தொழிலை எப்போது விரிவுபடுத்தலாம்?

தொழில் செய்வோர் அனைவரும் தங்களது தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல எண்ணுவது இயல்பு. வளர்ச்சியை நோக்கிச் செயல்படாத தொழில் எதுவாகினும் போட்டியில் காணாமல் போகக்கூடும். ஆனால் தொழிலை நேசித்து சரியான திட்டமிடலோடு செய்துவரும் நபர்கள் தேவைக்கேற்ப அவ்வப்போது தொழிலை சிறுது சிறிதாக விஸ்தரிப்பு செய்து வருவது ஒரு வகை. இது பெரிய சிரமங்களின்றி தடைகளில் நிதானித்து செயல்பட உதவும். பெரும்பாலான தொழில்துறையினர் இவ்வகை விரிவுபடுத்தலையே விரும்புவர். ஆனால் தங்களது தொழிலை தற்காலத் தேவைக்காகவும், போட்டிகளை எதிர்கொள்ளவும் பெரிய அளவில் விரிவுபடுத்தும்போது ஒரு சிறு தயக்கம் தொழில்துறையினருக்கு இருப்பது இயல்பு. துணிந்தவர்களுக்கே வெற்றி என்றாலும் அனைத்து காலங்களிலும் துணிவு மட்டுமே வெற்றியை தந்துவிடுவதில்லை. ஏனெனில் ஒரு தொழிலின் வளர்ச்சி என்பது அத்தொழிலில் முதலீடு செய்தவரை மட்டும் சார்ந்தது அல்ல. உற்பத்திப் பொருள்களுக்காண தேவை, தரம், காலம், வாடிக்கையாளர்கள், தேச மற்றும் உலகப் பொருளாதாரம்  ஆகிய பல்வேறு அம்சம்கள் ஒரு தொழிலின் வெற்றியை  தீர்மானிக்கின்றன. இந்நிலையில் ஒரு கணிசமான கூடுதல் முதலீடு செய்து  தனது தொழிலை விரிவுபடுத்த வாய்ப்பு வந்துள்ளது? ஏற்கனவே செய்துவரும் தொழில்தான் என்றாலும் கூடுதலாக செய்யப்படும் முதலீடு வளர்ச்சி தராவிட்டால் தான் பெரும் கடனாளி ஆகிவிடும் ஆபத்து உள்ளதால் ஜோதிட அறிவுரை தேவை என்று அனுகியவரின் ஜாதகமே கீழே நீங்கள் பார்ப்பது.

மிதுன லக்னம் வியாபாரம், தரகு, கமிசன் ஆகியவற்றை குறிப்பிடுவது. ஜாதகர் FMCG துறையில் தொழில் செய்பவர். பல வருடங்கள் தனது தொழிலை நிதானத்துடன் வெற்றிகரமாக செய்து வந்தவர். ஜாதகருக்கு தற்போதுதான் சுக்கிர தசை முடிந்து சூரிய தசை துவங்கியுள்ளது. லக்ன யோகாதிபதி சுக்கிரன் வாடிக்கையாளர்களை குறிப்பிடும் 7 ஆமிடத்தில் நின்றதால் வெற்றிகரமாக தொழில் செய்தவர். தற்போது ராஜ கிரகமான சூரிய தசை துவங்கியுள்ளதால் பெரிய அளவில் தொழிலை விரிவுபடுத்த வாய்ப்பு வந்துள்ளது. 6 ஆமிட சூரியன் கடனை ஏற்படுத்திவிடுவாரோ  என்ற ஐயம் ஜாதகருக்கு உள்ளது. பொதுவாகவே மிதுன, விருட்சிக அன்பர்கள் இயல்பாகவே ஓரளவு ஜோதிடம் அறிந்தவர்களாக இருப்பவர்கள் என்பதால் ஜாதகர் இப்படி கேள்வி எழுப்பினார். ஜாதகத்தில் தொழில் வருமானத்தை ஆராய வருமான பாவகமான 2 ஆமிடத்தையும் அதன் திரிகோணங்களான 6 மற்றும் 1௦ ஆகியவற்றோடு வாடிக்கையாளர்களை குறிப்பிடும் 7 ஆமிடத்தையும், லாபத்தை குறிப்பிடும் 11 ஆமிடத்தையும் முக்கியமாக ஆராய வேண்டும். இந்த ஜாதகத்தில் 8, 9 அதிபதி சனி வக்கிரம் பெற்று லக்னத்தில் அமைந்துள்ளார். இதனால் ஜாதகர் தொழிலில் தனக்கென ஒரு குறிப்பிட்ட பாணியில்தான் செயல்படுவார். பிறரது கருத்துக்களை கேட்பாரே தவிர அது தனக்கு உடன்பாடாக இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளவார். ஜாதகத்தில் லக்னமும் சனியும் ராகு-கேதுக்களின் அச்சை விடு தனியே நிற்பதால் இவருக்கு தொழில் திறமைகள் சிறப்பாக இருந்தாலும் பிற கிரகங்கள் அனைத்தும் ராகு-கேதுக்களின் அச்சுக்குள் இருப்பதால் வாடிக்கையாளர்களின் தேவையறிந்து செயல்படும் நிர்பந்தத்தில் தொழில் செய்வார்.

ஜாதகத்தில் 2 ல் கிரகங்கள் இல்லையென்றாலும் 2 ன் திரிகோணமான விருட்சிகத்தில் 5 கிரகங்கள் அமைந்துள்ளன. 2 ஆமதிபதி சந்திரன் நீசமாகி செவ்வாய் சேர்க்கை பெற்றதால் நீச பங்கமாகியுள்ளார். அதே சமயம் 6 ல் பல கிரகங்கள் அமைந்துள்ளதால் இவர் தொழிலில் பலவித போட்டிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 6 ஆமதிபதி ஆட்சி பெற்றுள்ளதால் தொழில் போட்டிகளை ஜாதகர் தனது தனித் திறமையால் வெல்வார் என்று கூறலாம். 6 ஆமிடம் என்பது தொழில் பாவகமான 1௦ ன் பாக்கிய ஸ்தானமாக அமையுமிடமாகும். 6 ல் பல கிரகங்கள் அமைந்துள்ளதால் இவர் பலவித சரக்குகளை தொழிலில் கையாளும் அமைப்பும் உள்ளது. ஜாதகருக்கு கடந்த 5, 12 க்குரிய சுக்கிர தசை வாடிக்கையாளர் ஸ்தானமான 7 ஆமிடத்தில் மூலம்-2 ல் கேது சாரத்தில் அமைந்ததால் இவர் தேவைக்கான சரக்குகளை மட்டுமே இருப்பு வைத்து வியாபாரம் செய்திருப்பார். ஏனெனில் 12 ஆமிடம் என்பது Stock என்பதை குறிப்பிடும் பாவகமாகும். 9 ல் அமைந்த குரு லக்னத்தையும், தனக்கு வீடு கொடுத்த லக்னத்தில் அமைந்த சனியையும் பார்ப்பது சிறப்பே என்றாலும், 1௦ ஆமதிபதி 1௦ க்கு விரையத்தில் 9 ல் அமைந்தது ஜாதகர் தொழிலில் பெரிய Risk எடுக்க தயங்குபவர் என்பதையும் குறிப்பிடுகிறது. குருவின் இந்த அமைப்பாலும் ஜாதகர் தனது தொழிலுக்கு அதிக இருப்பு வைத்துக்கொள்ள மாட்டார். தொழில் போட்டி ஸ்தானமான  6 ஆமிடத்தில் செவ்வாய், சூரியன், ராகு அமைந்தது கடும் போட்டிகளை வெல்லும் அமைப்பு என்பதை குறிக்கும். 3 ஆமதிபதி சூரியன் 6 ல் அமைந்தது தொழிலில் தனக்கான தனித்துவத்தை ஜாதகர் கடை பிடிப்பார் எனக் குறிப்பிடுகிறது. இது ஜாதகர் தனது தொழிலில் சில குறிப்பிட்ட பிராண்டுகளை அதிகம் நம்பி செயல்படுபவர் என்பதை குறிப்பிடும்.

கடந்த சுக்கிர தசை 12 ஆமிட கேது சாரம் பெற்ற, 5, 12 ஆமதிபதியானதால் இவரது இருப்புகள் அதிகம் தேங்காமல் விற்றுத் தீர்ந்தன. மேலும் ஜாதகரும் தேவைகேற்ற இருப்புகளை மட்டுமே வைத்துக்கொண்டதாலும் வாடிக்கையாளர்களை குறிக்கும் 7 ஆமிடத்தில் சுக்கிரன் நின்றதாலும் சிறப்பாகவே சுக்கிர தசை பலன் கொடுத்துள்ளது.  இவர் தொழில் பிராண்டுகளில் சுக்கிரனின் காரகங்களே அதன் தசையில் அதிகமாக இருந்தன. இந்நிலையில் 1௦ ஆமதிபதி குரு 9 ல் இருந்து நடப்பு தசாநாதரின் வீடான துணிச்சலை குறிப்பிடும் 3 ஆமிடம் சிம்மத்தை பார்க்கும் நிலையில் ஜாதகருக்கு சூரிய தசை துவங்கியுள்ளது. இத்திசை கடும் போட்டிகளுக்கிடையே வியாபார வெற்றியை தரும். ஆனாலும் 6 ஆமிடம் என்பது வாடிக்கையாளர் பாவகம் 7 க்கு விரையத்தில்  வருவதால் இவர் தனது வாடிக்கையாளர் விருபத்திற்கு உடன்பட்டே தொழில் செய்ய வேண்டியிருக்கும். மேலும் 12 ஆமிடத்தை பல கிரகங்களுடன் 6 ல் இருந்து தசாநாதர் சூரியன்  பார்ப்பதால் அதிக இருப்பு வைத்து தொழில் செய்வது கடனை ஏற்படுத்தும் என்றாலும் 10 ஆமிடத்திற்கு பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தசை நடத்தும் சூரியன் தனது தசையில் ஜாதகரை தொழில் ரீதியாக உயர்த்துவது உறுதி. இத்தகைய அமைப்புகளை ஆராய்ந்து ஜாதகரிடன் சில சிரமங்களும் கடன்களும் சூரிய தசையில் ஏற்படும் என்றாலும், நிச்சயம் எதிர்காலத்தில் உயர்வு உண்டு. சூரியன் 6, 11 க்குரிய செவ்வாய் வீட்டில் நிற்பதால் 6, 11 ஆகிய இரு வீட்டு பலன்களையும் வழங்கியாக வேண்டும். 6 வருட சூரிய தசையில் முதல் 3 வருடங்கள் 6 ஆமிட பலன்களே நடக்கும் என்பதால் போராட்டங்களும் வெற்றிகளும் கலந்த பலன்களே நடக்கும். சூரிய தசையின் இரண்டாவது பகுதி லாப பலன்களை வழங்கும் என்பதால் முதல் 3 வருடங்கள் வளர்ச்சி மந்தமானது. குறிப்பாக தற்போது தொழில் ஸ்தானமான மீனத்தில் இருக்கும் கோட்சார ராகு ஜனன காலத்தில் கும்பத்தில் நிற்கும் குருவை கடந்து செல்லும் வரை தொழில் மற்றும் முதலீட்டில் பெரிய Risk தொழிலில் எடுக்க வேண்டாம். அதன் பிறகு லாபங்கள் பெருகும் என்று கூறப்பட்டது.

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

மன்னாரு & கம்பெனி மேனேஜர்…

எனது நீண்ட நாள் வாடிக்கையாளர் ஒருவர் பெங்களூரில் மென்பொருள் துறையில் பணிபுரிபவர். வெகு நாட்களுக்கு முன் அவரது ஜாதகத்தை பார்த்துவிட்டு வேலை அமைப்புகள் சிறப்பாக உள்ளன. ஆனால் வேலையில் அடிக்கடி மாறுதல்களை ஏற்கும் அமைப்பு

மேலும் படிக்க »
Tarot

பணம் செய்ய விரும்பு.

வேகமாக உழைத்தவர்களைவிட விவேகமாக உழைத்தவர்களே விரைந்து முன்னேற இயலும் என்பது கடந்த காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திற்கும் பொருந்தும் விதியாகும். இன்று இந்தியா வளரும் நாடு என்பதியிலிருந்து   வளர்ந்த நாடு எனும் நிலையை நோக்கி வேகமாக

மேலும் படிக்க »
இல்லறம்

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனுமா?

இன்றைய நிலையில் பணத்துடன் நல்ல கல்வியும் சிறப்பான உத்யோகமுமே சொந்தங்களை தீர்மானிக்கிறது என்பது நிதர்சனம். இத்தகையவர்களுக்கு  அவர்கள் வாழ்க்கை வட்டத்தில் வந்ததெல்லாம்  சொந்தம்தான். வறுமை இந்தியாவை வளைத்துப் பிடித்திருந்த எண்பதுகள் வரை பணம் மட்டுமே

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சுரங்கத் தொழில் சுக வாழ்வு தருமா?  

இன்றைய உலகில் போருக்கான முக்கிய காரணம் ஒன்றே ஒன்றுதான். பூமியில் கிடைக்கும் எரிபொருள் அல்லது கனிம வளங்கள். இவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டால், உலக நாடுகளை எரிபொருள், கனிம தேவைகளுக்காக தங்களை மட்டுமே சார்ந்திருக்க

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

தந்தையின் தொழில்…

குடும்ப பாரம்பரியமாக ஒரு தொழிலை செய்யும்போது அதில் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் கற்றுக்கொள்ளல்களின் நேர்த்தி இருக்கும். தங்களது திறமைகளின் அடிப்படையில் தொழிலை தேர்ந்தெடுத்து அதில் பாராட்டும், பணமும் கிடைத்து மன நிறைவைவும் தந்த

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா?

திருமணக் கனவுகளில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும்  இளைஞர்கள் அனைவருக்கும் தங்கள் துணைவர் என்ன கலரில் இருப்பார் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும். கருப்பு, வெண்மை, மாநிறம், பாந்தமான முகம் என்று பலவகைத் தோற்றங்களில் மனிதர்கள் காணப்படுகின்றனர். துணைவர்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil