பூர்வீக பூமியின் நிலை என்ன?

நண்பர் ஒருவர் அந்நிய தேசத்திலிருந்து அழைத்தார். இந்தியா திரும்ப எண்ணமில்லை என்றாலும் தற்போது உடனடி தீர்வு காண்பதற்கான சூழலில் உள்ளேன். உங்கள் ஆலோசனை தேவை என்று கேட்டார். பொதுவான பலன்களை காண்பதற்கு ஜாதக ஆய்வே சிறந்தது. ஆனால் ஒருவரின் அப்போதைய  சூழலை ஜாதகத்தைவிட பிரசன்னமே துல்லியமாக படம் பிடித்துக்காட்டுகிறது என்றால் அது மிகையல்ல. அந்த வகையில் கேள்வி கேட்ட அன்பருக்காக பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னம் கீழே.

மீன உதயத்தில் உதயாதிபதி குரு ஆட்சி. ஜாம குரு கடகத்தில் உச்சம் பெற்று உதயத்தை பார்க்கிறார். உதயத்திற்கு 12 ல் ஆரூடம் இவை கேள்வியாளர் வெளிநாட்டில் உள்ளதை உறுதி செய்கிறது.  உதயத்திற்கு 6 ஆமதிபதி சூரியன் உச்சம் பெற்று ராகுவுடன் உதயத்திற்கு 2 ல் நிற்கிறார். இது ஜாதகரின் வெளிநாட்டு வேலையின் சிறப்பை கூறுகிறது. ஆனால் ஜாம சுக்கிரனும் இவர்களுடன் கூடி, 2 ஆமதிபதி செவ்வாய் உதயத்திற்கு 12 ல் சனியோடு இணைவு பெற்றுள்ளதால் கேள்வியாளர் குடும்பத்தை பிரிந்து வெளிநாட்டில் வேலை செய்வதையும் அது ஜாதகரின் குடும்ப உறவில் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளதையும் கூறுகிறது.  “உங்கள் குடும்பம் உங்களுடன் வெளிநாட்டில் இல்லை” என்று கூறியதை ஜாதகர் ஒப்புக்கொண்டதுடன்  “தனது மிகப்பெரிய மன வேதனை அதுதான் என்றார். உதய சனியை 7 ஆமிட செவ்வாய் பார்க்கிறார். உதயத்திற்கு 12 ல் சனி, செவ்வாய் சேர்க்கை. இது கேள்வியாளர் தற்போது பணி முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதை தெளிவாக காட்டுகிறது.  கேள்வியாளர் “எங்களது தற்போதைய பணி முடிந்து விட்டது அடுத்த பணி (Project) துவங்க இன்னும் 4 மாத காலம்” ஆகும் என்றார். 

ஜாம உதயாதிபதி குரு, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெற்றுள்ளார். எனினும் அவர் உதயத்திற்கு 8  ல் அமைந்த கேதுவின் சாரத்தில் உள்ளார். இரு சூரியன்களும் ராகு-கேதுக்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலை. 4 ல் புதன் ஆட்சி பெற்றாலும் அவர் செவ்வாய் சாரம் பெற்ற கவிப்புடன் இணைந்துள்ளார். இவை கேள்வியாளரின் பூர்வீக நிலம்   தந்தை வழி கர்மாவால் ஜாதகர் அனுபவிக்க இயலாத நிலையில் உள்ளதை கூறுகிறது. மேலும் இது கேள்வியாளரின் தாயார் தற்போது உடல்நலம் குன்றியுள்ளதையும் குறிப்பிடுகிறது. இதை கூறியதும்தான் கேள்வியாளருக்கு ஜாமக்கோள் பிரசன்னத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. பொதுவாக பிரசன்னம் ஜாதகரின் சூழலை சுட்டிக்காட்டினாலும் அது கேள்வியை சுட்டிக்காட்டினால்தான் அது வெற்றிகரமான பிரசன்னமாக அமையும். கேள்வியாளர் இந்தியாவில் தனது தாயார் உடல் நலம் குன்றி உள்ளார். தன்னால் தனது பூர்வீகத்தில் வாழ இயலாது. எனவே பூர்வீக நிலத்தை விற்பது பற்றித்தான் கேட்க உங்களை தொடர்புகொண்டேன் என்றார். 

பிரசன்னத்தில் 4 ல் உள்ள கவிப்பு கேள்வியாளரின் நிலம் விற்கப்படும் நிலையில் உள்ளதாலும் தாய்க்கு அந்திம காலம் என்பதாலும் கேள்வியாளர் உடனடியாக இந்தியா திரும்பி அதற்கான செயல்களில் ஈடுபடலாம் என்று அறிவுரை  வழங்கினோம். 

மீண்டுமொரு பதிவில் விரைவில் சந்திப்போம். 

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன், 

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

4 ஆம் பாவகம்

சுதந்திரம் கிடைத்ததா?  

நாடு இன்று 79 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இத்தனை ஆண்டுகளில் நாம் பல படிகளை கடந்து வந்துள்ளோம். இன்றைய வளர்ந்த மேலை நாடுகள் என்பவை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பிற நாடுகளை அடிமைப்படுத்தியும்,

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

தொழில் மாற்றம்…

இன்று அனைவரும் கேட்பது இன்றைய கடுமையான பொருளாதாரச் சூழல் எப்போது நல்லவிதமாக நிம்மதியாக சம்பாதிக்கும் விதமாக மாறும்? என்பதே. உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் மாற்றங்களுக்கு உட்பட்டவைதான். மாற்றங்களே உயிர்களை  அடுத்த கட்ட வளர்ச்சிக்கு

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

மன்னாரு & கம்பெனி மேனேஜர்…

எனது நீண்ட நாள் வாடிக்கையாளர் ஒருவர் பெங்களூரில் மென்பொருள் துறையில் பணிபுரிபவர். வெகு நாட்களுக்கு முன் அவரது ஜாதகத்தை பார்த்துவிட்டு வேலை அமைப்புகள் சிறப்பாக உள்ளன. ஆனால் வேலையில் அடிக்கடி மாறுதல்களை ஏற்கும் அமைப்பு

மேலும் படிக்க »
Tarot

பணம் செய்ய விரும்பு.

வேகமாக உழைத்தவர்களைவிட விவேகமாக உழைத்தவர்களே விரைந்து முன்னேற இயலும் என்பது கடந்த காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திற்கும் பொருந்தும் விதியாகும். இன்று இந்தியா வளரும் நாடு என்பதியிலிருந்து   வளர்ந்த நாடு எனும் நிலையை நோக்கி வேகமாக

மேலும் படிக்க »
இல்லறம்

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனுமா?

இன்றைய நிலையில் பணத்துடன் நல்ல கல்வியும் சிறப்பான உத்யோகமுமே சொந்தங்களை தீர்மானிக்கிறது என்பது நிதர்சனம். இத்தகையவர்களுக்கு  அவர்கள் வாழ்க்கை வட்டத்தில் வந்ததெல்லாம்  சொந்தம்தான். வறுமை இந்தியாவை வளைத்துப் பிடித்திருந்த எண்பதுகள் வரை பணம் மட்டுமே

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சுரங்கத் தொழில் சுக வாழ்வு தருமா?  

இன்றைய உலகில் போருக்கான முக்கிய காரணம் ஒன்றே ஒன்றுதான். பூமியில் கிடைக்கும் எரிபொருள் அல்லது கனிம வளங்கள். இவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டால், உலக நாடுகளை எரிபொருள், கனிம தேவைகளுக்காக தங்களை மட்டுமே சார்ந்திருக்க

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil