தேளும் நண்டும் தம்பதியானால்…

“நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்”  என்ற எதிர்பார்ப்பு வாழ்க்கைத் துணை மீது ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ளது. ஆனால் இல்லறத்தின் வெற்றியே ஒருவருக்கொருவர் அனுசரணையாக, விட்டுக்கொடுத்து வாழ்வதிலும், துணைவர் வேறு தான் வேறு அல்ல என்று உணர்வதிலும்தான் உள்ளது. கருத்து வேறுபாடுகள் ஏற்படாவிட்டால் ஒரு தம்பதி வாழவே இல்லை என்றுதான் பொருள். துணைவரை புரிந்து செயல்படவும், அவர் பொருட்டு தம்மை தகவமைத்துக்கொள்ளவும் கருத்து வேறுபாடுகள்தான் உதவி புரிகின்றன என்பதை உணர வேண்டும். ஒருவரின் கருத்து வேறுபாடுகளுக்கான காரணத்தை புரிந்துகொள்ள முடியாவதவர்களும், துணைவருடன் மாறுபடும் கருத்துக்களை வெளிப்படுத்தாமல் மறைப்பவர்களும் ஒருபோதும் மண வாழ்வில் வெற்றி பெறுவதில்லை. எப்படிப் பார்த்தாலும் இரு வேறு வாழ்க்கை சூழலில் பிறந்து வளர்ந்தவர்கள் ஒரு பிணைப்பில் சில வகைகளிலாவது கருத்து முரண்படுவது தவிர்க்க முடியாதது. முரண்களை களைந்து இணைந்து செயல்படுவதில்தான் தாம்பத்தியத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த வாழ்க்கையின் வெற்றி உள்ளது என்பது அனுபவ உண்மை. தனிமனித உரிமைக்கு முக்கியத்துவம் அதிகம் கொடுக்கக் கொடுக்க மனிதர்கள் இணைந்து செயல்படும் பண்பையே இழக்கிறார்கள். ஹோமோ சேப்பியன் இனத்தை சார்ந்த தற்கால மனிதன், தன்னைவிட வலுவான நியாண்டர்தால் இன மனிதனை வென்று இன்று பூமியில் நிலைத்திருக்கக் காரணம் குழுவாக இணைந்து செயல்படும் தன்மையால்தான் என்பதால் இப்பண்பை கைவிட்டால் தன்  இன அழிவுக்கு தானே காரணமாவான் என்பது தெளிவு. ஒருவர் மற்றவர்பால் இயல்பாக ஈர்க்கப்பட பல காரணிகள் உண்டு. இப்படி ஒரு ஈர்ப்பு இல்லை எனும் சூழலில் திருமண பந்தத்தில் இணைந்த ஒரு தம்பதியின் குடும்ப வாழ்வு என்பது  அவர்களுக்கிடையே உள்ள விட்டுக்கொடுத்தலின் அளவை பொறுத்தே அமைகிறது. சில ராசிகளும், நட்சத்திரங்களும் ஒன்றுக்கொன்று ஈர்ப்பவையாக அமையும். தசா-புக்திகளும் கோட்சாரங்களும் குறிப்பிட்ட கால அளவில் ஒருவர் மீது ஏற்படும் ஈர்ப்பின், காதலின், மதிப்பின் மீது ஏற்படும் மாறுபாட்டை குறிப்பிடுபவையாகும். மாறான சில ஜாதக அமைப்பினால் உறவுகள் எத்தனை இழுத்துப் பிடித்தாலும் விலகிச் செல்லும். ஜோதிட ரீதியாக இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், இன்றைய பதிவில் ஒரு காரணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு ஆராய்வோம்.

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.

ஓரிரு வருடங்களுக்கு முன் திருமணமான பெண்ணின் ஜாதகம் இது. கும்ப லக்னாதிபதி சனி மேஷத்தில் நீசமாகி வக்கிரமானதால் நீச பங்கப்பட்ட நிலையில் இருக்கிறார். உடன் வக்கிர குருவுடன் மேஷத்தில் இருப்பதால் ஜாதகியிடம் செவ்வாயின் வேகமும், குருவின் வளமும் குணத்தில் வெளிப்படும். களத்திர ஸ்தானமான 7 ஆமிடத்தில் சுக்கிரன் அமைந்ததால் ஜாதகிக்கு சூரியனின் கௌரவம் இருக்கும். ஜாதகி கணவரிடம் அன்பை விடுத்து கௌரவத்தை  முன்னிலைப் படுத்தினால் 7 ஆமிட சுக்கிரன் “காரகோ பாவ நாசம்” எனும் விதியை செயல்படுத்தி பிரிவினைக்கு வழிவகுப்பார். 7 ஆமதிபதி சூரியன் 8 ல் மறைவது இதை தெளிவாக்குகிறது. 

இந்நிலையில் பெண்ணுக்கு கணவரை குறிக்கும் செவ்வாயின் நிலை ஆராயப்பட வேண்டும். செவ்வாய் விருட்சிகத்தில் ஆட்சி பெற்று நிற்பது சிறப்பு. ஆட்சி செவ்வாய் சுக்கிரனுக்கு கேந்திரத்தில் நிற்பது கணவரால் மனைவிக்கு சிறப்பை ஏற்படுத்தும் அமைப்பாகும். செவ்வாய் 10 ல் திக்பலமும் பெறுவதால் கணவர் இப்பெண்மணியின் உயர்வுக்கு வழிகாட்டுவார். குறிப்பாக தொழில் வகைகளில் ஜாதகியின் திறமை வெளிப்படும் சூழ்நிலைகளை உருவாக்கி மனைவி சம்பாத்தியச் சிறப்படைய கணவர் உதவுவார். செவ்வாய் உத்தியோக காரகரும் கூட என்பதை அறிக.

இப்பெண்ணின் கணவரின் ஜாதகம் கீழே.

துலாம் லக்னாதிபதியும், களத்திர காரகருமான சுக்கிரன் 12 ல் ராகுவுடன் நீசம் பெற்று மறைந்தது பெண் சாபம் கொண்ட ஜாதகம் என்பதை குறிப்பிடுகிறது. லக்னத்தில் பாதகாதிபதி சூரியன் நீசம் பெற்று நின்றதும் 7 ஆமதிபதி செவ்வாய் பாதக ஸ்தானமான சிம்மத்தில் நீசன் வீட்டில் நின்றதும் சிறப்பல்ல. ஆனால் சிம்மத்தில் மனைவியின் சுக்கிரன் மீது கணவரின் செவ்வாய் நிற்பது நன்மை. இருவர் ஜாதகத்திலும் களத்திர கிரகங்கள் சூரியனுடன் தொடர்பாவதை கவனிக்க. இதனால் ஒரு கணவன் மனைவிக்கிடையே முன்னிலை படுத்தப்பட வேண்டிய அன்பு, காதலைவிட கௌரவம் இவர்கள் வாழ்வில் முன்னிலைபடுத்தப்படும் சூழல் உருவாகும். காதலைக் குறிப்பிடும் கால புருஷனுக்கு 5 ஆமதிபதி சூரியனே கௌரவ காரகராவார். சூரியன் கால புருஷனுக்கு களத்திர ஸ்தானமான துலாத்தில் நீசமாவதன் பொருள் யாதெனில், கௌரவத்தை கைவிட்டு, காதலை ஏற்றால் மட்டுமே ஒருவர் வாழ்வில் களத்திரத்துடன் இணைந்து வாழ இயலும் என்பதே ஆகும்.  இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். அன்புக்கும், காதலுக்கும் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை புறந்தள்ளிவிட்டு கெளரவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததுதான் காரணம்.

அன்பையும் காதலையும் ஏற்படுத்துவது ஒருவர் மீதான மற்றவரின் ஈர்ப்பே ஆகும். ஈர்ப்பு இருக்கும் இடத்தில் கௌரவம் காலாவதியாகிவிடும். இவர்களுக்கிடையே ஏன் ஈர்ப்பு ஏற்படவில்லை என ஆராய்வோம். பெண்ணின் செவ்வாய் விருட்சிகத்தில் நின்றதால் கணவர் விருட்சிக ராசியை சேர்ந்தவராக அமைந்துள்ளார் என்பது புரிகிறது.  ஆணின் சுக்கிரன் கன்னியில் ஹஸ்த நட்சத்திரத்தில் நின்றதால் மனைவி சந்திரனின் ராசியான கடகத்தை சார்ந்தவராக அமைந்ததன் காரணமும் புரிகிறது. ஆனால் ஜோதிடப்படி ஒருவர் ராசியாதிபதி மற்றவர் ராசியில் நீசமானால் அவர்களுக்கிடையே ஒரு ஈர்ப்பு இருக்காது. இங்கு மனைவியின் கடக ராசியாதிபதி சந்திரன் கணவரின் விருட்சிகத்தில் நீசமாகிறார். இதனால் மனைவிக்கு கணவர் மீது ஈர்ப்பு இருக்காது. ஈர்ப்பு இல்லாமை கௌரவத்தை முன்னிலை படுத்தும். கௌரவம் பிரிவினைக்கு வழி வகுக்கும். மேலும் கணவரின் ராசியாதிபதி செவ்வாய் மனைவியின் கடகத்தில்தான் நீசமாவார். இப்படி ஒருவர் ராசியாதிபதி மற்றவர் ராசியில் நீசமாகும் அமைப்பு கடக, விருட்சிக ராசிகளிடையே மட்டுமே அமையும். இவ்விரு ராசிகளும் திருமண உறவில் சிறப்படைய வேண்டும் என்றால் சந்திரன் நின்ற நட்சத்திராதிபதி கிரகங்கள் வலுப்பெற்று நல்ல திசா-புக்தி தொடர்பானால் மட்டுமே சாத்தியம்.

மனைவி ஜாதகத்தில் 7 ஆமிடமான சிம்மத்தில் நிற்கும் சுக்கிரன் தனது நீச வீடான கன்னியை  நோக்கிச் செல்லும் சூழலில், 7 ஆமதிபதி சூரியனும் 8 ல் மறைந்து தனது நீச வீடான துலாத்தை நோக்கிச் செல்வதை கவனிக்க. கணவர் ஜாதகத்தில் களத்திர காரகர் சுக்கிரன் நீசம். களத்திர ஸ்தானாதிபதியான மேஷாதிபதி பாதக ஸ்தானத்தில் அமைய, செவ்வாய்க்கு வீடு கொடுத்த சூரியன் லக்னத்தில் நீசம் என்பது இவர்களுக்கிடையேயான புரிதலையும், அன்பையும் குலைத்துவிடும் அமைப்பாகும்.

மனைவி ஜாதகத்தில் முன் சொன்னபடி ஜாதகிக்கு திருமணமானவுடன் கணவர் தான் பணிபுரியும் அலுவலகத்திலேயே மனைவிக்கும் வேலை வாங்கிக் கொடுத்துள்ளார். மனைவியின் திறமை வெளிப்பட உதவி அவருக்கு வாழ்வில் நம்பிக்கை ஏற்படும் விதமாக செயல்பட்டுள்ளார். கணவர் தனது விருப்பப்படி சில செயல்களில் மனைவியை மாற்றிக்கொள்ளக் கூறியிருக்கிறார். ஆனால் அவற்றிற்கு சரி என்று கூறிய மனைவி கணவரின் கோரிக்கைகளை செயல்படுத்தவே இல்லை. இதனால் மனம் வெறுத்த கணவர் மனைவியை விலக்கி விட்டார்.

மனைவி என்னிடம் “எனது கணவர் என்னை சில விஷயங்களில் மாற்றிக்கொள்ளும்படி கூறியவை சாதாரணமாக செய்யக்கூடியவையே. ஆனால் அவருக்காக என்னை  மாற்றிக்கொள்ள வேண்டும், அவர் பேச்சை மதித்து செயல்பட வேண்டும் என்ற எண்ணமே தனக்கு வரவில்லை. இதற்கு ஜாதக ரீதியான காரணம் என்ன?” என்று கேட்டார். ஒருவரின் ராசியாதிபதி மற்றவர் ராசியில் நீசமாகக் கூடாது என்பதே காரணம். அதாவது ஒன்றுக்கொன்று புரிந்துகொள்ள மறுக்கும், நம்பகத்தன்மையற்ற தேள் ராசியான விருட்சிக ராசியும், நண்டு ராசியான கடக ராசியும் இணைந்து பயணிக்க முடியாது.

மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம், 

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

கடுமை காட்டும் கிரகங்களும் கருணை காட்டுவது எப்போது?

வர்க்கங்களில் செவ்வாய்.

ஜோதிடத்தில் ஒரு கிரகம் எப்படிச் செயல்படும் என்பதை அறிய எண்ணற்ற  யுக்திகள் கடைபிடிக்கப்படுகின்றன. உதாரணமாக அஷ்டவர்க்கத்தை சொல்லலாம். ஒரு ஜோதிடர் எத்தனை யுக்திகளை கற்று வைத்துள்ளாரோ? அத்தனை துல்லியம் அவரது பலனில் வெளிப்படும். ஜோதிடத்தில்

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

பிரியாத வரம் வேண்டும்!…

“ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்” போன்ற திரையிசைப் பாடல்களை கேட்கும்போது நமது இளமை புதுப்பிக்கப்படுகிறது. சமீபத்தில் இப்பாடலை கேட்டபோது இதன் வரிகள் இன்றைய திருமண வாழ்வில் எத்தனை பாடு படுத்துகிறது

மேலும் படிக்க »
ஜாமக்கோள் ஜாலங்கள்

சரியும் சந்தையை சாதகமாக பயன்படுத்தலாமா?

இன்று வேலை, திருமணம், பொருளாதாரம் ஆகியவற்றை பற்றி ஜோதிடர்களை தொடர்புகொள்ளும் அளவுக்கு சமமாக தற்போது பங்கு வணிகம் சார்ந்தும் ஜோதிடர்களை அணுகுகின்றனர் என்பது ஆச்சரியம். முந்தைய காலங்களில் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக நீண்டகால தொடர்

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

புத்திசாலிகள் வெல்லுமிடம்!

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனிச்சிறப்பான குண நலன்கள் உண்டு. ஆனால் அவை மற்றொரு கிரகத்துடன் இணைகையில் அதற்கு குணமாறுபாடு ஏற்படும். இணையும் கிரக குணத்தையும் கிரகம் கிரகிப்பதுதான் இதற்குக் காரணம். இதில் மூன்றாவது கிரகமும்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

திருமணத்தடை பரிகாரம்.

இன்று பெரும்பாலான இளைஞர் சமுதாயத்தினருக்கு திருமணத் தடை என்பது பெரும் மன உழைச்சலைத் தருகிறது. கடந்த தலைமுறையினருக்கு அதாவது 199௦ க்கு முன் இருந்தவர்கள் நமது சமுதாயம் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைத்த காலத்தில்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

Beware of Scammers

உலகம் வேகமாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வறுமையின் பிடியில் இருந்து பலகோடி மக்களை தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியால் மீட்டெடுத்துள்ளது என உலக வங்கி பாராட்டியுள்ளது. பலதரப்பட்ட காலாச்சார வேறுபாடுகளைக்கொண்டிருந்தாலும், அடிப்படையில்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil