால், இவர்களுக்கு தங்கள் தன்மானத்தை பற்றிய பயம் எப்போதும் இருக்கும். அப்படியானால் கௌரவம் பார்ப்பது தவறா என்றால், தங்கள் மதிப்பிற்கு சவால்விடும் சூழ்நிலைகளை எதிர்கொள்ள இயலாதவர்கள் இவர்கள் என்பதே சரியாக இருக்கும். இக்கிரகச் சேர்க்கையில் சூரியன் முன்னிலை பெற்றாலும் செவ்வாய் முன்னிலை பெற்றாலும் பெரிய வித்தியாசமிருக்காது. உணர்வுப் பூர்வமாகச் சீண்டிவிட்டு ஒரு புத்திசாலி எளிதாக இக்கிரக்கச் சேர்க்கை உள்ளவர்களை வீழ்த்திவிடுவதை அனுபவத்தில் காணலாம். இன்றைய கார்பரேட் உலகில் பணியாளர்களின் உணர்வுகளை (Emotional Intelligence) மனிதவளத்துறையில் பணிபுரிவோர் கணக்கிட்டு வைத்திருப்பர். தேவைக்கேற்ப அவர்களை பணிசூழலில் கையாள அது உதவும். குறிப்பாக ஆட்குறைப்பு காலங்களில் பணியாளர்கள் மீதே தவறுகளை ஏற்படுத்தி அவர்களாக வேலையை விட்டு விலகும்படி செய்ய இன்று இவை உதவுகிறது. மேலை நாடுகளில் இனப்பாகுபாட்டில் இது ஏற்படுத்தும் தாக்கத்தை உணரலாம். மேற்சொன்ன சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்ற ஜாதகர்கள் விஷயங்களை உணர்வுப் பூர்வமாக  அணுகினால், இவர்களைவிட மேம்பட்ட ஜாதகர்கள் அவற்றை அறிவுப் பூர்வமாக அணுகுவர். உணர்வுப்பூர்வமானவர்களைவிட அறிவுப்பூர்வமானவர்களுக்கு முன்னனுமானிக்கும் திறன் அதிகம்.

சூரியன், செவ்வாய் சேர்க்கை பொதுவாக கேந்திரங்களில் அமைவது விரும்பத்தக்கது. குறிப்பாக இவை திக்பலம் பெறும் தசம கேந்திரத்தில் இதர பாவ கிரகங்களான சனி, ராகு-கேதுக்கள் தொடர்பற்று அமைந்திருப்பது சிறப்பானது. சூரியன், செவ்வாயின் ஆட்சி, உச்ச வீட்டில் அமைந்திருப்பின் சுய தொழில் செய்பவர்களாக அல்லது அடுத்தவர்களை அதிகாரம் செய்யும் தலைமைப் பொறுப்பில் பணிபுரிவதை காண முடிகிறது. அவமான ஸ்தானமான 8 ஆமிடத்தில் சூரியன், செவ்வாயின் இணைவு 8 ஆமிட தொடர்புடைய தசா-புக்திகளில் கடும் விளைவுகளை ஏற்படுத்துகிறது. மேற்கண்ட ஜாதகத்தில் இவையிரண்டும் 8 ல் அமைந்திருப்பதால் பாதிப்பு அதிகம். சூரியன்-புதன் சேர்க்கை புத-ஆதித்ய யோகமென்று போற்றப்படுகிறது. கவனிக்க பெயரிலேயே புதனுக்கு இந்த யோகத்தில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. புத்தியிருப்பவருக்கே அதிகாரம் என்பதே இதன் பொருள். சூரியனுக்கு சமமாக ஜோதிடம் வரையறுத்துள்ள ஒரே கிரகம் புதன் மட்டுமே. புதனும் சூரியனும் இதர ஸ்தானங்களில் அமைவதைவிட 1, 4 , 8 ஆகிய இடங்களில் அமைந்தால்தான் புத-ஆதித்ய யோகம் சிறப்பாகச் செயல்படும் என்று நூல்கள் குறிப்பிடுகின்றன. 8 ஆமிடம் அவமானம் என்பது ஒரு புறமிருக்க அது occult Knowlendge எனும் ஆராய்ந்து அறியுமிடம் என்பதால் 8 ல் புதன், சூரியன் இணைவு வரவேற்கத்தக்கது.

இந்த ஜாதகத்தில் 8 ல் அமைந்துள்ள புதனும் சூரியனும் நட்புக் கிரகங்கள். ஆனால் செவ்வாய் புதனுக்கு பகை கிரகமாகும். தனிப்பட்ட வகையில் சூரியனும் செவ்வாயும் இணைந்திருந்தால் ஏற்படும் ஆளுமைக் கோபம் புத்தி தெளிவில்லாது செயல்படும். எளிதாகக் கையாள வேண்டிய அலுவலகச் சூழல்களை கையாளத் தெரியாலாமல், பெரிய சம்பாத்தியமும் மதிப்பும் மிக்க வேலையை துறந்துவிட்டு தவிக்கும் பலரை நான் அனுபவத்தில் கண்டுள்ளேன். கன்னியிலமைந்த 3 கிரகச் சேர்க்கையில் புதன் ஆட்சி, உச்சம் மற்றும் மூலத் திரிகோணம் பெற்று வலுவாக அமைந்துள்ளார். புதன் அஸ்தங்கம் பெற்றுருந்தாலும், இங்கு ஆட்சியும் உச்சமும் பெற்று வலுவடைந்திருப்பதால் அஸ்தங்கம் இங்கு செயல்படாது. மேலும் இங்கு செவ்வாய், சூரியனைவிட புதன் அதிக பாகை பெற்று நின்று அவ்விருவரையும் வழிநடத்தும் கிரகமாகிறார். அதாவது செவ்வாய், சூரியன் இணைவு ஏற்படுத்தும் உணர்ச்சிவசப்பட்டு கோபத்தில் ஒரு விஷயத்தை ஜாதகர் செய்யுமுன் புதன் தனது சாதுர்யத்தால் சூழலை சமாளித்து அதை தடுத்துவிடுவார். அதே சமயம் தனது கௌரவத்தையும் தக்கவைத்துக்கொள்வார்.

கிரகச் சேர்க்கைக்கேற்ற சம்பவங்கள் ஒரு ஜாதகருக்கு நடக்க வேண்டுமானால் உரிய தசா-புக்திகள் நடப்பில் இருக்க வேண்டும். இந்த ஜாதகருக்கு நடப்பது புதன் தசை. சூரிய புக்தி. பணியாளர்களின் மனநிலையையும் குறிப்பெடுத்து வைப்பவர்கள் மனிதவள மேலாளர்கள் என்று குறிப்பிட்டிருந்தேன். ஜாதகத்தில் உச்ச புதனே ஜாதகருக்கு தனது காரக வேலையையும் வழங்கியுள்ளார். ஆம். ஜாதகர் மனிதவள மேலாளராக வெளிநாட்டில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார். மனிதவள மேலாளருக்கே நெருக்கடி என்றால் என்ன செய்வது?. தனிப்புதனே வலுவானவர் எனும் சூழலில் அவருக்கு சூரியனின் ஆளுமையும், செவ்வாயின் கடுமையும் கைகொடுக்கின்றன. பணியால் கிரகம் சனி, கன்னி ராசி கிரகங்களுக்கு திரிகோணத்தில் ரிஷபத்தில் செவ்வாயின் மிருகசீரிஷத்தில் நிற்பதால் வேலையில் இவருக்கு சக பணியாளர்களால் மன உழைச்சல். இவர் பணியில் காட்டும் நேர்த்தியும், ஆளுமையும், உறுதியும் அதற்கு காரணம். திறமையும் நேர்மையும் மிக்கவர்களை மன உழைச்சலுக்கு உள்ளாக்குவது நமது நாட்டில் நிற பேதமும், ஜாதீயமும் என்றால் அந்நிய தேசத்தில் இனப் பாகுபாடும் சேர்ந்துகொள்கிறது. இதுவே பெண்ணாகில் மறைமுக பாலியல் சீண்டல்களும் இருக்கும். சக பணியாளர்களின் நிலையால் மன உழைச்சலுக்கு ஆளான ஜாதகர் திறமையானவர் என்றாலும் நடக்கும் ஏழரை சனியும், கன்னியில் நிற்கும் கோட்சார கேதுவும், ஜனன சந்திரனை நோக்கி வரும் கோட்சார ராகுவும் ஜாதகரை சற்றே கவலைக்குள்ளாக்குகின்றன.

பொறுமையாக சூழல்களை யோசித்த ஜாதகர் தனது சூழல்களை சாதுர்யமாகக் கையாள்கிறார். தவறான வழிநடத்தல்களுக்கு உடன்படாமல் உறுதியாகவும் நேர்மையாகவும் நிற்க உறுதி ஏற்கிறார். உரிய ஆலோசனைகளை அதற்காகப் பெறுகிறார். ஜோதிடரிடம் ஆலோசனை பெறுவது உட்பட. கோட்சார கிரகங்களும் தசா-புக்திகளும் சாதகமற்ற நிலை பெற்றுள்ளதால் நேர்மைக்கு புறம்பாக செயல்படும் நிலை வந்தால் மட்டும் வேலையை விட்டு வெளியேறும்படி ஜாதகருக்கு அறிவுறுத்தப்பட்டது.  உரிய வழிபாடுகளும் பரிந்துரைக்கப்பட்டன. உச்ச புதன் தனது புக்தியால் ஜாதகரை வெல்ல வைப்பார். உச்ச புதனே ஜாதகர் ஜோதிடத்தை புரிந்துகொள்ளவும் உதவி செய்வதால், ஜோதிடப்படியான நிலைகள் எப்போது தன்னை தொல்லை செய்யும், எந்த அளவு பொறுமை காப்பது என்ற எல்லையை ஜாதகர் நன்கு அறிந்துவைத்துள்ளார். இதனால் ஜாதகர் உரிய முன்னேற்பாடுகள் செய்துகொள்வதுடன் பணியைவிட்டுச் செல்ல நேர்ந்தாலும் கவலைப்படமாட்டார்.

மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

வெளிநாட்டு வேலைக்கு வருட கிரகப் பெயர்ச்சிகளால் பாதிப்பு வருமா? 

தற்போதைய உலகளாவிய சூழல்களில் வெளிநாட்டில் பணிபுரிந்துகொண்டிருக்கும் அன்பர்களுக்கு தங்கள் வேலையை தக்கவைத்துக்கொள்ள முடியுமா? என்பது கவலைக்குரிய விஷயமாகவுள்ளது. வருடாந்திர கிரகப் பெயர்ச்சிகள் பொதுவாக அனைவர் வாழ்விலும் மாறுதல்களைக் கொண்டுவரும் பொதுவான நிகழ்வுகளே. இந்நிகழ்வுகள் தற்காலிகமானவையா?

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு…

அடித்தட்டு மக்கள் பணம் சம்பாதிக்க நாய் படாத பாடு படுகிறார்கள் என்றால், தனவந்தர்கள் பணத்தை வைத்து அடிக்கும் கூத்துக்களை பார்த்தால் சில நேரங்களில் அட கொடுமையே என்று இருக்கும். சமீபத்தில் என்னிடம் ஒரு அன்பர்

மேலும் படிக்க »
சந்திரன்

ஜாதகம் சரியானதா?

கால்குலேட்டர் வந்த பிறகு கணக்குப் போடுவது மறந்துவிட்டதா? என்றால் அதில் ஓரளவு உண்மையும் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. பெரும்பாலோருக்கு வாய்ப்பாடுகள் மறந்துவிட்டிருக்கும்.  இன்று கூகிள் ஜெமினி போன்ற கைபேசி சேவகர்கள் வந்துவிட்ட பிறகு

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

மூன்றாமிடமும் காமமும்!

பல்வேறு ஊர்களில் இருந்து என்னை தொடர்புகொள்ளும் மனிதர்களை அவர்களது ஜாதகங்கள் மூலம் படிக்கிறேன் என்றால் அது மிகையல்ல. நம் பார்வையில் கடந்து செல்லும் பல மனித முகங்களில் ஒரு சிநேகப் புன்னகையை நாம் கண்டாலும்

மேலும் படிக்க »
கல்வி

நீச புதன் மருத்துவராக்குமா?

ஒரு கிரகத்தின் செயல்பாடு அதை மட்டும் சார்ந்திருப்பதில்லை. அதனோடு தொடர்புடைய பல்வேறு காரணிகளை ஆராய்ந்தே அதன் செயல்பாட்டை அறிய இயலும். உதாரணமாக ஒரு  கிரகம் ஜாதகத்தில் சாதகமற்ற நிலையில் இருந்தாலும்கூட அது நின்ற ராசி,

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

நிலாச் சோறு!

வாழ்வில் சில விஷயங்கள் நமக்கு எளிதில் வாய்த்துவிடும். சில விஷயங்கள் நம்மைத் தேடி வரும் என்று கூடச் சொல்லலாம். சில விஷயங்கள் எவ்வளவு தேடிச் சென்றாலும்  கிடைக்காமல் நம்மை ஏங்க வைத்துவிடும். கல்வி, வேலை,

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil