பொறியியல் கல்வியில் பொருத்தமான கல்வி எது?

புதிய கண்டுபிடிப்புகளும் ஆய்வுகளும் நீண்டுகொண்டே செல்லும் வளர்ச்சியை நோக்கிய வாழ்க்கையில், பொறியியல் கல்வியில் பல்வேறு துறைகள் ஆண்டுதோறும் புதிது புதிதாக உருவாகி வருகின்றன. சில துறைகள் ஒன்று போன்றே தோன்றினாலும் அதிலும் சில நுட்பமான வேறுபாடுகளை தனிப்பிரிவுகள் வழங்குகின்றன. உதாரணமாக 9௦ கள் வரை கணினி அறிவியல் என்ற ஒரு துறைதான் பெரும்பாலோருக்கு தெரியும். இன்று அத்துறையில் எத்தனை பிரிவுகள் எனும்போது ஆச்சரியம் மேலிடுகிறது. இப்படியான ஒரு சூழலில், பள்ளி முடித்து கல்லூரியில் பொறியியல் படிக்க முயலும் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இன்றைய பதிவு அமைகிறது. 

பொதுவாக பொறியியல் கல்வியை தேர்ந்தெடுக்கும்போது ஆசைப்படுவதைவிட ஜாதகருக்கு அதை கற்கும் அமைப்பு இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். பொதுவாக சனி-செவ்வாய் இவை வித்யா கிரகமான புதனுடன் தொடர்பாகும்போது அது பொறியியல் கல்வி கற்க வாய்ப்பை நல்கும். இவர்களுடன் ராகு-கேதுக்கள் இணைய அது நவீன மின்னணு-மென்பொருள் பொறியியல் கல்வி வாய்ப்பை வழங்கும். குறிப்பிட்ட துறையின் உட்பிரிவை தேர்ந்தெடுக்கையில் ராசியைவிட சதுர்விம்சாம்சம் (D24) தெளிவான பதிலை சொல்லும். கற்ற கல்விக்கேற்ற வேலை அமையுமா? என்பதை சனியோடு தொடர்புடைய கிரக அமைப்புகளை தசாம்சத்தில் கவனிப்பது தெளிவைத் தரும். அனைத்தையும் விட தசா-புக்தி கிரகங்களின் பங்கே இவற்றில் முக்கியமானது என்பதை மறக்கக்கூடாது. கீழே ஒரு உதாரண ஜாதகம்.

தனுசு லக்னத்தில் வித்யா காரகர் புதனோடு சனி, செவ்வாய் சேர்க்கை உள்ளது. இந்த இளைஞருக்கு பொறியியல் கல்வி பயில வாய்ப்புண்டு. 

கல்விக்கு ஆராய வேண்டிய சதுர்விம்சாம்சத்தில் உயர் கல்வி பாவம் 9 ல் இருந்து சனி தசை நடத்துகிறார். மகரத்தில் டெக்னாலஜி கிரகங்கள் எனப்படும் ராகு–கேதுக்களுடன்  இணைந்த உச்ச செவ்வாய் மேஷ சனியோடு பரிவர்த்தனை ஆகிறார். தசா நாதன் சனி, பரிவர்த்தனைக்கு பிறகு ராகு-கேதுக்களுடன் இணைவார். மேஷ சனிக்கு   திரிகோணத்தில் தரவுகளை குறிக்கும் புதன் அமைந்துள்ளார். இந்த அமைப்புகளால் இவர் சனி தசாவில் சுக்கிர புக்தியில் கல்லூரியில் கணினிப்பொறியியல் பயின்றார். 

ஜீவனத்திற்கு ஆராய வேண்டிய தசாம்சத்தில் ஜாதகர் தற்போது சனி தசா முடிந்து புதன் தசாவில் உள்ளார். ராசியிலும் தசாம்சத்திலும் 1௦ ஆமதிபதியான புதன்,  ராசியில் 6 ஆமதிபதியும் தசாம்சத்தில் 1௦ ல் நிற்பவருமான  சுக்கிரனின் சாரத்தில் (பூராடம்) நிற்பதால் படித்த உடன் கற்ற கல்விக்கேற்ற கணினித்துறையிலேயே வேலை கிடைத்து பணிபுரிந்துகொண்டுள்ளார். 

பின்வரும் இரண்டாவது ஜாதகத்தை கவனியுங்கள்.

மிதுன லக்னத்தில் குரு திக்பலம். 1௦ ல் சூரியன் திக்பலம். உயர்கல்வி பாவமான 9 ஆமிடத்தில் உள்ள வித்யாகாரகரும் லக்னாதிபதியுமான புதனை குரு தனது 9 ஆம் பார்வையால் சிறப்பிற்கிறார். இதனால் இவரது உயர் கல்வி சிறப்படையும். சுக்கிரன் சனியின் உத்திரட்டாதியில் உச்சம். செவ்வாய் சுக்கிரனின் பரணியில் வீற்றிருக்கிறார். இருவரும் வீடு காரகர்கள் என்பது அறிந்ததே. டெக்னாலஜி கிரகமான ராகு, செவ்வாயின் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் நின்று செவ்வாயை முதலில் தொடுகிறார். சந்திரன் 4 ஆமதிபதி புதனின் ரேவதியில் அமைந்துள்ளார். இந்த அமைப்புகளால் இவருக்கு வீடு கட்டுமான துறையில் பொறியியல் கல்வி கற்க அமைப்புள்ளது. ஆனால் கல்லூரி செல்லும் காலத்தில் உரிய தசா-புக்திகள் வந்தால்தான் இந்த அமைப்பால் பலன் உண்டு. 

சதுர் விம்சாம்சத்தில் 4 ஆமதிபதி சுக்கிரனின் தசையில் மேஷத்தில் அமர்ந்து கன்னி செவ்வாயின் 8 ஆம் பார்வையை பெறும் சந்திரனின் புக்தியில் இந்த மாணவர் கல்லூரியில் கட்டுமான பொறியியலில் சேர்ந்தார். தற்போது சிறப்பாக பயின்று வருகிறார். 

கற்ற கல்வியில் ஒரு ஜாதகர் பொருளீட்டுவாரா என்பதை தசாம்சம் மூலம் அறியலாம். வீடு காரகரும் தசாநாதருமான சுக்கிரன், கட்டுமான காரகர் செவ்வாயின் வீட்டில் தன ஸ்தானமான மேஷத்தில் அமைந்துள்ளார். இதனால் இவர் கற்கும் கல்வியால் பொருள் ஈட்டுவார். 2 ல் கேது சுக்கிரனுடன் இருப்பது இவர் கட்டித்தரும் வீடுகள் பெரும்பாலும் கடனில் கட்டப்படும் என்பதை குறிக்கிறது.

மூன்றாவது ஜாதகம் அடுத்து.

சனியின் மூன்றாவது பார்வையை பெற்று மீனத்தில் புதனின் சாரத்தில் நிற்கும் செவ்வாய் புதனின் கன்னி லக்னத்தை பார்க்கிறார். இதனால் இந்த ஜாதகர் பொறியியல் கல்வி பயில அமைப்பு ஜாதகப்படி உண்டு. உயர் கல்வி பாவமான 9 ஆமிடத்தில் லக்னாதிபதி புதன் தனது நண்பர்கள் சூரியன், சுக்கிரனுடன்  சிறப்பாக அமைந்துள்ளார். ஆனால் புதனும், சுக்கிரனும் அஸ்தங்கம். இவர்களை நோக்கி கேது வருகிறார். வித்யா காரகர் புதனும், லக்னத்திற்கு  9 ஆமதிபதியும், கால புருஷனுக்கு 9 ஆமதிபதியான குருவும் பாதிக்கப்பட்டால் கற்ற கல்வியின் பலனை அனுபவிப்பதில் பாதிப்பு ஏற்படும்.

உயர்கல்விக்கு ஆராயவேண்டிய சதுர்விம்சாம்சத்தில் கும்பத்தில் அதிக கிரகங்கள் இருக்கின்றன. இது இவரது உயர்கல்வி சிந்தனையை கும்ப ராசி கிரகங்களே பெருமளவு இயக்கும் என்பதை குறிக்கிறது. ஆகாய விமானத்தை குறிக்கும் சுக்கிரன் துலாத்தில் ஆட்சியில் உள்ளார். வாயு ராசிகள் விமான பயணத்தை குறிக்கும். குரு ஆகாய தத்துவத்தை குறிப்பவர். உயர்கல்வி பாவமான 9 ஆமிட செவ்வாயை தசா நாதரான குரு பார்க்கிறார். இவர் கல்லூரியில் வானவூர்தி பொறியியல் கல்வி (Aeronautical Engineering) பயின்றார். 

தொழிலுக்கான தசாம்சத்தில் லக்னத்தில், 6 ஆமதிபதியும் வாயு ராசியான மிதுனத்தின் அதிபதியுமான  புதன் அமர்ந்துள்ளார். இதனால் இவர் கற்ற கல்விக்கு ஏற்ற வேலை கிடைத்தது. ஆனால் லக்னாதிபதி செவ்வாய் பாதகாதிபதி செவ்வாயுடன் இணைந்து வேலை பாவமான 6 க்கு விரைய பாவமான 5 ஆமிடம் ரிஷபத்தில் இருக்க, இவர்களை பாதக ஸ்தானமான விருட்சிகத்தில் இருந்து விரையாதிபதியான தசாநாதர் குரு பார்த்ததால் இவர் வேலையை தக்கவைதுக்கொள்ளவில்லை. வேலையில்  விருப்பமின்றி வெளியேறிவிட்டார். 

வித்யா காரகர் புதனும் காரக கிரகமும் ராசியில் அஸ்தங்கம். தசாநாதர் குரு ராசி, சதுர்தாம்சம், தசாம்சம் மூன்றிலும் சாதகமான இடத்தில் அமையவில்லை. இத்தகைய அமைப்புகள் பல லட்சம் செலவு செய்து  கற்கும் கல்வியை பயனற்றதாக செய்யும். எனவே உயர் கல்வியை தேர்ந்தெடுக்கையில்  இவற்றை கவனத்தில்கொள்வது அவசியம். 

நான்காவது ஜாதகம் கீழே.

கன்னி லக்னாதிபதியும் வித்யா காரகருமான புதனுடன் கடகத்தில் புதன் சாரத்தில் இயந்திர காரகர் செவ்வாய் இணைவு பெற்றிருப்பது பொறியியலுக்கான அமைப்பை ஏற்படுத்தும். 

சதுர் விம்சாம்சத்தில் செவ்வாயும் புதனும் பரிவர்த்தனை ஆகியுள்ளது இவை கல்வி விஷயங்களில் ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதி செய்கிறது. இந்த ஜாதகர் புதன் தசையின் துவக்கத்தின் கல்லூரியில் இயந்திரப் பொறியியல் (BE-Mechanical Engg) பயின்றார். 

கல்வி முடித்த பிறகும் ஜாதகருக்கு புதன் தசையே தொடர்கிறது. புதன் 2 ஆம் பாவத்தில் பத்தாமதிபதி குருவோடு இணைந்துள்ளார். கற்ற கல்வி பொருளீட்ட உதவுகிறது என்பதை இது குறிப்பிடுகிறது. 2 ஆம் பாவமானது வாகன பாவமான 4 க்கு லாப பாவம் என்பதோடு, கடகம் கால புருஷனுக்கு 4 ஆவது பாவம் என்பதை அறிக. இந்த அமைப்பால் இந்த ஜாதகர் புகழ் பெற்ற கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிகிறார். 

உயர் கல்வி என்பது ஒருவர் எந்த வழியில் தனது பொருளாதார வாழ்க்கையை அமைத்துக்கொள்வது என்பதை தீர்மானிக்கிறது. ஜோதிடம் இது விஷயத்தில் தகுந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுக்க  வழிகாட்டும். 

விரைவில் மீண்டுமொரு பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி:8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

கடுமை காட்டும் கிரகங்களும் கருணை காட்டுவது எப்போது?

வர்க்கங்களில் செவ்வாய்.

ஜோதிடத்தில் ஒரு கிரகம் எப்படிச் செயல்படும் என்பதை அறிய எண்ணற்ற  யுக்திகள் கடைபிடிக்கப்படுகின்றன. உதாரணமாக அஷ்டவர்க்கத்தை சொல்லலாம். ஒரு ஜோதிடர் எத்தனை யுக்திகளை கற்று வைத்துள்ளாரோ? அத்தனை துல்லியம் அவரது பலனில் வெளிப்படும். ஜோதிடத்தில்

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

பிரியாத வரம் வேண்டும்!…

“ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்” போன்ற திரையிசைப் பாடல்களை கேட்கும்போது நமது இளமை புதுப்பிக்கப்படுகிறது. சமீபத்தில் இப்பாடலை கேட்டபோது இதன் வரிகள் இன்றைய திருமண வாழ்வில் எத்தனை பாடு படுத்துகிறது

மேலும் படிக்க »
ஜாமக்கோள் ஜாலங்கள்

சரியும் சந்தையை சாதகமாக பயன்படுத்தலாமா?

இன்று வேலை, திருமணம், பொருளாதாரம் ஆகியவற்றை பற்றி ஜோதிடர்களை தொடர்புகொள்ளும் அளவுக்கு சமமாக தற்போது பங்கு வணிகம் சார்ந்தும் ஜோதிடர்களை அணுகுகின்றனர் என்பது ஆச்சரியம். முந்தைய காலங்களில் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக நீண்டகால தொடர்

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

புத்திசாலிகள் வெல்லுமிடம்!

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனிச்சிறப்பான குண நலன்கள் உண்டு. ஆனால் அவை மற்றொரு கிரகத்துடன் இணைகையில் அதற்கு குணமாறுபாடு ஏற்படும். இணையும் கிரக குணத்தையும் கிரகம் கிரகிப்பதுதான் இதற்குக் காரணம். இதில் மூன்றாவது கிரகமும்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

திருமணத்தடை பரிகாரம்.

இன்று பெரும்பாலான இளைஞர் சமுதாயத்தினருக்கு திருமணத் தடை என்பது பெரும் மன உழைச்சலைத் தருகிறது. கடந்த தலைமுறையினருக்கு அதாவது 199௦ க்கு முன் இருந்தவர்கள் நமது சமுதாயம் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைத்த காலத்தில்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

Beware of Scammers

உலகம் வேகமாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வறுமையின் பிடியில் இருந்து பலகோடி மக்களை தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியால் மீட்டெடுத்துள்ளது என உலக வங்கி பாராட்டியுள்ளது. பலதரப்பட்ட காலாச்சார வேறுபாடுகளைக்கொண்டிருந்தாலும், அடிப்படையில்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil