ஜாதகப் பொருத்தமா? நட்சத்திரப் பொருத்தமா?

ஜோதிட நுட்பங்களை வளர்த்துக்கொள்ள அவ்வப்போது எனது ஜோதிட நண்பர்களுடன்  அளவளாவுவது வழக்கம். அப்படி ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது திருமணப் பொருத்தங்களில் ஏற்படும் குழப்பங்கள் பற்றி பேச்சு வந்தது.  நூல்களில் கூறப்பட்ட அல்லது பயின்ற விதிகளை ஆராய்ந்து பார்க்காமல் அப்படியே பயன்படுத்துவதால் பல குழப்பங்கள் வரத்தான் செய்யும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஜோதிட விதிகள் அன்றைய காலச் சூழ்நிலைகளை முதன்மைப்படுத்தியே எழுதப்பட்டிருக்கும். அவற்றை அப்படியே இன்றைய சூழலுக்குப் பயன்படுத்துவது சரியாக இருக்காது. இதை அனுமானித்துத்தான் பண்டைய காலத்திலேயே காலதேச வர்த்தமானம் எனும் கோட்பாட்டை குறிப்பிட்டுள்ளனர். உதாரணமாக தினப்பொருத்தம் பிராமணர்களுக்கு மிக முக்கியம் என்றொரு கோட்பாடு உள்ளது. ஆனால் அது கிருத, திரேதா, துவாபர யுகங்களுக்குப் பொருந்துவது. கலி காலத்தில் அனைத்து வர்ணத்தவரும் தங்கள் வர்ணாசிரம தர்மங்களை விட்டு வேறு தர்மங்களுக்கு மாறக்கூடிய சூழல் ஏற்படும் என்பதால் கலிகாலத்தில் பிராமணர்கள் தினப்பொருத்தத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை என்று கூறப்பட்டுள்ளது. நட்சத்திரப் பொருத்தங்கள் எந்தச் சூழ்நிலையிலும் ஆணும் பெண்ணும் இணை பிரியாமல் வாழ வேண்டும் என்ற அடிப்படையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளன. வயல்வெளிகளில் வேலை செய்வதாகட்டும், வீடு கட்டுவதாகட்டும் (போர்களில் பங்கெடுப்பது தவிர) இணைந்து இயங்க வேண்டும் என்பன் அடிப்படையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளன.  ஆனால் இன்றைய காலச் சூழல் மாறிவிட்டது. ஆணும் பெண்ணும் இணைந்து பணிக்குச் செல்வதில்லை. பணிக்குச் சென்றாலும் இருவருக்கும் வேறு வேறு இடங்களில்தான் பெரும்பாலும் பணி கிடைக்கும். இம்மாதிரியான சூழலில் நட்சத்திரப் பொருத்தங்களின் தாக்கம் எந்த அளவு என்பதை ஜோதிடர்கள் சுய ஆய்வு செய்து அறிவது அவசியம். நட்சத்திரப் பொருத்தங்களில் முக்கியமாக இன்றைய காலத்திலும் ரஜ்ஜு மற்றும் யோனியை பார்த்தால் போதுமானது, ஜாதகப் பொருத்தமே முதன்மையானது என்பது  பெரும்பாலான ஜோதிடர்களில் கருத்தாக உள்ளது. ஆனால் இக்கருத்திலும் மாறுபாட்டை நடைமுறையில் பல ஜாதகங்களில் நான் காண்கிறேன். இக்கருத்திற்கேற்ற உதாரணங்களுடன் ஒரு பதிவு எழுத நண்பர் கேட்டுக்கொண்டதற்கிணங்க இன்றைய பதிவு வருகிறது.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

ஜாதகர் 1984 ல் பிறந்த ஒரு ஆண். விருட்சிக ராசி கேட்டை நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் புதன் தசையில் பிறந்தவர். தற்போது சூரிய தசையில் இருக்கிறார். லக்னாதிபதி சனி துலாத்தில் உச்சமாகி வக்கிரம் பெற்று நீச்சத்திற்கொப்பான நிலையில் உள்ளார் (உச்ச வக்கிரம் = நீச பலன்). ஆனால் சனி கும்ப லக்னத்தில் நிற்கும் சுக்கிரனுடன் பரிவர்த்தனையாகிறார். பரிவர்த்தனையால் சனி வக்கிரத்திலிருந்து விடுபட்டுவிடுவார். இப்படி தனது மூலத் திரிகோண வீட்டில் வலுவாக அமரும் சனி 3, 7, 1௦ ஆமிடங்களை கட்டுப்படுத்துவார். 7 ஆமிடத்தை சனி, குரு ஆகியோர் பார்ப்பதால் இவருக்கு அமையும் மனைவிக்கு சனியின் நேர்மை, நிதானம், குருவின் பெருந்தன்மை ஆகிய உத்தம குணங்கள் இருக்கும். 5, 8 அதிபதி புதன் நீசம் பெற்று 7 ஆமதிபதி சூரியனுடன் இணைந்து 2 ல் அமர்ந்தாலும், இவர்களுக்கு வீடு கொடுத்த குரு ஆட்சி பெறுவதால் புதன் நீச பங்கமடைவார். 5 ஆமதிபதி புதன் நீச பங்கப்பட்ட நிலையில், 5 ஆமிடத்தை தனது மூலத் திரிகோண வீட்டில் இருந்து குரு பார்ப்பதால் 5 ஆமிடம் புனிதமடைகிறது. இதனால் ஜாதகருக்கு நல்ல குழந்தைச் செல்வங்கள் வாய்க்கும். 7 ஆமிடமான சிம்மத்தை களத்திர காரகர் சுக்கிரனின் பூராடம்-2 ல் இருந்து குரு பார்ப்பதால் இவருக்கு வாய்க்கும் மனைவி குணவதியாக லக்ஷ்மி கடாக்ஷம் நிரம்பியவராக வருவார். சூரியன் 7 ஆமதிபதியாகி தனது உச்ச வீட்டை நெருங்குவதால் மனைவி கௌரவம் மிக்கவர். மனைவி வந்தவுடன் ஜாதகருக்கு செல்வச் செழிப்புகள் கூடும். மனைவியும் நிர்வாகத் திறன் மிக்கவராக உயர்வார். நவாம்சத்தில் மீனத்தில் சுக்கிரன் உச்சமடைவதால் மனைவியால் இவர் மிகுந்த யோகத்தை அடைவார். இத்தகைய ஜாதக அமைப்பை மீறி மோசமான மனைவி ஜாதகருக்கு அமைந்துவிட ஜாதகம் அனுமதிக்காது. இப்போது மனைவி ஜாதகத்தை பார்ப்போம்.

விருட்சிக லக்னம், தனுசு ராசி, மூல நட்சத்திரம் முதல் பாதம். கணவரின் ஜாதகத்தில் 7 ஆமிடத்தை குரு பார்ப்பதாலும் 7 ஆமதிபதி சூரியன் குரு வீட்டில் நின்றதாலும், மனைவி தனுசு ராசி அல்லது தனுசு லக்னத்தில்தான் அமைவார் என்பது விதி. மனைவி ஜாதகத்தில் 7 ஆமிடத்தை செவ்வாய் மட்டுமே 4 ஆம் பார்வையாக பார்ப்பதால் கணவர் செவ்வாயின் ராசி அல்லது லக்னங்களில்தான் அமைய வேண்டும். கணவர் விருட்சிக ராசி. மனைவி ஜாதகத்தில் 7 ஆமதிபதி சுக்கிரன் உச்சம் பெற்று மீனத்தில் புதனுடன் அமைந்துள்ளதால் ஜாதகிக்கு அமையும் கணவர் செல்வச் செழிப்பானவராகத்தான் அமைவார். சாதாரணமான கணவராக அமைந்தால் கூட, அவர் ஜாதகியை திருமணம் செய்ததும் வாழ்வில் செழிப்பான நிலைக்கு மனைவியின் ஜாதகம் உயர்த்திவிடும். 2 ஆமிடத்தில் அமைந்த ராகுவையும் சந்திரனையும் குரு பார்ப்பதால் ஜாதகிக்கு தன யோகங்கள் உண்டு. கவனிக்க கணவர் ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த கும்பத்தில் கணவரின் செவ்வாய் அமைந்துள்ளார். பரிவர்த்தனைக்குப் பிறகு செவ்வாயுடன் சனி சேர்ந்துவிட இவர்களை மனைவியின் சிம்ம குரு பார்க்கிறார். கணவரின் தனுசு குருவும், மனைவியின் சிம்ம குருவும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்கின்றனர். மனைவி ஜாதகத்தில் 5 ல் சுக்கிரன் உச்சம். இதனால் ஜாதகிக்கு புத்திர பாக்கியம் நிச்சயம் உண்டு. உறுதியாக பெண் குழந்தை இருக்கும் எனலாம்.  5 ஆமதிபதி குருவானவர் சூரியன் வீட்டில் நின்று, குருவிற்கு வீடு கொடுத்த சூரியன் உச்சமானதால் ஜாதகிக்கு ஆண் குழந்தை பாக்கியமும் உண்டு. இருவர் ஜாதகத்திலும் குருவிற்கு சனி தொடர்பு ஏற்படுகிறது. இது கணவரின் தொழிலில் மனைவியும் இணைந்து செயல்படுவார் என்பதை குறிப்பிடுகிறது. கணவர் ஜாதகத்தில் 7 ஆமிடம் சூரியனின் வீடாக வருவதால் மனைவி கௌரவம் மிக்கவர் என்று குறிப்பிட்திருந்தேன். மனைவி ஜாதகத்தில் சூரியன் உச்சமாகியுள்ளதை கவனிக்க. ஜாதகத்தில் சூரியன் உச்சமானால் அந்த ஜாதகர் கௌரவம் மிக்க நிலைக்கு வாழ்வில் உயர்ந்துவிடுவார் எனலாம்.

நட்சத்திரப் பொருத்தமும் ஜாதகப் பொருத்தமும்.

பெண்ணின் நட்சத்திரம் மூலம்-1. ஆணின் நட்சத்திரம் கேட்டை-2. நட்சத்திரப் பொருத்தத்தில் புத்திர விருத்தியை குறிப்பிடும் மகேந்திரம் இல்லை. ஆனால் இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். முதல் குழந்தை ஆண். இரண்டாவது குழந்தை பெண்.

இருவருக்கும் வசியப் பொருத்தமும் இல்லை. ஆனால் ஆணின் ஜாதகத்தில் 7 ஆமிடம் குரு பார்வை பெற்று, 7 ஆமதிபதி சூரியன் உச்சத்திற்கு நெருங்கிய நிலையிலும், களத்திர காரகர் சுக்கிரன் தனது மூலத் திரிகோண வீட்டிற்கு பரிவர்த்தனையாகி செல்வதும் மனதிற்கினிய அதிஷ்டமான மனைவியை அடைவதை குறிப்பிடுகிறது. பெண்ணின் ஜாதகத்தில் 7 ஆமிடத்தை லக்னாதிபதி செவ்வாய் பார்க்கிறார். 7 ஆமதிபதி சுக்கிரன் உச்சமடைந்துள்ளார். களத்திர காரகர் செவ்வாயை குரு பார்க்கிறார். இவை ஜாதகிக்கு சிறப்பான புரிதல் மிக்க கணவர் அமைவார் என்பதை குறிப்பிடுகிறது. உண்மையில் இருவரும் நல்ல புரிதலுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

நட்சத்திரப் பொருத்தத்தில் முக்கிய பொருத்தமான ரஜ்ஜுப் பொருத்தம் இல்லை. ரஜ்ஜுப் பொருத்தம் என்பது மாங்கல்ய பாக்கியத்தை குறிப்பிடுவதாகும். பெண்ணின் மாங்கல்ய ஸ்தானமான 8 ஆமிடத்தில் கேது அமைந்துள்ளது சிறப்பல்ல. 8 ஆமதிபதி புதன் நீசம் பெற்றதும் சிறப்பல்ல. ஆனால் புதன் மீனத்தில் உச்ச சுக்கிரனுடன் இணைந்து நீச பங்கப்படுவதால் ஜாதகிக்கு மாங்கல்ய பலம் சிறப்படைகிறது. பெண்ணின் மூலமும் ஆணின் கேட்டையும் பாத ரஜ்ஜில் வருகிறது. மூலம் ஆரோகண ரஜ்ஜு என்றால் கேட்டை அவரோகண ரஜ்ஜூவாகும். இது பாதிப்பை தராது. ஆனால் இதற்கும் ஒரு விதி விலக்கு உள்ளது. கணம், ராசி இரண்டில் ஏதேனும் ஒன்றாவது இருக்கும்படி பொருத்தினால்தான் இருவருக்குமிடையே விட்டுக்கொடுத்தலின் பேரில் பொருந்தாத ரஜ்ஜு பாதிக்காது. மூலத்திற்கும் கேட்டைக்கும் கணப் பொருத்தமும் ராசிப் பொருத்தமும்  உண்டு என்பது இந்த தம்பதிக்கு நல்ல நிலையாகும்.

நட்சத்திரப் பொருத்தத்தில் வேறுபாடுகள் இருந்தாலும் ஜாதகப் பொருத்தம் சிறப்பாக இருந்தால் நன்று. ஆனால் எந்த நிலையிலும் தசா-புக்திகளின் பங்கு முக்கியமானது. சிறப்பாக பொருந்தும் ஜாதகங்களின் ஆணிவேரைக்கூட தசா-புக்திகள் அசைத்துவிடும் என்பதை அறிக. கணவர் ஜாதகப்படி புதன் தசையில் பிறந்த ஜாதகர் தற்போது உச்சத்தை நெருங்கும் சூரிய தசையில் உள்ளார். அடுத்து நீச பங்கப்பட்ட சந்திர தசையும், ஆட்சி செவ்வாய் தசையும் சிறப்பாகவே உள்ளன. ராகுவிற்கு வீடு கொடுத்த சுக்கிரன் லக்ன திரிகோணம் பெறுவதால் ராகு தசையும் சிறப்பே. தனித்த குரு தசைதான் ஜாதகருக்கு பாதிப்பை தரும் நிலையில் உள்ளது. குரு தசை கணவருக்கு அவரது 76 ஆவது வயதில்தான் வரும் என்பதால் அதுவரை பாதிப்பில்லை. மனைவியைப் பொறுத்தவரை சந்திர தசையில் இருக்கும் அவருக்கு அடுத்தடுத்த தசைகள் சிறப்பாகவே உள்ளன. மனைவிக்கு மாரக தசையான சனி தசை அவரது 8௦ வயதிற்கு பிறகே வரும் என்பதாலும் வாழும் காலம் இருவருக்கும் சிறப்பாகவே உள்ளன. முக்கியமாக வாழும் காலத்தில் 6, 8, 12 தொடர்புடைய தசைகள் வராமல் இருப்பது நன்று. அப்படியே வந்தாலும் 6, 8, 12 ஆமதிகள் வலுப்பெற்று லக்னத்திற்கு கேந்திர திரிகோணங்களில் அமர்ந்துவிட்டால் அந்த தசைகளும் யோகத்தையே செய்யும்.

இன்றைய காலத்தில் நட்சத்திரப் பொருத்தங்களைவிட ஜாதக ரீதியான பொருத்தங்கள் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும். நட்சத்திரப் பொருத்தங்களில் ஒரு சில பொருத்தங்கள்  முக்கியம் என்றாலும், பொருந்தாத நட்சத்திர  பொருத்தங்களை ஜாதக அமைப்பு ஈடு செய்கிறதா? என தேர்ந்த ஜோதிடரிடம் ஆலோசித்து தெளிவது நன்று. மிக முக்கியமாக ஒரு ஜாதகத்தில் திருமண ரீதியாக என்ன ப்ராப்தம் உள்ளதோ அந்த அமைப்பிற்கு மாறுபட்ட அமைப்புள்ள துணைவரை அந்த ஜாதகம் அனுமதிக்காது. இதனால் நல்ல ஜாதகங்களை எல்லாம் விட்டுவிட்டு பொருந்தாத ஜாதகத்தை பொருந்துகிறது என சொல்லச் சொல்கின்றனர் என்ற மன வருத்தத்தில் பல ஜோதிடர்கள் பொருத்தம் பார்பதையே தவிர்க்கிறார்கள். ஒரு நல்ல ஜோதிடர் நல்ல வாய்ப்புகளை மட்டுமே இனங்கண்டு கூற இயலும். எந்த ஒரு ஜாதகரின் விதியையும் மாற்றுவதற்கு ஜோதிடர்களால் முடியாது என்பதை புரிந்துகொண்டால் ஜோதிடர்களோ தொடர்புடைய ஜாதகர்களோ வருந்த வேண்டியதில்லை. 

மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,  

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

கடுமை காட்டும் கிரகங்களும் கருணை காட்டுவது எப்போது?

வர்க்கங்களில் செவ்வாய்.

ஜோதிடத்தில் ஒரு கிரகம் எப்படிச் செயல்படும் என்பதை அறிய எண்ணற்ற  யுக்திகள் கடைபிடிக்கப்படுகின்றன. உதாரணமாக அஷ்டவர்க்கத்தை சொல்லலாம். ஒரு ஜோதிடர் எத்தனை யுக்திகளை கற்று வைத்துள்ளாரோ? அத்தனை துல்லியம் அவரது பலனில் வெளிப்படும். ஜோதிடத்தில்

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

பிரியாத வரம் வேண்டும்!…

“ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்” போன்ற திரையிசைப் பாடல்களை கேட்கும்போது நமது இளமை புதுப்பிக்கப்படுகிறது. சமீபத்தில் இப்பாடலை கேட்டபோது இதன் வரிகள் இன்றைய திருமண வாழ்வில் எத்தனை பாடு படுத்துகிறது

மேலும் படிக்க »
ஜாமக்கோள் ஜாலங்கள்

சரியும் சந்தையை சாதகமாக பயன்படுத்தலாமா?

இன்று வேலை, திருமணம், பொருளாதாரம் ஆகியவற்றை பற்றி ஜோதிடர்களை தொடர்புகொள்ளும் அளவுக்கு சமமாக தற்போது பங்கு வணிகம் சார்ந்தும் ஜோதிடர்களை அணுகுகின்றனர் என்பது ஆச்சரியம். முந்தைய காலங்களில் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக நீண்டகால தொடர்

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

புத்திசாலிகள் வெல்லுமிடம்!

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனிச்சிறப்பான குண நலன்கள் உண்டு. ஆனால் அவை மற்றொரு கிரகத்துடன் இணைகையில் அதற்கு குணமாறுபாடு ஏற்படும். இணையும் கிரக குணத்தையும் கிரகம் கிரகிப்பதுதான் இதற்குக் காரணம். இதில் மூன்றாவது கிரகமும்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

திருமணத்தடை பரிகாரம்.

இன்று பெரும்பாலான இளைஞர் சமுதாயத்தினருக்கு திருமணத் தடை என்பது பெரும் மன உழைச்சலைத் தருகிறது. கடந்த தலைமுறையினருக்கு அதாவது 199௦ க்கு முன் இருந்தவர்கள் நமது சமுதாயம் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைத்த காலத்தில்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

Beware of Scammers

உலகம் வேகமாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வறுமையின் பிடியில் இருந்து பலகோடி மக்களை தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியால் மீட்டெடுத்துள்ளது என உலக வங்கி பாராட்டியுள்ளது. பலதரப்பட்ட காலாச்சார வேறுபாடுகளைக்கொண்டிருந்தாலும், அடிப்படையில்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil