ஒரு வீட்டை விற்று மறுவீடு வாங்கும் அமைப்பு யாருக்கு?

கல்யாணம் பண்ணிப்பார். வீட்டைக் கட்டிப்பார் என்பார்கள். வாழ்க்கையில் தனக்காக ஒரு குடும்பத்தையும் வீட்டையும் உருவாக்கிக்கொள்பவர்களையே உலகம் இன்று மதிக்கிறது. சிறப்பான குடும்ப வாழ்க்கையை பெறுபவர்கள்கூட சிறப்பான வீடு வசதிகளை பெற முடிவதில்லை. கட்டிடம் என்பது செவ்வாய். வசிக்கத்தக்க வீடு என்பது சுக்கிரன். உண்மையில் ஒருவர் தனக்கான வீட்டை உருவாக்கிக் கொள்ள அனைத்து கிரகங்களின் அருளும் தேவை. அதனால்தான் வீடு வாங்குவதை வீடு பாக்கியம் என்கிறார்கள். ஒருவருக்கு வீடு அமையும் வாய்ப்பு உள்ளதா? என்பதை லக்னம், 4 ஆமிடம், கால புருஷ லக்னாதிபதியும் பூமி காரகருமான செவ்வாய், கால புருஷ 4 ஆமதிபதி சந்திரன் இவர்களின் நிலை மூலம் அறியலாம். நடுத்தர வர்க்கம் சொத்து வாங்க பல வழிகளில் முயல்கிறது. தவணை முறையில் சொத்து வாங்குவது அதிகரித்து வரும் இன்றைய நிலையில் வீடு வாங்க நடுத்தர வர்க்கத்தில் கணவருடன் மனைவியும் பணிக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. பூர்வீகச் சொத்து உள்ளவர்களுக்கு பிரச்சனை இல்லை என்றாலும், இக்காலத்தில் ஒரே இடத்தில் பந்துக்களுடன் பரம்பரையாக வாழும் சமுதாய அமைப்பை நாம் கடந்துவிட்டோம். இன்று அவரவர் வளமையாக வாழும் இடத்தில் வீடு வாசல் என்று அமைத்துக்கொள்ள தங்களது பூர்வீக சொத்தை விற்றுவிடுகின்றனர். இப்படி ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்கும்  அமைப்பில் சில சிக்கல்களும் உண்டு. பூர்வீக சொத்தை விற்றுவிட்டு மறு சொத்தை தேடுபவர்களும் உண்டு. தேடி வரும் சொத்தை வாங்கிக்கொள்ள அவரசமாக பூர்வீக சொத்தை விற்பவர்களும் உண்டு. இன்றைய பதிவில் ஒரு சொத்தை விற்று மறு சொத்து குறிப்பாக வீடு வாங்கும் யோகம் யாருக்கு அமையும் என்பது பற்றி ஜோதிட ரீதியாக ஒரு உதாரண  ஜாதகத்துடன் ஆராய உள்ளோம்.

வீட்டை குறிக்கும் 4 ஆமிடத்தின் லாப பாவகமான 2 ஆமிடம் தொடர்புடைய கிரக தசா-புக்தி நடக்கையில் அது 4 ஆமிடத்துடனும் தொடர்பில் இருந்தால்  ஒருவருக்கு வீடு வாங்கும் அமைப்பு ஏற்படும். 4 ன் திரிகோண பாவகங்களான 8 ம், 12 ம் ஒருவர் சொத்து வாங்குவதற்கு உதவி செய்யும். வீடு வாங்க காரக கிரகம் சுக்கிரன் ஜாதகத்தில் பாதிக்கப்படாமல் இருந்து அவர் தசா-புக்தி நாதர்களுடன் தொடர்பில் இருப்பது கட்டிய வீட்டை வாங்குவதற்கான அமைப்பாகும். சுக்கிரனுக்குப் பதில் செவ்வாய் தசா-புக்தி நாதர்களுடன் தொடர்பு பெற்றால் அவர் நிலம் வாங்கி வீடு கட்டுவார் அல்லது வாங்கிய வீட்டை சீரமைத்துக் கட்டுவார்.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

மிதுன லக்ன ஜாதகம். பூமி ராசிகளுள் ஒன்றான 4 ல் பூமி காரகர் செவ்வாய் அமைந்துள்ளார். இவருக்கு உறுதியாய் வீடு வாகன வசதிகள் அமையும். 2 ல் ராகு கடக ராசியில் அமைந்தது நல்ல வெளிநாட்டு வருமானம் தரும் அமைப்பாகும். 2 ல் ராகுவுடன் லக்னாதிபதியும், 4 ஆமதிபதியுமான புதன் வக்கிரம் பெற்று அமைந்துள்ளார். வக்கிர கிரகங்களை ராகு கேதுக்கள் பாதிப்பதில்லை என்பதால் இங்கு 2 ஆமிட காரகங்கள் பாதிக்காது. மாறாக 2 ஆமிட காரகங்களும், ராகுவோடு இணைந்த புதனின் காரகங்களும் பெருகும். 2 ஆமிடம் பலகால்களை கொண்ட நண்டை குறிப்பதால் இவருக்கு குடும்பமும், சம்பாத்தியமும் வசதிகளும் ஒன்றுக்குப் பலவாய் பெருகும். ஜாதகர் வெளிநாட்டில் பல தொழில்கள் செய்து சம்பாதிக்கிறார். ஜாதகருக்கு 3 குடும்பங்கள் உண்டு. ராகுவுடன் இணைந்த புதன் 1 – 4 அதிபதி என்பதால் இவருக்கு வீடு வாகன வசதிகளும் ஒன்றுக்குப் பலவாராகவே அமையும்.

ஜாதக விஷயங்களை ராசிக்கட்டத்தின் மூலம் ஆராய்ந்தாலும் தசா-புக்தி அடிப்படையில் ஆராயும்போது பாவகச் சக்கரத்தை பயன்படுத்த வேண்டும். பாவகத்தில் வீடு காரகர் சுக்கிரன் 12 ல் இருந்து லக்னத்திற்கு வந்து அமைகிறார். சுக்கிரனும் லக்னாதிபதி புதன் போன்றே வக்கிரம் என்பதால் வக்கிர கிரகங்கள் ஒருங்கிணைந்து செயல்படும் என்பதற்கேற்ப சுக்கிரனும், புதனும் நிரந்தர வக்கிர கிரகங்களான ராகு-கேதுக்களுடன் இணைந்து செயல்படும். வக்கிர கிரக காரக விஷயங்களில் ஜாதகருக்கு விடாப்பிடியான எண்ணம் இருக்கும் என்பதே வக்கிரத்தின் பொருள்.  4 ல் செவ்வாய் இருந்தாலும் பாவக சக்கரத்தில் லக்னத்தில் வக்கிர சுக்கிரன் வந்து கௌரவ காரகர் சூரியனுடன் அமர்வதால் இவர் நிலம் வாங்கி வீடு கட்டுவதைவிட, மதிப்பான கட்டிய வீடு விலைக்கு வந்தால் வாங்கவே விரும்புவார். இவர் வீடு வாங்குவாரா? மாட்டாரா? என்பதை தசா-புக்திகள் கூறிவிடும். ஜாதகருக்கு நடக்கும் குரு தசை, வீடு பாவகமான 4 க்கு 12 ல் மூன்றில் இருந்து தசை நடத்துவது வீட்டை விற்கும் அமைப்பைத்தான் கூறுகிறது. 3 ஆமிட கிரகம் 4 ஆமிடத்துடன் அல்லது 4 ன் திரிகோணங்களான 8, 12 ஆகிய பாவகங்களுடன் தொடர்பு பெற்றால் மட்டுமே ஜாதகர் வீடு வாங்க இயலும். 3 ஆமிடம் 4 ஆமிடத்துடன் தொடர்பு பெறுவது ஒரு வீட்டை விற்று மற்றொரு வீட்டை அல்லது சொத்தை வாங்குவதை குறிக்கும். இங்கு 4 ல் இருந்து தசை நடத்தும் குரு வீட்டை விற்கும் அமைப்பை குறிப்பிடுகிறது. ஆனால் அவர் 8 ல் நிற்கும் கேதுவின்  மகம்-4 ல் நிற்பதை கவனிக்க. 8 ஆமிடம் 4 ன் திரிகோணமாக அமைகிறது. திரிகோண கிரகங்கள் குடும்ப உறுப்பினர்கள் போல ஒருங்கிணைந்து செயல்படும் என்பதுடன், கேது 8 ல் 4 ஆமிட செவ்வாயின் அவிட்டம்-2 ல் நிற்பதால் இந்த ஜாதகருக்கு மூன்றாமிட தசையில் வீடு வாங்கும் யோகம் உண்டு. 3 ஆமிடம் 4 ன் விரையம் என்பதால் இவர் குரு தசையில் ஒரு வீட்டை விற்று மற்றொரு வீடு வாங்குவார்.

ஏன் இவர் ஒரு வீட்டை விற்கிறார் மற்றொரு வீட்டை வாங்குகிறார் என காண்போம். லக்னத்தில் ஜாதகருக்கு ராஜ கிரகம் சூரியன் இருப்பதாலும். 4 ஆமிட செவ்வாய் சூரியனின் உத்திரம்-2 ல் நிற்பதாலும் ஜாதகர் மதிப்பான உயர்வான வீட்டையே விரும்புவார். தசா கிரகம் குரு மதிப்பானவற்றை விரும்பும் சூரியனின் வீட்டில் இருந்தாலும் அது 4 க்கு விரைய பாவகம் என்பதாலும், 3 ஆமிட குரு பாதிப்பை கூறும் 8 ஆமிட தொடர்பு பெறுவதாலும் இவரது வீடு பெரிய மதிப்பான வீடல்ல. இதனால் இவர் தனது வீட்டை விற்று மதிப்பான மற்றொரு வீட்டை வாங்க விரும்புகிறார். இதை வீடு மற்றும் அசையா சொத்துக்களுக்குறிய சதுர்த்தாம்ச சக்கரம் மூலம் மேலும் தெளிவாக காண்போம் வாருங்கள்.

சதுர்த்தாம்சத்தில் லக்னமும் 4 ஆமிட செவ்வாயும் வர்கோத்தமம். இது ஜாதகர் வீடு பற்றிய தெளிவான நோக்கமுடையவர் என்பதை குறிப்பிடுகிறது. லக்னத்தை சூரியன் பார்ப்பதால் ஜாதகர் தனது வீடு மதிப்பானதாக இருக்க வேண்டும் என விரும்புவார். தசாநாதர் குரு வீடு பாவகம் 4 க்கு 3 ஆமிடமும் லக்னத்திற்கு 6 ஆமிடமுமான விருட்சிகத்தில் 4 ஆமதிபதி புதனின் கேட்டை நட்சத்திரத்தில் இருந்து தசை நடத்துகிறார். புக்திநாதர் ராகு 4 க்கு 8 ல் மேஷத்தில் இருந்து புக்தி நடத்துகிறார். இது ஜாதகர் தனது வீட்டை விற்கும் அமைப்பை தெரிவிக்கிறது. கோட்சாரத்தில் கன்னிச்  செவ்வாயை ராகு-கேதுக்கள் தொடர்புகொள்வதால் இவர் வீட்டை விற்பது உறுதி. 11 ல் மேஷத்தில் 5 ஆமதிபதி சுக்கிரனின் பரணியில் அமைந்த ராகு 5 ஆமிடத்தை பார்க்கிறார். 5 ஆமிடம் என்பது வாடகை தாரரை குறிக்கும். இதனால் இவர் தான் தற்போது குடியிருக்கும் வாடகை வீட்டை வாங்க விரும்புகிறார். அதற்கு தனது சொந்த வீட்டை விற்றுவிட எண்ணுகிறார். இவர் வாடகை வீட்டை வாங்குவாரா என்றால் குரு தசை முடிவில் இருக்கும் ஜாதகர் அடுத்து வரும் தசாநாதர் சனி 4 ன் திரிகோணம் 12 ல் நின்று 9 ஆமிட சுக்கிரனோடு பரிவர்த்தனை பெறுவதால் சனி தசையில் தற்போது குடியிருக்கும் வாடகை வீட்டை வாங்கிவிடுவார். அதற்காக பேசி முடித்துவிட்டார். 12 ல் இருந்து 6 ஆமிட குருவின் பார்வையை அடுத்த தசாநாதர் சனி பெறுபவதால் தனது வீட்டை விற்றுக் கிடைக்கும் பணத்துடன் கூடுதலாக வங்கிக் கடன் பெற்று தற்போதைய வாடகை வீட்டை வாங்குவார். சனி-சுக்கிர பரிவர்த்தனை ஜாதகர் சனி தசையில் வீடு வாங்கி இடம் மாறுவதை குறிக்கிறது.

மேற்கண்ட அமைப்புகள் ஒருவர் தனது சொந்த வீட்டை விற்று, மற்றொரு வீட்டை வாங்குவதை குறிக்கிறது. இதை ஒரு தேர்ந்த ஜோதிடர் தெளிவாக ஆராய்ந்து கூற இயலும்.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501   

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

வெளிநாட்டு வேலைக்கு வருட கிரகப் பெயர்ச்சிகளால் பாதிப்பு வருமா? 

தற்போதைய உலகளாவிய சூழல்களில் வெளிநாட்டில் பணிபுரிந்துகொண்டிருக்கும் அன்பர்களுக்கு தங்கள் வேலையை தக்கவைத்துக்கொள்ள முடியுமா? என்பது கவலைக்குரிய விஷயமாகவுள்ளது. வருடாந்திர கிரகப் பெயர்ச்சிகள் பொதுவாக அனைவர் வாழ்விலும் மாறுதல்களைக் கொண்டுவரும் பொதுவான நிகழ்வுகளே. இந்நிகழ்வுகள் தற்காலிகமானவையா?

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு…

அடித்தட்டு மக்கள் பணம் சம்பாதிக்க நாய் படாத பாடு படுகிறார்கள் என்றால், தனவந்தர்கள் பணத்தை வைத்து அடிக்கும் கூத்துக்களை பார்த்தால் சில நேரங்களில் அட கொடுமையே என்று இருக்கும். சமீபத்தில் என்னிடம் ஒரு அன்பர்

மேலும் படிக்க »
சந்திரன்

ஜாதகம் சரியானதா?

கால்குலேட்டர் வந்த பிறகு கணக்குப் போடுவது மறந்துவிட்டதா? என்றால் அதில் ஓரளவு உண்மையும் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. பெரும்பாலோருக்கு வாய்ப்பாடுகள் மறந்துவிட்டிருக்கும்.  இன்று கூகிள் ஜெமினி போன்ற கைபேசி சேவகர்கள் வந்துவிட்ட பிறகு

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

மூன்றாமிடமும் காமமும்!

பல்வேறு ஊர்களில் இருந்து என்னை தொடர்புகொள்ளும் மனிதர்களை அவர்களது ஜாதகங்கள் மூலம் படிக்கிறேன் என்றால் அது மிகையல்ல. நம் பார்வையில் கடந்து செல்லும் பல மனித முகங்களில் ஒரு சிநேகப் புன்னகையை நாம் கண்டாலும்

மேலும் படிக்க »
கல்வி

நீச புதன் மருத்துவராக்குமா?

ஒரு கிரகத்தின் செயல்பாடு அதை மட்டும் சார்ந்திருப்பதில்லை. அதனோடு தொடர்புடைய பல்வேறு காரணிகளை ஆராய்ந்தே அதன் செயல்பாட்டை அறிய இயலும். உதாரணமாக ஒரு  கிரகம் ஜாதகத்தில் சாதகமற்ற நிலையில் இருந்தாலும்கூட அது நின்ற ராசி,

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

நிலாச் சோறு!

வாழ்வில் சில விஷயங்கள் நமக்கு எளிதில் வாய்த்துவிடும். சில விஷயங்கள் நம்மைத் தேடி வரும் என்று கூடச் சொல்லலாம். சில விஷயங்கள் எவ்வளவு தேடிச் சென்றாலும்  கிடைக்காமல் நம்மை ஏங்க வைத்துவிடும். கல்வி, வேலை,

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil