மருத்துவ நுழைவுத்தேர்வை நீக்கினால் அரசியல்வாதிகளுக்கு கப்பம் கட்டிவிட்டு தனமுள்ளோரின் வாரிசுகள் அனைவரும் மருத்துவராகிவிடுவர். அதனால் திறமையான சாமான்யர்களின் வாரிசுகள் முன்னேற இயலாது என்று மத்திய அரசு எண்ணுகிறது. இதனால் பணம் படைத்தோர் வாரிசுகள் பயிற்சி நிலையங்களை நாடுகின்றனர். இப்பயிற்சி நிலையங்களில் பணம் செலுத்தி பயிற்சி பெறும் நிலை சாமான்யர்களின் வாரிசுகளுக்கு கிடைப்பதில்லை. இதனாலும் சாமான்யர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். இக்குறையை தீர்க்க மத்திய அரசு கல்வியில் ஒரு பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து இந்தியா முழுமையிலும் முதன்மை பாடங்கள் எனப்படும் (core subjects ) கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்றவைகளை அனைத்து மாநிலங்களிலும் CBSC, STATE BOARD,ICS போன்ற அனைத்து கல்வித்துறையிலும் ஒரே பாடத் திட்டத்தை செயல்படுத்தலாம். மாநிலங்கள் தங்களது மொழி, கலாசாரம், வரலாறு போன்ற இதர பாடங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் என ஒரு நடைமுறையை கொண்டு வரலாம். தற்போது அதற்கான முயற்சிகள் நடக்கின்றன. அப்படி கொண்டுவந்தாலும் பாடத்திட்டத்தை விட்டு விலகிய கேள்விகள் நுழைவுத்தேர்வில் கேட்கப்படக்கூடாது என்ற நிலையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். ஏனெனில் OUT OF SYLLABUS எனும் கேள்விகள் மூலம் தனம் படைத்தோரின் வாரிசுகள் குறுக்கு வழியில் வாய்ப்பு பெற அது வழி வகுக்கும். பயிற்சி தேவைப்படாமல் திறமையுள்ளோர் அனைவரும் பாடத்திட்டத்தின் மூலமே மருந்தவம் பயில வகை செய்தால் மட்டுமே அனைவருக்கும் சம வாய்ப்புகள் என்பது சாத்தியமாகும். மாநில அரசுகள் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய கோருவது இத்தகைய முரண்பாடுகளாலும், தாங்கள் சம்பாதிக்கவுமே என்பதை அனைவரும் அறிவர். நமது இன்றைய பதிவில் மருத்துவராக ஜாதக அமைப்பு என்ன என்பதை நமது முந்தைய பதிவுகளில் இருந்து மாறுபட்ட கோணத்தில் கூறுவதே. தங்களது வாரிசுகளுக்கு உள்ள கல்வி அமைப்பை அறிந்து பெற்றோர்கள் செயல்பட்டால் பல மாணவ மணிகளின் உயிரை காப்பாற்றலாம் என்ற அடிப்படையில் இப்பதிவு வருகிறது.
மருத்துவராவதற்குரிய கிரகங்கள்:
மருத்துவத்தின் காரக கிரகங்களாக சூரியன், செவ்வாய், புதன், ராகு-கேதுக்கள் ஆகியவை கூறப்பட்டாலும் சூரியனே மருத்துவத்தின் முதன்மை கிரகமாகும். ஒரு ஜாதகரை மருத்துவர் நிலைக்கு கொண்டு வருவதில் சூரியன், செவ்வாய், குரு, சந்திரன் ஆகிய கிரகங்களின் பங்கு முக்கியமானது.
நோய் பாவம் 6 என்றால், நோயிலிருந்து மீழ்வதை 6 ன் விரைய பாவமான ஐந்தாம் பாவம் குறிப்பிடும். குறிப்பாக கால புருஷனின் 5 ஆம் பாவாதிபதி சூரியனின் வலுவே ஒருவர் நோயிலிருந்து குணமாவதை குறிக்கிறது. சூரியனே உயிர்களுக்கு சக்தி கேந்திரம். எனவே சூரியனின் அமைவு மருத்துவ துறைக்கு முதன்மையானது. சூரியனின் கதிர் வீச்சையே இதர கிரகங்கள் பிரதிபலிக்கின்றன என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
செவ்வாய் அறுவை சிகிச்சைக்கு அதிபதி என்பதோடு, செவ்வாய் கால புருஷனுக்கு லக்னாதிபதியும், கால புருஷனின் ஆயுள் பாவமான விருட்சிகத்திற்கும் அதிபதியாகிறார். எனவே உயிர் காக்கும் துறையான மருத்துவத்திற்கு செவ்வாய் முக்கிய காரக கிரகமாகிறார்.
ஒருவர் துன்பங்களிலிருந்து விடுபடுவதை 5 ன் பாவத் பாவமான 9 ஆம் பாவம் குறிப்பிடும். மேலும் உயர் கல்வி பாவம் என்பது 9 ஆம் பாவமே. இதன் அடிப்படையில் ஒருவர் மருத்துவராக வேண்டுமெனில் கால புருஷனின் 9 ஆமதிபதி குருவின் அருளாசி முக்கியம்.
சூரியன், செவ்வாய், குரு மூன்றும் நெருப்பு ராசிகளுக்கு அதிபதிகள் என்பது கவனிக்கத்தக்கது. ஒளியே ஆரோக்யத்தை வழங்குகிறது. மாறாக இருள் வியாதியை தருகிறது.
ஒருவர் மருத்துவராக வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவது சந்திரனே. எனவே சந்திரன் செவ்வாயுடன் அல்லது செவ்வாயின் வீட்டுடன் தொடர்பு பெறுவது நன்று.
மருத்துவராவதற்குரிய பாவங்கள்:
பாவங்களில் 1,6,1௦ ஆகிய பாவங்களிளோடு செவ்வாய், சூரியன், குரு ஆகிய நெருப்பு ராசி கிரகங்களின் தொடர்பு மருத்துவத்திற்கு சிறப்பான அமைப்பாகும்.
மேற்சொன்ன அனைத்தையும் விடமிக சாதகமான திசா-புக்திகள் உயர் கல்வியை தேர்ந்தெடுக்கும் காலத்தில் வர வேண்டியது அவசியம்.
கீழே ஒரு ஜாதகம்.
ஜாதகி 1998ல் பிறந்தவர். 12 ஆம் வகுப்பு முடித்து NEET தேர்வில் வெற்றி பெற்று அரசு ஒதுக்கீட்டில் 2016 ஆமாண்டு மருத்துவக்கல்லூரி சென்றவர். இவ்வருடம் MBBS முடித்து பயிற்சி மருத்துவராக பணிபுரிகிறார். இதில் மேற்சொன்ன விதிகளின் செயல்பாடுகளை காண்போம். லக்னமே செவ்வாயின் விருட்சிகமாகி, குரு மற்றும் சந்திரனின் பார்வையை லக்னம் பெறுகிறது. உச்ச சந்திரன் 1௦ ஆமதிபதி சூரியனின் கார்த்திகை-4 ல் நிற்பதால் 1௦ ஆமதிபதி சூரியன் வலுவடைகிறார். சூரியனை குரு 5 ஆம் பார்வையாக பார்க்கிறார். ஜீவன பாவமான 1௦ ல் நிற்கும் ராகுவின் திருவாதிரை-3 ல் செவ்வாய் நிற்கிறார். திசா நாதன் ராகுவே மருத்துவ காரக கிரகங்களில் ஒன்றாகி தனித்த நிலையில் சூரியனின் வீட்டில் நிற்பதால் சூரியன் போன்றே செயல்படும். இந்த அமைப்பால் ஜாதகி மருத்துவரானார். குறிப்பாக கல்லூரி செல்லும் காலத்தில் ராகு திசையில் இருப்பதுதான் ஜாதக கொடுப்பினையை அனுபவிக்க முக்கிய காரணம்.
கீழே இரண்டாவதாக மற்றொரு ஜாதகம்
இவர் 2000 ல் பிறந்த ஒரு மாணவி. இவர் கடந்த இரு வருடங்களாக மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதுகிறார். தற்போதும் எழுதி முடிவுக்காக காத்துக்கொண்டுள்ளார். ஜாதகிக்கு செவ்வாய் திசை கடந்த ஆண்டு இறுதிவரை நடந்தது. குரு செவ்வாயையோ, சூரியனையோ பார்க்கவில்லை. ஆனால் செவ்வாயின் வீடான விருட்சிகத்தை 12 ல் மறைந்த நிலையில் பார்க்கிறது. செவ்வாய் சந்திரனின் வீட்டில் நீசமாகி திசை நடத்துவதால் ஏற்பட்ட உந்துதலாலேயே ஜாதகி மருத்துவம் படிக்க எண்ணியுள்ளார். செவ்வாய் 1, 6, 1௦ பாவங்களோடு தொடர்புகொள்ளவில்லை. செவ்வாய், சூரியன், குரு ஆகியவைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பாகவில்லை. தற்போது ஜாதகிக்கு செவ்வாய் திசை முடிந்து ராகு திசை துவங்கியுள்ளது. ஜாதக அமைப்பு சாதகமாக இல்லை என்பதால் ராகு திசையிலும் இந்த ஜாதகிக்கு மருத்துவம் பயில வாய்ப்பு இல்லை எனலாம்.
மூன்றாவதாக ஒரு ஆணின் ஜாதகம்.
ஜாதகர் 1990 ல் பிறந்த ஒரு ஆண். இவர் MBBS முடித்து, மனநல மருத்துவத்தில் MD முடித்து அதிலேயே DM முடித்து அரசு மருத்துவராக பணிபுரிகிறார். ஜாதகத்தில் செவ்வாய் 1௦ ஆமதிபதி சந்திரனின் ரோஹிணி-2 ல் நின்று விருட்சிகத்தை பார்க்கிறார். உச்ச குருவும் விருட்சிகத்தை பார்க்கிறார். சூரியன் 1௦ ஆமதிபதி சந்திரனின் தொடர்புடன் 12 ல் சுய சாரத்தில் உத்திரம்-2 ல் உள்ளார். இந்த அமைப்பால் இவருக்கு மருத்துவம் பயில வாய்ப்பு உள்ளது. இவர் மருத்துவம் பயில திசா-புக்திகள் எப்படி அனுமதித்தன என காண்போம். சந்திரன் ஹஸ்தம்-2 ல் சுய சாரம் பெற்றுள்ளார். எனவே பிறப்பு திசை சந்திர திசை. பிறகு செவ்வாய் திசை கடந்து 2003 முதல் 2021 வரை ராகுவின் திசை. இந்த ராகு திசையில்தான் ஜாதகர் மருத்துவம் பயின்றார். காரணம் ராகு 1௦ ஆமதிபதி சந்திரனின் திருவோணம்-1 நிற்கிறார். 1௦ ஆமிட தொடர்பு பெற்ற ராகு ஜாதகருக்கு மருத்துவம் கல்வியை வழங்கி மனநல மருத்துவத்தில் ஜாதகரை உயர்த்தியுள்ளது. மருத்துவத்தை பொறுத்தவரை ராகு-கேதுக்களின் பங்கு முக்கியமானது. சந்திரன் சாரம் பெற்றதால் ராகு, சந்திரன் குறிக்கும் மனநல மருத்துவத்தில் ஜாதகரை உயர்த்தியுள்ளது.நான்காவது ஜாதகம் கீழே.
இவர் 2002 ல் பிறந்த ஒரு பெண். இவரும் இருமுறை மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதி இரண்டாவது தேர்வு முடிவிற்காக காத்துக்கொண்டுள்ளார். லக்னத்திற்கு 1௦ ஆமிடத்தில் திக்பலம் பெற்று சூரியனும் செவ்வாயும் குருவோடு சிறப்பாக இணைவு பெற்று அமைத்துள்ளது. இது மருத்துவம் பயில சிறப்பான ஜாதக அமைப்பாகும். ஆனால் இவரால் இருமுறையும் சிறப்பாக தேர்வெழுத முடியவில்லை என்கிறார். காரணம் ஜாதகிக்கு இவ்வாண்டு ஜனவரி வரை சுக்கிர திசை நடைபெற்றுள்ளது. சுக்கிரன் லக்னத்திற்கு லாபத்தில் அமைத்திருந்தாலும் சுக்கிரன் 1௦ க்கு விரையத்தில் ரிஷபத்தில் நிற்கும் புதனின் ஆயில்யம்-1 ல் நிற்கிறது. 1௦ ஆமிடாதிபதியோடுதான் சுக்கிரனுக்கு தொடர்புள்ளதே தவிர 1௦ ஆமிட கிரகங்களோடு அல்ல. ஜனன கால புதன் மீது கோட்சார ராகு அமர்ந்திருந்த நிலையில் கடந்த ஆண்டு சுக்கிர திசையில் ஜாதகிக்கு மருத்துவ வாய்ப்பு கிட்டவில்லை. தற்போது சூரிய திசையில் ஜாதகி இரண்டாவது முறையாக தேர்வெழுதியுள்ளார். சூரியன் திக்பலம் பெற்று நிற்கும் நிலையில் தற்போது வாய்ப்பு உள்ளதை மறுக்க இயலாது. ஆனால் சூரியன் 10 ல் நின்று திசை நடத்தினாலும் அவர் 9 ல் நிற்கும் ராகுவின் திருவாதிரை-1 ல் நிற்கிறார். எனவே சூரியன் தனது வலுவை 9 ஆமிடதிற்கே செயல்படுத்துவார் எனலாம். கன்னி லக்னத்திற்கு சூரியன் விரையாதிபதியாகி, 8 ஆமதிபதி செவ்வாய் மற்றும் பாதகாதிபதி குருவின் இணைவில் உள்ளார். மேலும் செவ்வாய் லக்னத்திற்கு 8 ஆமதிபதி என்பதோடு, ராசிக்கு விரையாதிபதியும் ஆவதால் திசாநாதன் சூரியனைவிட அதிக பாகை பெற்று நிற்கும் செவ்வாய் ஜாதகி மருத்துவராக அனுமதிக்க மாட்டார் என்றே முடிவு செய்ய வேண்டியுள்ளது.
விரைவில் மீண்டுமொரு பதிவில் உங்களை சந்திக்கிறேன்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501.