மருத்துவ ஜோதிடத்தில் அதிக, குறைந்த பாகை கிரக பரிவர்த்தனை

ஜோதிடத்தில் பரிவர்த்தனைகள் ஒரு நிகழ்வை வேறொன்றாக மாற்றிவிடும். மருத்துவ ஜோதிடத்தில் அதிக பாகை, குறைந்த பாகை பெற்ற கிரகங்கள் பெரிதும் கவனிக்கப்படுகின்றன. இவைகளே ஒரு ஜாதகருக்கு நோயை  வழங்குவதில் முன்னிலை வகிக்கின்றன என்பதுதான் அதற்கு காரணம். இந்நிலையில் இவ்விரு கிரகங்கள் வியாதியை தருகின்றனவா? அல்லது வியாதி என்ன என்பதை தீர்மானிக்கின்றனவா? அல்லது இவை தொடர்புடைய பாவக வியாதியை தருகின்றனவா? என பல்வேறு கேள்விகள் ஜோதிடர்களுக்கு எழும். சந்திர நாடியை பயன்படுத்துகையில் இத்தகைய அதிக பாகை, குறைந்த பாகை கிரக பரிவர்த்தனை கிரகங்களின் மீது கோட்சார சந்திரன் செல்கையில் என்ன தீர்மானிப்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் சொல்வதாக இன்றைய பதிவு அமைகிறது.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

என்ன வியாதி? 

இந்த கும்ப லக்ன ஜாதகத்தில் 2 ஆம் பாவகமான மீனம் பாவ கர்த்தாரி யோகத்தில் அமைந்துள்ளது. இது 2ஆம் பாவகம் பாதிப்படைவதை தெளிவாக கூறுகிறது. நோய் தருவதில் எந்தவொரு ஜாதகத்திலும் புதனின் பங்கு முக்கியமானது. புதன் கால புருஷனுக்கு நோய் பாவகமான 6 ஆமதிபதி என்பதுதான் காரணம். உடல் உறுப்புகளை பொறுத்தவரை இரண்டாமிடம் நேத்ர ஸ்தானம் கண்களை குறிக்கும் பாவகமாகிறது. அங்கு வலது கண்ணை குறிக்கும் சூரியன், மேஷத்தில் நீச பங்கமடைந்த சனியின் சாரம் உத்திரட்டாதியில் நிற்கிறார். இடது கண்ணை குறிக்கும் சந்திரனும் அதே நீச சனியின் அனுஷத்தில் நிற்கிறார். வலது கண்ணை குறிக்கும் 2 ஆம் பாவகாதிபதி குரு, 2 க்கு 8 ல் துலாத்தில் மறைந்துவிட்டார். இடது கண்ணை குறிக்கும் 12 ஆமிடாதிபதி சனி மேஷத்தில் நீசம். இப்படி கண்களை குறிக்கும் பாவகங்களும், பாவகாதிபதிகளும், காரக கிரகங்களும் பாதிக்கப்பட்டுவிட்டதால் இந்த ஜாதகருக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் இந்த ஜாதகத்தில் ஒரு ஆச்சரியம் உண்டு. 2 ஆமிட உச்ச சுக்கிரனால் 2 ஆம் பாவக கிரகங்கள் வலுவடைகின்றன. அதே போல சந்திரனும், சனியும் கூட ஆட்சி செவ்வாயால் நீசபங்கமடைகின்றனர். 2 க்கு 8 ல் குரு மறைந்தாலும் அவர் சுக்கிரனுடன் பரிவர்த்தனை பெற்று ஆட்சியடைகிறார்.  சூரிய சந்திரர்களுக்கு அடுத்த ஒளி பொருந்திய கிரகமான சுக்கிரனும் கண்களை குறிப்பவர். ஆயினும் சுக்கிரன் குறைபாடுடைய கண்களை குறிப்பவர்.

வியாதி தரும் கிரகம் எது?

கால புருஷனுக்கு வியாதி பாவகமான புதன் தொடர்புடைய கிரகங்கள் வியாதியை தரும். அப்படிப் பார்த்தால் இந்த ஜாதகத்தில் புதனே பலகீனமாக உள்ளார். எனவே புதன் தனது காரகம் வாயிலாக நேரடியாகவே வியாதி தர வாய்ப்புண்டு. புதனோடு இணைந்த சூரியனும், சுக்கிரனும், சுக்கிரனுடனான பரிவர்த்தனைக்குப் பிறகு மீனத்திற்கு வரும் குருவும் வியாதியை தர வாய்ப்புண்டு. அல்லது அவற்றின் காரக உறுப்புகள் புதனால் பாதிக்கப்படும். மற்றொரு நிலையாக, 6 ஆமதிபதி சந்திரன் வியாதியை தர உரிமையுள்ள கிரகமாகும். 

வியாதியின் நிலை என்ன?

வியாதிக்கு மூல காரணமாக உள்ள கிரகம் 5 ஆமிட தொடர்பு பெற்று வலுவடைந்தால் வியாதி கட்டுப்பாட்டில் இருக்கும். 8 ஆமிட தொடர்பு பெற்றால் அது நிரந்தர குறைபாடாக அதாவது ஊனமாக மாறிவிடும்.   மேற்கண்ட ஜாதகத்தில் 8 ஆமதிபதி புதனே 5 ஆமிடத்திற்கும் அதிபதியாக வந்து நீச பங்கமடைவதால் ஜாதகருக்கு வரும் வியாதி தீர்க்க முடியாததாக இருக்கும். ஆனால் அது கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது புரிகிறது. 

வியாதியை தருவதில் அதிக பாகை, குறைந்த பாகை பெற்ற கிரகங்களின் பங்கு. 

அதிக பாகை அல்லது குறைந்த பாகை பெற்ற கிரகங்கள் தங்களது தசா-புக்தி காலங்களில் வியாதியை தருகின்றன. எப்போது ஒருவருக்கு வியாதி வரும் என்பதை அனுமானிக்க இதர காரணிகளை ஆராய்வதைவிட இவ்விரு கிரகங்களின் தசா-புக்திகளை கவனிப்பது சிறந்த பலனை தருகிறது. அந்த வகையில் ஜாதகருக்கு அதிக பாகை பெற்ற கிரகமாக சுக்கிரன் 28.37 பாகையில் உள்ளார். குறைந்த பாகை பெற்ற கிரகமாக குரு 10.35 பாகையில் உள்ளார். இதனால் இந்த ஜாதகருக்கு சுக்கிரன், குரு தொடர்புடைய தசா-புக்திகளில்தான் வியாதி வரும். இவை லக்னத்திற்கு இரண்டாம் பாவகத்தோடு தொடர்பானதால்  கண்ணில் வியாதி. மேலும் 2 ஆமிடம் மீனம் மற்றும் 2 க்கு 8 ஆமிடம் துலாம் தொடர்பானதால் கண்ணில் தீர்க்க முடியாத குறைபாடு என்றும் எடுத்துக்கொள்ளலாம்.  இந்த ஜாதகருக்கு சுக்கிர தசை குரு புக்தியில் கண்களில் Retina எனும் விழித்திரையில் நரம்புகளின் பலவீனத்தால் பார்வை பாதிக்கப்பட்டது. ஜாதகர் தற்போது சூரிய தசையில் உள்ளார். தனது பார்வை குறைபாட்டிற்காக சிகிச்சை எடுத்து வருகிறார். மருந்துகள் முக்கியமாக புதன் குறிக்கும் கண் நரம்புகளை வலுப்படுத்த கொடுக்கப்படுகிறது. பார்வைத்திறன் பெரிய அளவில் பாதிக்கப்படாமல் கட்டுப்பாட்டில் உள்ளது. 

அதிக பாகை, குறைந்த பாகை பெற்ற கிரகங்களின் பரிவர்த்தனைகள் குறிப்பதென்ன?

பொதுவான பரிவர்த்தனைக்கான காரணங்களே இதற்கும் பொருந்தும் அதாவது பரிவர்த்தனை ஒன்றை மற்றொன்றாக மாற்றிக்காட்டும் என்பதே. இந்த ஜாதகத்தில் ஒரு வியாதி மற்றொன்றாக மாற்றிக்காட்டும். எனவே வியாதியின் மூல காரணத்தை விடாமுயற்சியுடன் அணுகிய பிறகே தீர்மானிக்க இயலும். 

சந்திர நாடியும் மருத்துவ ஜோதிடமும்.

கோட்சார சந்திரன் தொடர்புகொள்ளும் கிரகம் வியாதியை சொல்லும். அந்த வகையில் இந்த ஜாதகருக்கு பலன் கூறிய நேரத்திற்கான கோட்சார ஜாதகம் கீழே. 

கோட்சார சந்திரன் ஜனன கால குருவின் மீது செல்கிறது. இதனால் வியாதி குரு தொடர்புடையது என்று அனுமானிப்பது இயல்பு. கோட்சாரத்தில் கேதுவும் ஜனன கால குருவுடன் இணைவு பெற்று இருப்பதால் பாதிப்பு சாதாரணமானதல்ல என்பது தெரிகிறது. ஆனால் குரு சுக்கிரனோடு பரிவர்த்தனை பெற்று நிற்பதால் நமது அனுமானம் மாறிவிடும் என்பதால் எச்சரிக்கை தேவை. இதன் அடிப்படையில் ஜனன கால குருவோடு பரிவர்த்தனை பெற்று துலாத்திற்கு வரும் சுக்கிரன் மீது கோட்சார சந்திரனும் கோட்சார கேதுவும் உள்ளனர் என்று எடுத்துக்கொண்டு பலன் கூறுவதே சிறப்பானது. நாம் முன்பு கூறியபடி ஜாதகரின் கண் பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது. இதை கோட்சாரம் உணர்த்துகிறதா? என்பதை காண கோட்சாரத்தில் சுக்கிரனின் நிலையை கவனிக்க வேண்டும். கோட்சார சுக்கிரன் ரிஷபத்தில் ஆட்சி பெற்று சிறப்பாக அமைந்துள்ளார். குருவும் மீனத்தில் ஆட்சி பெற்றுள்ளார். இது ஜாதகரது கண் பார்வை தற்போது சிறப்பாகவே உள்ளது என்பதை உணர்த்துகிறது. 

விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

Tarot

பணம் செய்ய விரும்பு.

வேகமாக உழைத்தவர்களைவிட விவேகமாக உழைத்தவர்களே விரைந்து முன்னேற இயலும் என்பது கடந்த காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திற்கும் பொருந்தும் விதியாகும். இன்று இந்தியா வளரும் நாடு என்பதியிலிருந்து   வளர்ந்த நாடு எனும் நிலையை நோக்கி வேகமாக

மேலும் படிக்க »
இல்லறம்

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனுமா?

இன்றைய நிலையில் பணத்துடன் நல்ல கல்வியும் சிறப்பான உத்யோகமுமே சொந்தங்களை தீர்மானிக்கிறது என்பது நிதர்சனம். இத்தகையவர்களுக்கு  அவர்கள் வாழ்க்கை வட்டத்தில் வந்ததெல்லாம்  சொந்தம்தான். வறுமை இந்தியாவை வளைத்துப் பிடித்திருந்த எண்பதுகள் வரை பணம் மட்டுமே

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சுரங்கத் தொழில் சுக வாழ்வு தருமா?  

இன்றைய உலகில் போருக்கான முக்கிய காரணம் ஒன்றே ஒன்றுதான். பூமியில் கிடைக்கும் எரிபொருள் அல்லது கனிம வளங்கள். இவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டால், உலக நாடுகளை எரிபொருள், கனிம தேவைகளுக்காக தங்களை மட்டுமே சார்ந்திருக்க

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

தந்தையின் தொழில்…

குடும்ப பாரம்பரியமாக ஒரு தொழிலை செய்யும்போது அதில் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் கற்றுக்கொள்ளல்களின் நேர்த்தி இருக்கும். தங்களது திறமைகளின் அடிப்படையில் தொழிலை தேர்ந்தெடுத்து அதில் பாராட்டும், பணமும் கிடைத்து மன நிறைவைவும் தந்த

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா?

திருமணக் கனவுகளில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும்  இளைஞர்கள் அனைவருக்கும் தங்கள் துணைவர் என்ன கலரில் இருப்பார் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும். கருப்பு, வெண்மை, மாநிறம், பாந்தமான முகம் என்று பலவகைத் தோற்றங்களில் மனிதர்கள் காணப்படுகின்றனர். துணைவர்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சண்டையில் கிழியாத சட்டை!

இருமனம் இணையும் திருமணம் என்பது கடவுள் போட்ட முடிச்சு என்பர். இளம் வயதில் இவ்வாசகத்தை கேட்கும்போது வீணர்களின் பேச்சு இது என்ற எண்ணம் கூட பலருக்கு வரும். அவர்களிடமே திருமண வாழ்வை ஒரு தசாப்தமாவது

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil