வெளிநாட்டு முதலீடு!

வளர்ந்து வரும் ஒரு தேசத்தில் வளர்ச்சிக்கேற்ற கட்டமைப்புகள் முக்கியமானவை. இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளாக சாலைகள், விமான நிலையங்கள், பாலங்கள், எரிபொருள், தொலைதொடர்புத்துறை,  மின்சாரம் போன்ற பல்வேறு முக்கிய துறைகளில் வேகமாகக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ராணுவ ரீதியான கட்டமைப்புகள் ஒருபுறமிருக்க வளர்ச்சிக்கான உள்கட்டமைப்புகளை இன்று சாதாரண இந்தியனும் உணர்ந்து பயன்படுத்தி வருகிறான். பாரதத்தின் பொருளாதாரக் கட்டமைப்புகளைப் பார்த்து உலகம் இன்று வாயடைத்து நிற்கிறது. குறிப்பாக இந்தியாவின் பணப்பரிமாற்ற முறையை (UPI) வளர்ந்த நாடுகள் தாங்கள் செயல்படுத்த திணறிக்கொண்டிருப்பதை இந்தியா வெற்றிகரமாக செயல்படுத்திக்கொண்டிருப்பதைப் பார்த்து வியக்கிறது. இந்நிலையில் இத்தகைய கட்டமைப்புகளுக்கான கனரக இயந்திரங்களின் பங்கு மிக முக்கியமானது. மலையை குடைந்து ஏற்படுத்தப்பட்டு வரும் சாலைக் கட்டமைப்புகளை கையாள்வதற்கான கருவிகள் முன்னேறிய நாடுகளில் நவீனமாகியிருக்கின்றன. சமீபத்தில் நமது தேசத்தில் எல்லையோரத்தில் இமயமலையை குடைந்து சாலை உருவாக்கத்தின்போது நமது பல தொழிலாளர்களை விபத்தில் சிக்கிக்கொண்டதையும்  பல நாள் போராட்டதிற்குப் பிறகு அவர்களை நாம் மீட்டதும்  நினைவிருக்கும். அதற்காக நவீன கிரேன் போன்ற இயந்திரங்கள் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்டன. நாம் அத்தகைய கருவிகளை உருவாக்குவது பற்றி தற்போதுதான் இத்தகைய அனுபவங்கள் மூலம் சிந்திக்கத் துவங்கியுள்ளோம்.  இந்நிலையில் அன்பர் ஒருவர் வெளிநாட்டுவாழ் இந்தியர். தான் வசிக்கும் வெளிநாட்டில் இருந்து கட்டுமானங்களை கையாள்வதற்கான அந்நாட்டில் பயன்படுத்தப்பட்ட நவீன கனரக இயந்திரங்களை வாங்கி அவற்றை இந்தியாவில் மறுவிற்பனை செய்ய இருப்பதாகவும், தனது நண்பர்களுடன் இணைந்து அதை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி ஜோதிட ரீதியாக அறிய எண்ணம் என்று கூறினார். அன்பரின் நோக்கம் தெளிவாக இருப்பதால் பிரசன்னம் மூலம் இதற்கான துல்லியமான பதிலை அறியலாம் என்று முடிவானது. அதன்படி பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னமே நீங்கள் கீழே காண்பது.

ஜல ராசியான மீனம் லக்னம். மற்றொரு ஜல ராசியான் கடகத்தில் ஆரூடம் அமைந்துள்ளதும் வெளிநாட்டை குறிக்கும் 12 ஆமிடத்தில் கவிப்பு அமைந்ததும் கேள்வியாளர் வெளிநாடு  தொடர்புடையவர் என்பதை குறிக்கிறது. தாய் நாட்டை குறிக்கும் உதயத்திற்கு 2 ஆமிடத்தில் உதயாதிபதியும் தன காரகருமான குரு அமைந்து அங்கு தாய் நாட்டின் காரக கிரகம் சந்திரன் அமைந்தது கேள்வியாளர் வெளிநாட்டிலிருந்து தனது தாய் நாட்டில் முதலீடு செய்ய எண்ணம் கொண்டுள்ளதை குறிப்பிடுகிறது.  கடக சனியின் 10 ஆம் பார்வையும் 12 ஆமிட சனியின் 3 ஆம் பார்வையையும் 2 ஆமிட கிரகங்கள் பெறுவது வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் முதலீடு செய்ய எண்ணியுள்ள கேள்வியாளரின் நோக்கத்தை துல்லியமாகத் தெரிவிக்கிறது. உதயத்தில் சூரியனும் பிரம்மாண்ட கிரகம் ராகுவும் அமைந்துள்ளது கேள்வியாளர் கனரக இயந்திரங்கள் தொடர்பான விஷயத்தை குறிப்பதை தெரிவிக்கிறது. ஒரு கேள்வியில் உச்ச நீச்ச கிரகங்கள் கேள்வியோடு தொடர்புடையவையாக இருக்கும். இந்தப் பிரசன்னத்தில் கட்டுமான மற்றும் கனரக இயந்திர காரகர் செவ்வாய் மகரத்தில் சூரியனுடன் இணைந்து உச்சமாகி கடக சனியின் நேர் பார்வையை பெறுவதிலிருந்து கேள்வியாளர் செவ்வாய்-சனி குறிக்கும் கட்டுமானங்கள் தொடர்பான கனரக இயந்திரங்களை குறித்தான தொழிலில் ஈடுபட விரும்புவது தெரிகிறது. மேலும் பயன்படுத்தப்பட்ட பழைய பொருட்களை குறிக்கும் சனி இதில் தொடர்பாவது கேள்வியாளர் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களை மறு விற்பனை செய்ய எண்ணியுள்ளதை தெளிவாக்குகிறது. 10 ஆமிடம் கேள்வியை விவரித்துச் சொல்லும். உதயத்திற்கு 10 ஆமிடமான தனுசில் உதயாதிபதி குருவுடனும்  நண்பர்களை குறிக்கும் புதனுடனும் இணைந்து இயந்திர காரகர் செவ்வாய் திக்பலத்தில் நிற்பது, கேள்வியாளர் தொழிலுக்கு நண்பர்களை நாடுவது தெளிவாகிறது.

இனி பதிலுக்குச் செல்வோம். உதயமும் அங்கு அமைந்த ராகுவும் வெளிவட்டத்தில் அமைந்த  சூரியனும் நண்பர்கள் கூட்டாளிகளை குறிக்கும் புதனின் ரேவதி நட்சத்திரத்தில் அமைந்துள்ளது கேள்வியாளர் நண்பர்களை தொழிலில் ஈடுபடுத்த விரும்புவதை குறிக்கிறது. இந்த மீன உதயத்திற்கு நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளை குறிக்கும் புதன் பாதகாதிபதியாக வருகிறார். பாதக ஸ்தானமான கன்னியில் 7 ஆமதிபதி புதனும் 8 ஆமதிபதி சுக்கிரனும் வெளிவட்டத்தில்  பரிவர்த்தனை பெற்று அமைந்துள்ளதை கவனிக்க. கூட்டாளிகளை குறிக்கும் 7 ஆமிட கிரகம் பாதிப்பை குறிக்கும் 8 ஆமிடதிற்கு பரிவர்த்தனையாகி திரும்புவதால் கூட்டாளிகளால் கேள்வியாளருக்கு பாதிப்பே ஏற்படும். நண்பர்கள் – கூட்டாளிகளை குறிக்கும் 8 ஆமிட புதன் 7 ஆமிடத்திற்கு பரிவர்த்தனையாகி உச்சமடைவதால் நண்பர்கள் வலுவடைவர். மேலும் நண்பர்களை குறிக்கும் 11 ஆமிடத்தில் சூரியன் உச்ச செவ்வாயுடன் இணைந்து அமைந்தது தொழிலால் நண்பர்கள் கேள்வியாளரைவிட அதிக மதிப்பு, மரியாதையையும், கௌரவத்தையும் பெறுவதையும் குறிக்கிறது. கேள்வியாளரை குறிக்கும் மேஷத்திலமைந்த உதயாதிபதி குருவை, நண்பர்களை குறிக்கும் 11 ஆமிட  செவ்வாய் 4 ஆம் பார்வையாக பார்ப்பது, நண்பர்கள் கேள்வியாளர் மீது ஆதிக்கம் செலுத்தும் அமைப்பு உள்ளதை குறிப்பிடுகிறது. அதே சமயம் 12 ஆமிட சனி, மேஷ உதயாதிபதி குருவை 3 ஆம் பார்வை பார்ப்பதும், கடக சனியின் 10 ஆம் பார்வையாக பார்ப்பதும் கேள்வியாளர்தான் தொளிலாளி போல செயல்படும் அமைப்பு உள்ளதை குறிக்கிறது.  மேஷ குரு 10 ஆமிட தனுசு செவ்வாயுடன் பரிவர்த்தனையாவது நண்பர்கள் பாதிப்பை ஏற்படுத்தினால் கேள்வியாளரே நண்பர்களைத் தவிர்த்து நேரடியாக தொழிலில் ஈடுபடும் அமைப்பை சுட்டிக்காட்டுகிறது. விரைய ஸ்தான சனியை கவிப்பு பாதித்து, கவிப்பை கடந்து உதயம் நிற்பதால் கேள்வியாளர் தொழிலில் ஏற்கனவே பாதிப்பை சந்தித்திருப்பதை குறிப்பிடுகிறது.

மேற்கண்ட குறிப்புகளை ஆய்வு செய்துவிட்டு நீங்கள் நண்பர்களுடன் இணைந்து செய்யும் இந்தத் தொழிலால் உங்களைவிட நண்பர்களே அதிக ஆதயமடைவர். நீங்கள் பணியாளர் போல செயல்பட வேண்டியிருக்கும். எனவே நண்பர்களைத் தவிர்த்துவிட்டு வேறு வகைகளில் தொழிலை மேற்கொள்வது பற்றி முடிவு எடுக்கும்படி அறிவுறுத்தினேன். அதற்கு கேள்வியாளர் கூறியதாவது. “கடந்த ஆண்டே இந்த தொழிலை நண்பர்களுடன் இணைந்து துவங்கிவிட்டேன். ஓரிரு விற்பனைகளையும் செய்துள்ளோம். ஆனால் அதில் நீங்கள் கூறியபடி நண்பர்கள் முதலாளிகள் போலவும் என்னை தொழிலாளி போலவும் பாவிக்கின்றனர். நடந்து முடிந்த விற்பனையில் கூட வசூலிக்க வேண்டிய பாக்கித் தொகையை வசூலித்துத் தராமல் இழுத்தடிக்கின்றனர். இதனால் ஏற்பட்ட மன உழைச்சலால்தான் நண்பர்களைகொண்டு தொழிலை நடத்துவது எந்த அளவு சரி? என்று அறியவே உங்களை நாடினேன். நீங்கள் கூறிய அனைத்தும் மிகச் சரி” என்று கூறினார்.  

என்னே பிரசன்னத்தின் மகிமை.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

வெளிநாட்டு வேலைக்கு வருட கிரகப் பெயர்ச்சிகளால் பாதிப்பு வருமா? 

தற்போதைய உலகளாவிய சூழல்களில் வெளிநாட்டில் பணிபுரிந்துகொண்டிருக்கும் அன்பர்களுக்கு தங்கள் வேலையை தக்கவைத்துக்கொள்ள முடியுமா? என்பது கவலைக்குரிய விஷயமாகவுள்ளது. வருடாந்திர கிரகப் பெயர்ச்சிகள் பொதுவாக அனைவர் வாழ்விலும் மாறுதல்களைக் கொண்டுவரும் பொதுவான நிகழ்வுகளே. இந்நிகழ்வுகள் தற்காலிகமானவையா?

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு…

அடித்தட்டு மக்கள் பணம் சம்பாதிக்க நாய் படாத பாடு படுகிறார்கள் என்றால், தனவந்தர்கள் பணத்தை வைத்து அடிக்கும் கூத்துக்களை பார்த்தால் சில நேரங்களில் அட கொடுமையே என்று இருக்கும். சமீபத்தில் என்னிடம் ஒரு அன்பர்

மேலும் படிக்க »
சந்திரன்

ஜாதகம் சரியானதா?

கால்குலேட்டர் வந்த பிறகு கணக்குப் போடுவது மறந்துவிட்டதா? என்றால் அதில் ஓரளவு உண்மையும் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. பெரும்பாலோருக்கு வாய்ப்பாடுகள் மறந்துவிட்டிருக்கும்.  இன்று கூகிள் ஜெமினி போன்ற கைபேசி சேவகர்கள் வந்துவிட்ட பிறகு

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

மூன்றாமிடமும் காமமும்!

பல்வேறு ஊர்களில் இருந்து என்னை தொடர்புகொள்ளும் மனிதர்களை அவர்களது ஜாதகங்கள் மூலம் படிக்கிறேன் என்றால் அது மிகையல்ல. நம் பார்வையில் கடந்து செல்லும் பல மனித முகங்களில் ஒரு சிநேகப் புன்னகையை நாம் கண்டாலும்

மேலும் படிக்க »
கல்வி

நீச புதன் மருத்துவராக்குமா?

ஒரு கிரகத்தின் செயல்பாடு அதை மட்டும் சார்ந்திருப்பதில்லை. அதனோடு தொடர்புடைய பல்வேறு காரணிகளை ஆராய்ந்தே அதன் செயல்பாட்டை அறிய இயலும். உதாரணமாக ஒரு  கிரகம் ஜாதகத்தில் சாதகமற்ற நிலையில் இருந்தாலும்கூட அது நின்ற ராசி,

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

நிலாச் சோறு!

வாழ்வில் சில விஷயங்கள் நமக்கு எளிதில் வாய்த்துவிடும். சில விஷயங்கள் நம்மைத் தேடி வரும் என்று கூடச் சொல்லலாம். சில விஷயங்கள் எவ்வளவு தேடிச் சென்றாலும்  கிடைக்காமல் நம்மை ஏங்க வைத்துவிடும். கல்வி, வேலை,

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil