மீண்டும் மீண்டுமா?

சில வருடங்களுக்கு முன் வந்த நடிகர் சிம்பு நடித்த திரைப்படம் ஒன்றில் காதலியை பெற்றோர்கள் விருப்பமின்றி திருமணம் செய்துகொண்ட பிறகு, இரு தரப்பு பெற்றோர்களின் பாரம்பரிய சம்பிரதாயத்திற்காக  மீண்டும் இருமுறை திருமணம் செய்வார். அப்படம் மன ஒற்றுமையைவிட சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவம் தரும் இக்காலத்திற்கு ஒவ்வாத பழைய பழக்கங்களை கேலி செய்திருந்தது. திருமணப்பொருத்த மூல நூல்களுள் ஒன்றான மகாகவி காளிதாசரால் இயற்றப்பட்ட “ஜாதக சந்திரிகை”யில் (வெளியீடு: தஞ்சை சரஸ்வதி மஹால், பக்கம் 98 ல் )  இப்படி ஒரு ஸ்லோகம் வருகிறது. 

இதன் பொருளாவது அனைத்து பொருத்தங்களையும் விட மனப் பொருத்தத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்கிறார் காளிதாசர். இந்த நூல் எழுதப்பட்ட காலம் கி.பி ஐந்தாம் நூற்றாண்டு. மேற்கூறியபடி ஒருவர் மீண்டும் மீண்டும் ஒருவரையே திருமணம் செய்வதற்கான அமைப்புகள் என்ன என்று ஆராய்ந்ததன் விளைவே இன்றைய பதிவு. 

கீழே ஒரு ஆணின் ஜாதகம். 

ஒரு விஷயத்தை ராசி என்பது மேலோட்டமாக கூறினால் தொடர்புடைய வர்க்கச் சக்கரம் அதை விவரித்துக் கூறும். உதாரணமாக  ஒருவருக்கு திருமணம் நடக்கும் அமைப்பு உள்ளதை  ராசி குறிப்பிட்டால் அதன் வகையை  நவாம்சம் விரிவாக கூறும்.மேற்கண்ட இளைஞரின் ஜாதகத்தில் நீச சுக்கிரன் 7 ல் இருக்கிறார். ஒரு நீசன் 7 ல் இருப்பதால் திருமண விஷயத்தில் ஏதோ ஒரு தரமற்ற தன்மை இருக்கும் என்பதை இது குறிக்கிறது. ஜாதகரின் பாரம்பரியத்தை கூறும் 9 ஆம் பாவத்திற்கு விரைய பாவாதிபதி சுக்கிரன் 7ல் இருப்பதால் களத்திர காரகர் களத்திர பாவத்தில் நீசம் பெற்றதால் களத்திரம் இவரது பாரம்பரியத்தை விட மாறுபட்டதாக அல்லது குறைவானதாக இருக்கும் என்று பொருள். 7 ஆமதிபதி புதன் 5 ல் இருப்பதால் இவருக்கு காதலியே மனைவியாக வரும் அமைப்பு உள்ளது. 7 ஆமதிபதி 6 ஆமதிபதியுடன் இணைந்து 5 ல் நிற்பதால் இவரது மனைவியை வேலை செய்யும் இடத்தில் கண்டு காதலித்து மனம் புரிவார் என்பதை இவ்வமைப்பு கூறுகிறது. 2 ல் கேது, 8 ல் ராகு நிற்க, 5 ஆமதிபதியும் லக்னாதிபதியும் 8 ல் ராகுவுடன் இணைவது இவர் காதலுக்காகவும் திருமணத்திற்காகவும் தனது பாரம்பரியத்தை விட்டு வேறு பாரம்பரியத்தில் இணைவதை குறிப்பிடுகிறது. 

நவாம்சத்தில் காதலின் காரக கிரகமும் காதல் பாவகமான 5 ன் அதிபதியுமான புதன் 2 ல் நீசம் பெற்று நிற்கிறார். இது ஜாதகரின் காதல் தரமற்றது என்பதை கூறினாலும் காதலி ஜாதகருடன் குடும்ப உறவில் வந்து இணைவதை குறிப்பிடுகிறது. சனியுடனான பரிவர்த்தனைக்குப்பிறகு ஆட்சி பெறும் குரு, புதனை நீச பங்கப்படுதுவதால் இவரது காதலி மனைவியான பிறகு அவரது தகுதி  உயரும்.   ஒரு அந்நிய பாரம்பரியம் தனது குடும்பத்தில் வந்து இணைகிறது என்றால் குடும்ப பாவகத்தில் ராகு-கேதுக்களோ அல்லது 8 ஆமதிபதியோ தொடர்பாக வேண்டும். இந்த வகையில் குடும்ப பாவத்தில் 5, 8 ஆமதிபதி புதன் அமர்வது காதலுக்காக அந்நிய கலாசார துணைவர் ஜாதகரது குடும்பத்தில் இணைவதை தெளிவாக்குகிறது.   சனி, குருவோடு பரிவர்த்தனை, குடும்பத்தில் நிகழும் இந்த கலாச்சார மாறுபாட்டை உறுதி செய்கிறது. ராசியை மட்டும் வைத்து  இதை தெளிவாக அனுமானிக்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது. நவாம்சம் ஜாதகரின் சூழலை துல்லியமாக காட்டுகிறது. 

ஆனால் இவ்வமைப்புகள் செயல்பட தசா-புக்திகள் அனுமதிக்க வேண்டும். தசா-புக்திகள் அனுமதிக்காவிட்டால் ஜாதக அமைப்புகள் செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது. தசா-புக்தி தொடர்பாகாத ஜாதக யோகங்கள் வீண் என மகாகவி காளிதாசர் பின்வரும் தனது ஜாதக சந்திரிகை பாடலில் கிண்டலடிக்கிறார்.  

இப்போது ஜாதகருக்கு சம்பவங்கள் நடக்க தசா-புக்திகள் அனுமதிக்கிறதா என காண்போம். 

ஜாதகருக்கு சனி தசை 2௦11 முதல் நடப்பில் உள்ளது. 1994 ல் பிறந்த ஜாதகருக்கு படித்தவுடன் வேலை கிடைப்பதை குரு தொடர்பு பெற்ற ஜீவன காரகர் சனியின்  தசை உறுதி செய்கிறது.  இதன்படி படித்தவுடன் ஜாதகருக்கு வேலை கிடைத்தது. சனி தசையில் நவாம்சத்தின் 5 ஆமதிபதி புதன் புக்தியில் ஜாதகர் வேலை செய்யும் இடத்தில் காதலி வந்து இணைந்து காதல் புரிய வைக்கிறார். புதன் புக்தியை அடுத்து வந்த கேது புக்தி பாரம்பரிய மற்றும்  கலாசார மாறுபாட்டால் குடும்பம் அமைவது தடைபடுவதை குறிக்கிறது. 1௦ ஆமிட கேது புக்தியை திருமணதிற்கு சிறப்பல்ல. அடுத்து களத்திர காரகர் சுக்கிரன் முதல் காமத்திரிகோணத்தில், காதல் பாவகம் 5 க்கு லாபம் 3 ல்  சந்திரன் சாரத்தில் உள்ளார். சந்திரன் 2 ஆமிடத்தில் நிற்கிறார். இதனால் இப்போது ஜாதகருக்கு திருமணம் நடக்க வேண்டும். சுக்கிரன் ராசியிலும் 7 ல் நிற்கிறார் என்பதால் அவர் 7 ஆமிட பலனை வழங்கியாக வேண்டும் என்ற அடிப்படையில் ஜாதகருக்கு சுக்கிர புக்தியில் புதன் அந்தரத்தில் கடந்த ஆண்டு தை மாதம் திருமணம் நடந்தது. 

ஒரே துணையுடன் மீண்டும் திருமணம் நடக்க ஜாதக அமைப்பு.

களத்திர காரகரோ, களத்திர பாவாதிபதியோ இரட்டை கிரகமான புதன் தொடர்பு பெற்று, இரட்டை ராசிகள் எனப்படும் மீனம், மிதுனம் தொடர்பில் நின்றால் அத்தகைய ஜாதகர்களுக்கு திருமணம் ஒரே துணையுடன் இரு முறை நடக்கும். இது இரு தார யோகத்தையும் குறிப்பிடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே துணையுடன் இரு முறை திருமணம் நடந்தால் இத்தகைய இருதார யோகம் செயல் இழக்கும்.

இந்த ஜாதகத்தில் நவாம்சத்தில் குடும்ப பாவகம் இரட்டை ராசியாக அமைகிறது. இவருக்கு சுக்கிர புக்தியில் புதன் அந்தரத்தில்தான் முதலாவதாக திருமணம் நடந்தது. இரட்டை கிரகமான புதன் ஒரு செயலுக்கு பொறுப்பேற்கிறார் எனில் அச்செயலை இருமுறை நடத்தி வைப்பார். நவாம்சத்தில் சூரியனான தந்தையும் தாயான சந்திரனும் இரட்டை ராசி மீனத்தில் இருக்க ஜாதகத்தில் அதிக பாகை பெற்று ஆத்ம காரகராக நிற்கும் புதன் மீனத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இதனடிப்படையில் இந்த இளைஞருக்கு சந்திர புக்தியில் மீண்டும் அதே துணையுடன் பெற்றோர்கள் விருப்பத்திற்காக பாரம்பரிய முறைப்படி தடபுடலாக மீண்டும் திருமணம் வைகாசியில் (ஜூன்’ 22) ல் நடந்தது. 

என்னே கிரக லீலைகள்!

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம், 

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: +91 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

வெளிநாட்டு வேலைக்கு வருட கிரகப் பெயர்ச்சிகளால் பாதிப்பு வருமா? 

தற்போதைய உலகளாவிய சூழல்களில் வெளிநாட்டில் பணிபுரிந்துகொண்டிருக்கும் அன்பர்களுக்கு தங்கள் வேலையை தக்கவைத்துக்கொள்ள முடியுமா? என்பது கவலைக்குரிய விஷயமாகவுள்ளது. வருடாந்திர கிரகப் பெயர்ச்சிகள் பொதுவாக அனைவர் வாழ்விலும் மாறுதல்களைக் கொண்டுவரும் பொதுவான நிகழ்வுகளே. இந்நிகழ்வுகள் தற்காலிகமானவையா?

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு…

அடித்தட்டு மக்கள் பணம் சம்பாதிக்க நாய் படாத பாடு படுகிறார்கள் என்றால், தனவந்தர்கள் பணத்தை வைத்து அடிக்கும் கூத்துக்களை பார்த்தால் சில நேரங்களில் அட கொடுமையே என்று இருக்கும். சமீபத்தில் என்னிடம் ஒரு அன்பர்

மேலும் படிக்க »
சந்திரன்

ஜாதகம் சரியானதா?

கால்குலேட்டர் வந்த பிறகு கணக்குப் போடுவது மறந்துவிட்டதா? என்றால் அதில் ஓரளவு உண்மையும் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. பெரும்பாலோருக்கு வாய்ப்பாடுகள் மறந்துவிட்டிருக்கும்.  இன்று கூகிள் ஜெமினி போன்ற கைபேசி சேவகர்கள் வந்துவிட்ட பிறகு

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

மூன்றாமிடமும் காமமும்!

பல்வேறு ஊர்களில் இருந்து என்னை தொடர்புகொள்ளும் மனிதர்களை அவர்களது ஜாதகங்கள் மூலம் படிக்கிறேன் என்றால் அது மிகையல்ல. நம் பார்வையில் கடந்து செல்லும் பல மனித முகங்களில் ஒரு சிநேகப் புன்னகையை நாம் கண்டாலும்

மேலும் படிக்க »
கல்வி

நீச புதன் மருத்துவராக்குமா?

ஒரு கிரகத்தின் செயல்பாடு அதை மட்டும் சார்ந்திருப்பதில்லை. அதனோடு தொடர்புடைய பல்வேறு காரணிகளை ஆராய்ந்தே அதன் செயல்பாட்டை அறிய இயலும். உதாரணமாக ஒரு  கிரகம் ஜாதகத்தில் சாதகமற்ற நிலையில் இருந்தாலும்கூட அது நின்ற ராசி,

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

நிலாச் சோறு!

வாழ்வில் சில விஷயங்கள் நமக்கு எளிதில் வாய்த்துவிடும். சில விஷயங்கள் நம்மைத் தேடி வரும் என்று கூடச் சொல்லலாம். சில விஷயங்கள் எவ்வளவு தேடிச் சென்றாலும்  கிடைக்காமல் நம்மை ஏங்க வைத்துவிடும். கல்வி, வேலை,

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil