தங்க மகள் தரமற்ற காதலை நாடுவது ஏன்? 

ஒவ்வொரு மனிதனின் பிறப்பும் ஒரு கர்மாவை அனுபவித்துக் கழிக்கவே. இதில் மற்றவருக்கு ஒருவரது செயல் உடன்பாட்டை தரலாம் அல்லது தராமலும் போகலாம். ஒருவர் சகிப்புத்தன்மையோடு மற்றவரை ஏற்றுக்கொள்ளும்போதுதான் உலகம் அமைதியடைகிறது.  இது சொல்வதற்கு எளிது. செயல்பாட்டில் கடினம். கருத்து வேறுபாடுகள் நிரம்பியதுதானே உலகம். அதில்  காலம் தள்ளி கர்மாவை கழிக்கத்தானே இறைவன் நம்மை இந்த கர்ம பூமிக்கு அனுப்பியிருக்கிறான். இங்கு வந்து கருத்து வேறுபாடுகளே எனக்கு எதிராக இருக்கக்கூடாது என்று எண்ணுவது பயனற்றது. தாய்க்கு உள்ள மனோபாவம் மகளுக்கு இல்லை. பெற்றோரின் சிந்தனைகளை மெத்தப்படித்த வளர்ந்த பிள்ளைகள், பழம் பஞ்சாங்கங்கள் என்று ஒதுக்குகின்றன. ஆனால் பழமைக்கும் இந்தியப் புதுமைக்கும் ஊடாக ஒரு மெல்லிழை இருப்பதால்தான் இதர தேசங்களைவிட இந்தியா பண்பாட்டில் சிறந்து விளங்குகிறது. இந்த மெல்லிழை அறுபடும்போது பல ஆண்டுகளாக காப்பாற்றி பாதுகாத்து வந்த கலாச்சாரங்கள் சீர்கெடுகின்றன. கால மாற்றத்தில் ஏற்கத்தக்க மாற்றங்களை மேற்கொள்ளாவிட்டால் கலாச்சாரங்கள் காலாவதியாகிவிடும். ஆனால் இன்றைக்கு பக்கத்து வீடு அத்தை வீடா, சித்தி வீடா என்ற பார்க்காத காதல்கள் நமது கலாசாரத்தை தவிடுபொடியாக்குகின்றன.

நல்ல கலாசாரத்தில் வளர்ந்து நன்கு படித்து நல்ல பணியில் இருக்கும் தங்கள் மகள் ஏன் தரமற்ற காதலை நாடுகிறாள்? என்ற கேள்வியுடன் என்னை அணுகிய தாயார் கொடுத்த மகளின் ஜாதகம்தான் நீங்கள் கீழே காண்பது. 

மேஷ லக்னாதிபதி செவ்வாய் பாக்யாதிபதி குருவோடு இணைந்து பாக்ய ஸ்தானத்தில் நிற்கிறார். லக்ன புள்ளி பரணியாகி, லக்னத்தை குரு பார்க்கிறார். எனவே கலாச்சாரம் மிக்க குடும்பத்தில் ஜாதகி பிறந்துள்ளது உறுதியாகிறது. ஜாதகிக்கு சிறந்த கல்வியையும் நற்குணத்தையும் இந்த அமைப்பு வழங்கும். ஆனால் லக்னத்தை பாதக ஸ்தானத்தில் இருந்து சனி மூன்றாவது பார்வையாக பார்ப்பதுடன் சந்திரனையும் நேர் பார்வை செய்கிறார். இது ஜாதகிக்கு பணிபுரியும் எண்ணத்தை ஏற்படுத்துவதோடு, சிந்தனையில் தரமற்ற எண்ணத்தை ஏற்படுத்துவார். சனி லாப ஸ்தானத்தில் இருந்து லக்னத்தை பார்ப்பதால் தனக்கு லாபகரமான சம்பாத்தியம் கொடுக்கப்பட்டால்தான் ஜாதகி பணிபுரிவார். சனி காதல் பாவத்தில் உள்ள சந்திரனை பார்ப்பதால் ஜாதகிக்கு சனி, சந்திரன், 5 ஆமதிபதி சூரியன் ஆகிய தசா புக்திகளில் காதலில் ஈடுபாடு ஏற்படும்.  

ஒருவருக்கு காதல் எண்ணம் உண்டா என அறிய சந்திரனுக்கும் 5 ஆம் பாவம் , 5 ஆம் அதிபதிக்கும் உள்ள தொடர்பை கவனித்தால் போதும். இங்கு சந்திரன் 5 ல் உள்ளதால் ஜாதகிக்கு காதல் எண்ணம் உண்டு. காதல் எண்ணம் இருந்தால் காதலித்துவிடுவார்களா என்ன?. தன்னை பாதிப்பவரை கண்டுகொண்ட பின்பே காதலில் இறங்குவர். அப்படி ஒருவரைக்கண்டு மனதை பறிகொடுத்த பின்தான் காதல் ஏற்படும். 

ஒருவர் காதலித்துக்கொண்டிருப்பதை அறிய தசா-புக்திகள் அனுமதிக்க வேண்டும். மேற்கண்ட ஜாதகிக்கு ஐந்தாமதிபதி சூரியனின் தசை நடக்கிறது. சூரியன், காதலில் காரக கிரகம் புதனின் கேட்டை நட்சத்திரத்தில் இருக்கிறார். இதனால் தற்போது ஜாதகி காதலித்துக்கொண்டுள்ளார். ஒருவருக்கு காதலிக்க வாய்ப்புள்ள தசா-புக்தி நடக்கிறது என்றால் இப்போது காதலிக்கிறாரா அல்லது இனிமேல் தான் காதலிக்கவுள்ளாரா? என்ற கேள்வி எழும். இதை அறிய எளிய வழி கோட்சாரத்தை ஆராய்வதே. நான் இந்த ஜாதகத்தை ஆய்வு செய்த நாளில் கோட்சார சந்திரன், லக்னத்திற்கு 5 ஆம் பாவத்தில் ஜனன காலத்தில் தான் நின்ற அதே சிம்மத்தில் இருப்பதை கவனியுங்கள். இது  ஜாதகி காதலிப்பதை தெளிவாக்குகிறது. ஜனன சந்திரனின் மேலேயே கோட்சார சந்திரன் நிற்பது ஜாதகி காதலில் உறுதியாக உள்ளதை தெளிவாக குறிப்பிடுகிறது. 

காதலரின் நிலை அறிய ஜனன, கோட்சார புதனின் நிலையை கவனிக்க வேண்டும். காதலின் காரக கிரகம்  புதன், கோட்சாரத்தில் வக்கிர கதியில் சந்திரனின் ரோகிணியில் நிற்பது காதலில் பிடிவாதத் தன்மையை குறிப்பிடுகிறது.  ஜாதகத்தில் புதன், செவ்வாய் ஆகிய இருவரும் சூரியனால் அஸ்தங்கப்பட்டுள்ளனர். இது காதலன் மற்றும் கணவன் ஆகிய இருவருமே ஜாதகியின் தகுதிக்கு சமமானவர்கள் அல்ல என்பதை குறிப்பிடுகிறது. 

காதலின் தற்போதைய நிலையை அறிய காதலின் பாவாதிபதியும் தசா நாதருமான சூரியனின் நிலையை கோட்சாரத்தில் கவனித்தால் போதும். கோட்சாரத்தில் சூரியன் ராகுவுடன் கிரகண தோஷத்தில் உள்ளார். இதனால் இவரது காதல் பாதிப்பில் உள்ளது தெளிவாகிறது. பெற்றோர்களின் எதிர்ப்பு அதற்கு காரணம்.   

காதல் வெற்றி பெறுமா? எனும் கேள்வி எழும்போது 5 ஆமதியும் புதனும் வலுவாகி தசா நாதன் சாதகமான நிலைபெற்று தசை நடத்தினால்தான் காதல் நிறைவேறும்.  இந்த ஜாதகத்தில் புதன் அஸ்தங்கம் பெற்று, 5 ஆமதி 8ல் இருந்து தசை நடத்துவதால் ஜாதகி காதலனை மணம் முடிக்க மாட்டார். ஜனன ராகு முதலில் தொடுவது ஜனன சந்திரனைத்தான் என்பதால் திருமணம் செய்துகொள்ள உள்ள மணமகனிடம் ஜாதகியின் கடந்த கால காதலை கூறி திருமணம் செய்து வைப்பதே நல்லது. இல்லையேல் திருமண வாழ்வில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும். 

இப்போது அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழும் சூழலில்தான் ஜோதிடர்கள் பொறுப்புணர்ந்து பதிலளிக்க வேண்டும். இந்த ஜாதகத்தில் கௌரவத்தின் காரக கிரகம் சூரியன், அவமான ஸ்தானமான 8ல் இருந்து தசை நடத்துவதால் ஜாதகியின் காதலை வீட்டில் ஏற்றுக்கொள்ளாததால் அவமானங்களை சந்தித்துக்கொண்டுள்ளார். அதே சமயம் பெற்றோர் அனுமதி இல்லாமல் திருமணம் செய்துகொள்ள ஜாதகியும் மறுக்கிறார்.  இப்போது ஜாதகிக்கு மனத்தெளிவு தேவை. கோட்சார குரு, கோட்சார ராகுவை கடந்து லக்னத்திற்கு 2 ல் ரிஷப ராசிக்கு வந்து ஜனன சூரியனை பார்க்க வேண்டும். அதற்கு முன் திருமணம் செய்தால் திருப்தியற்ற திருமணத்தால், தசாநாதரான 8 ஆமிட சூரியன் மணமுறிவை தந்துவிடுவார். 

ஜாதகத்தில் புனர்பூ தோஷம் உள்ளதால் தற்போது துவங்கவுள்ள சனி புக்தி திருமண வாய்ப்பை தந்தாலும் சனியை நோக்கி கேது வருவதால் தடையை ஏற்படுத்தி நிறுத்திவிடும். கேதுவின் கோட்சார நிலை இதை தெளிவாக உணர்த்துகிறது. சனி புக்தியை அடுத்து புதனோடு நட்சத்திர பரிவர்த்தனை பெறும் கேது புக்தியில் கோட்சார குரு ரிஷபத்தில்  இருக்கும் நிலையில் ஜாதகிக்கு திருமணம் செய்வது பாதிப்பை தவிர்க்கும்.  தனது தங்க மகள் தரமற்ற காதலை நாடுவது ஏன் என்ற கேள்வியுடன் அணுகிய தாயிடம் “காதல் தரத்தை மட்டுமே பார்ப்பதில்லை. அது அதற்கும் மேற்பட்ட ஒரு உணர்வு என்பது ஏன் உங்களுக்கு புரியவில்லை?” என்றேன். கேள்விகள் எளிது. மனம் எதார்த்தமான பதில்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.   

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

கடுமை காட்டும் கிரகங்களும் கருணை காட்டுவது எப்போது?

வர்க்கங்களில் செவ்வாய்.

ஜோதிடத்தில் ஒரு கிரகம் எப்படிச் செயல்படும் என்பதை அறிய எண்ணற்ற  யுக்திகள் கடைபிடிக்கப்படுகின்றன. உதாரணமாக அஷ்டவர்க்கத்தை சொல்லலாம். ஒரு ஜோதிடர் எத்தனை யுக்திகளை கற்று வைத்துள்ளாரோ? அத்தனை துல்லியம் அவரது பலனில் வெளிப்படும். ஜோதிடத்தில்

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

பிரியாத வரம் வேண்டும்!…

“ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்” போன்ற திரையிசைப் பாடல்களை கேட்கும்போது நமது இளமை புதுப்பிக்கப்படுகிறது. சமீபத்தில் இப்பாடலை கேட்டபோது இதன் வரிகள் இன்றைய திருமண வாழ்வில் எத்தனை பாடு படுத்துகிறது

மேலும் படிக்க »
ஜாமக்கோள் ஜாலங்கள்

சரியும் சந்தையை சாதகமாக பயன்படுத்தலாமா?

இன்று வேலை, திருமணம், பொருளாதாரம் ஆகியவற்றை பற்றி ஜோதிடர்களை தொடர்புகொள்ளும் அளவுக்கு சமமாக தற்போது பங்கு வணிகம் சார்ந்தும் ஜோதிடர்களை அணுகுகின்றனர் என்பது ஆச்சரியம். முந்தைய காலங்களில் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக நீண்டகால தொடர்

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

புத்திசாலிகள் வெல்லுமிடம்!

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனிச்சிறப்பான குண நலன்கள் உண்டு. ஆனால் அவை மற்றொரு கிரகத்துடன் இணைகையில் அதற்கு குணமாறுபாடு ஏற்படும். இணையும் கிரக குணத்தையும் கிரகம் கிரகிப்பதுதான் இதற்குக் காரணம். இதில் மூன்றாவது கிரகமும்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

திருமணத்தடை பரிகாரம்.

இன்று பெரும்பாலான இளைஞர் சமுதாயத்தினருக்கு திருமணத் தடை என்பது பெரும் மன உழைச்சலைத் தருகிறது. கடந்த தலைமுறையினருக்கு அதாவது 199௦ க்கு முன் இருந்தவர்கள் நமது சமுதாயம் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைத்த காலத்தில்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

Beware of Scammers

உலகம் வேகமாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வறுமையின் பிடியில் இருந்து பலகோடி மக்களை தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியால் மீட்டெடுத்துள்ளது என உலக வங்கி பாராட்டியுள்ளது. பலதரப்பட்ட காலாச்சார வேறுபாடுகளைக்கொண்டிருந்தாலும், அடிப்படையில்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil