இருமுனைக் கருவிகள்.

பணியிடங்களில் ஒரு பொறுப்பில் இருந்துகொண்டு பணிக்கு வராத மற்றொருவரது பணியையும் இணைந்து சில நாட்களில் செய்யும் நிலையை நாம் அனைவரும் அனுபவித்திருப்போம். பணிக்குறைப்பு சூழல்களில் பணியை விட்டுசென்ற பலரது வேலைகளையும் சேர்த்துச் செய்தால்தான் தங்கள் வேலையை தக்கவைத்துக்கொள்ள இயலும் என்ற நிலையையும் இன்று காணலாம். இவற்றை புதிய பணி அனுபவங்களாக ஏற்றுக்கொண்டு தங்களது திறமைகளை மேம்படுத்திக்கொள்பவர்களும் உண்டு. மாறாக, தங்கள் நோக்கம் சிதறுவதாகக் கருதி பணியை விட்டு விலகுபவர்களும் உண்டு. இது அவரவர் சூழல், திறமை, நோக்கத்தை பொறுத்தது. ஆனால் பொதுவாக பணியிடத்தில் பல வேலைகளில் தங்களை இணைத்துக்கொள்பவர்கள் பரவலாக விரும்பப்படுகிறார்கள். பல்வேறு வேலைகளில் ஒரே சமயத்தில் ஈடுபடுவதன் காரணமாக இவர்கள் பணியிழப்பை சந்திக்கும் வாய்ப்புகள் குறைவு. அதே சமயம் குறிப்பிட்ட ஒரு துறையில் சிறந்து விளங்கும் வாய்ப்பையும் இவர்கள் இழக்கிறார்கள் என்பதும் உண்மை. வங்கிப்பணியாளர்கள் சுழற்சி முறையில் அனைத்து பணிகளையும் செய்வதை கவனித்திருக்கலாம். வல்லுனர்கள் இந்த நடைமுறைக்கு பொருந்திவர மாட்டார்கள். ஒரு துறையில் வல்லுனர்களாக விளங்குபவர்கள் அதே துறையின் மற்றொரு பிரிவையும் திறமையாக கையாள்வதை காணலாம். ஆனால் இது அபூர்வமே. அனைவருக்கும் இது சாத்தியமானதல்ல. பெரும்பாலோர் எப்போது தங்களது வழக்கமான பணிக்கு திரும்புவோம் என்ற மனநிலையிலேயே இருப்பார்கள் என்பதே நிதர்சனம். இன்றைய பதிவில் நாம் பெரும்பாலானவர்களில் இருந்து மாறுபட்ட இப்படிப்பட்ட அபூர்வமான வித்தகர்களை உதாரண ஜாதகங்கள் மூலம் ஆராயவிருக்கிறோம்.

ஜாதகி ஒரு பெண். மிதுன லக்ன ஜாதகம். லக்னாதிபதி புதன் சூரியனுடனும், உச்ச சுக்கிரனுடனும் 1௦ ஆமிடமான மீனத்தில் அமைந்துள்ளார். 5, 12 ஆமதிபதி சுக்கிரன் சூரியனுடன் ஒரு பாகையில் இடைவெளியில் அஸ்தங்கமானது தோஷமென்றாலும், அவர் ரிஷப குருவுடன் பரிவர்த்தனை பெறுவதால் தனது அஸ்தங்க தோஷத்தில் இருந்து விடுபடுகிறார். மாறாக, பரிவர்த்தனைக்குப் பிறகு புத்திர காரகர் குரு அஸ்தங்கமடைகிறார். கவனிக்க 5 ஆமதிபதி சுக்கிரன் 5 க்கு 6 ல் மீனத்திலும், பரிவர்த்தனைக்குப் பிறகு 5 க்கு 8 ஆமிடம் ரிஷபத்திலும்  மறைகிறார். குரு பரிவர்த்தனைக்கு முன்னும் பின்னும் 5 ஆமிடத்திற்கு 6, 8 ல் மறைந்தாலும் அவர் பரிவர்த்தனைக்குப் பிறகு சூரியனிடம் அஸ்தங்கமடைவது சாதகமில்ல. பரம சுபர் குரு அஸ்தந்கமடைவதால் ஜாதகத்தில் பாவ வலு கூடும். ஆனால் லக்னாதிபதி புதனுக்கு நண்பரான சூரியன் லக்னத்திற்கு 1௦ ஆமிடத்தில் திக்பலம் பெற்றதால் இந்த ஜாதகத்திற்கு சூரியன் முழுமையாக யோகத்தை செய்வார் எனலாம். புதன் சூரியனை விட்டு 6 பாகைகள் விலகியுள்ளதால் அஸ்தங்க தோஷத்தால் பாதிக்கபட மாட்டார். அதே சமயம் நீச புதன் திக்பல சூரியனுடன் இணைவதால் வலுவடைகிறார். 12 ஆமிட செவ்வாயின் 8 ஆம் பார்வையை பெற்ற சனி 7 ஆமிடமான தனுசில் திக்பலம் பெற்று சந்திரனுடன் லக்னத்தை பார்க்கிறார். சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 1௦ ஆமிட சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய 3 கிரகங்களும் அமைந்துள்ளனர். இதனால் இவரது தொழில் செவ்வாய், சந்திரன், சூரியன், புதன், குரு ஆகியவை தொடர்புடையதாக அமையும் எனலாம். 8 ஆமதிபதி 7 ல் திக்பலம் பெற்று லக்னத்தை தொடர்புகொள்வது ஜாதகருக்கு நேர்மறை விஷயங்களைவிட எதிர்மறை விஷயங்களில் புகழைத்தரும். லக்னத்துடனும் லக்னாதிபதியுடனும் தொடர்பாகும் கிரகங்கள் அனைத்தும் மருத்துவத்துடன் தொடர்புடையதாக இருப்பதால் இவர் ஒரு மருத்துவர். அதுவும் குரு சந்திரன் தொடர்பு குறிக்கும் மகப்பேறு மருத்துவர். இவரது தொழிலின் தனித்துவத்தை அதற்கான வர்க்க சக்கரம் தசாம்சம் மூலம் ஆராய்வோம்.

தசாம்சத்தில் லக்னம், ராசி, சூரியன், சுக்கிரன் ஆகியோர் ராசியிலில் அமைந்த இடத்திலேயே அமைந்து வர்கோத்தமம் பெற்றுள்ளனர். இது ஜாதகி தன்னுடைய தொழில் ரீதியான இலக்கில் மிகத் தெளிவாக இருப்பதை குறிப்பிடுகிறது. தசாம்சத்தில் லக்னத்தில் அறுவை சிகிச்சை காரகர் செவ்வாய் ஜீவன காரகர் சனியுடன் அமைந்துள்ளதை கவனியுங்கள். இது ஜாதகி தனது தொழிலில் நிறைய அறுவை சிகிச்சைகளை ஏற்று நடத்துபவர் என்பதை தெரிவிக்கிறது. மிதுன லக்னத்தில் அமைந்த சனி, 8 ஆமிடத்திலமைந்த லக்னாதிபதி புதனுடன் பரிவர்த்தனை ஆகியுள்ளளதை கவனியுங்கள். இதனால் உடலின் மறைவு ஸ்தானங்களில் அதாவது 8 ஆமிடம் குறிப்பிடும் ஜனன உறுப்பு சார்ந்த பகுதியில் இவர் அறுவை சிகிச்சை செய்பவர். லக்னத்தை மேஷ குருவின் 9 ஆவது பார்வையை பெற்ற கர்ப்பப்பையின் காரக கிரகம் சந்திரன் பார்க்கிறார். இந்த அமைப்புகளால் ஜாதகி ஒரு மகப்பேறு மருத்துவ நிபுணர்.

லக்னத்தில் அமைந்த செவ்வாய் குருவின் புனர்பூஷத்தில் அமைந்து, உடன் தடை, மறுப்பை  குறிக்கும் 8 ஆமதிபதி சனி தொடர்பு பெற்றதால் ஜாதகி மகப்பேறு மருத்துவத்தில் கருத்தடை மற்றும் பாதிக்கப்பட்ட கர்ப்பப்பை பகுதிகளை வெட்டி அகற்றும் அறுவை சிகிச்சைகளில் தேர்ந்த நிபுணராக உள்ளார். பாதிப்பு, சேதாரத்தை குறிக்கும் 8 ஆமதிபதி சனி, லக்னத்தில் ராகுவின் திருவாதிரையில் அமைந்து செவ்வாய் சேர்க்கை பெற்றதால் இப்பணியில் இவர் அதிகம் ஈடுபடுகிறார். 1 – 8 ஆம் பாவக பரிவர்த்தனை கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய காரணமாகிறது.

கீழே இரண்டாவதாக மற்றொரு ஜாதகம்.

இதுவும் ஒரு பெண்ணின் ஜாதகமே. இவரும் ஒரு மருத்துவரே. சிம்ம லக்னாதிபதி சூரியனும் 8 ஆமிடாதிபதி குருவும் பரிவர்த்தனை பெற்றுள்ளதால் இவரும் மகப்பேறு மருத்துவரே. லக்னத்தை 1௦ ஆமதிபதி சுக்கிரனோடு இணைந்த செவ்வாய் 7  ல் நின்று பார்ப்பது அறுவை சிகிச்சை மருத்துவத்தில் ஈடுபடுத்தும் அமைப்பாகும். ஜீவன காரகர் சனி கருப்பையின் காரகர் சந்திரனுடன் இணைந்துள்ளது தொழிலில் இவரை கருப்பையை கையாளும் மகப்பேறு மருத்துவத்தில் ஈடுபடுத்தும் அமைப்பாகும்.

தசாம்சத்தில் 8 ஆமிடத்தில் கருப்பையின் காரக கிரகம் சந்திரன், புத்திர காரகர் குருவுடன் இணைந்து அமைந்துள்ளதால் மகப்பேறு மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற வைக்கும் அமைப்பை ஏற்படுத்துகிறது. ஜாதகத்தில் 8 ல் மறைந்த குரு வக்கிரமாகி 7 ஆமிடத்தை நோக்கி திரும்பும் அமைப்பிலும், 1௦ ல் வக்கிரமான 5 ஆமதிபதி புதன் 9 ஆமிடத்தை நோக்கி திரும்பும் அமைப்பிலும் உள்ளனர். ராசிப்படி பார்த்தால் ராசிக்கு 5 ல் நீசமான சனியுடன் ஆட்சி பெற்ற செவ்வாய் அமைந்து சனியை நீச பங்கப்படுத்துகிறார். இந்த அமைப்புகளால் இவர் மகப்பேறு மருத்துவத்தில் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை வளப்படுத்தும் துறையில் இவரை நிபுணராக்கியுள்ளது. வக்கிர கிரகங்கள் தங்கள் காரக மற்றும் பாவக ரீதியான விஷயங்களில் ஒருவரை மேதையாக்கும் என்ற அடிப்படையில் இந்த ஜாதகத்தில் வக்கிரமான புதனும் குருவும் மகப்பேறு மருத்துவத்தில் ஜாதகியை நிபுணராக்கியுள்ளது. வக்கிரமாகி 7 க்கு வருவதால் குருவிற்கு 8 ஆமிட தோஷம் விலகுகிறது. தனுசில் கேதுவின் மூல நட்சத்திரத்தில் வக்கிரம் பெற்ற குரு 5 ஆமிடத்திலமைந்த கேதுவின் தோஷத்தை கட்டுப்படுத்துகிறார். 1௦ ல் வக்கிரமாகி பாக்கிய ஸ்தானமான 9 ஆமிடத்திற்கு வரும் புதனால் 5 க்கு 5 ஆமிடமான 9 ஆமிடம் புனிதமாகிறது. இத்தகைய அமைப்புகள் மகப்பேறு வாய்ப்புகளை உருவாக்கி பாதுகாக்கும் துறையில் ஜாதகியை ஈடுபடுத்துகிறது.

பொதுவாக இவ்விரு ஜாதகங்களும் கல்வியிலும், பணியிலும் ஒரே துறையில் பணியாற்றும் வாய்ப்பை வழங்கினாலும், தனித்துவமான சில அமைப்புகள் ஒருவரை கருத்தடை நுட்பத்தில் வல்லவராகவும், மற்றொருவரை கரு வளர்ச்சி நுட்பத்தில் தேர்ந்தவராகவும் மாற்றுகிறது. ஒரே கருவி இருவித செயல்களை செய்வது போல, இருவரும் இவ்விரு பணிகளையும் செய்ய இயலும் என்றாலும் ஜாதகம் ஒருவர் என்ன பணியில் சிறப்புற வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது.

மீண்டும் மற்றுமொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

கடுமை காட்டும் கிரகங்களும் கருணை காட்டுவது எப்போது?

வர்க்கங்களில் செவ்வாய்.

ஜோதிடத்தில் ஒரு கிரகம் எப்படிச் செயல்படும் என்பதை அறிய எண்ணற்ற  யுக்திகள் கடைபிடிக்கப்படுகின்றன. உதாரணமாக அஷ்டவர்க்கத்தை சொல்லலாம். ஒரு ஜோதிடர் எத்தனை யுக்திகளை கற்று வைத்துள்ளாரோ? அத்தனை துல்லியம் அவரது பலனில் வெளிப்படும். ஜோதிடத்தில்

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

பிரியாத வரம் வேண்டும்!…

“ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்” போன்ற திரையிசைப் பாடல்களை கேட்கும்போது நமது இளமை புதுப்பிக்கப்படுகிறது. சமீபத்தில் இப்பாடலை கேட்டபோது இதன் வரிகள் இன்றைய திருமண வாழ்வில் எத்தனை பாடு படுத்துகிறது

மேலும் படிக்க »
ஜாமக்கோள் ஜாலங்கள்

சரியும் சந்தையை சாதகமாக பயன்படுத்தலாமா?

இன்று வேலை, திருமணம், பொருளாதாரம் ஆகியவற்றை பற்றி ஜோதிடர்களை தொடர்புகொள்ளும் அளவுக்கு சமமாக தற்போது பங்கு வணிகம் சார்ந்தும் ஜோதிடர்களை அணுகுகின்றனர் என்பது ஆச்சரியம். முந்தைய காலங்களில் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக நீண்டகால தொடர்

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

புத்திசாலிகள் வெல்லுமிடம்!

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனிச்சிறப்பான குண நலன்கள் உண்டு. ஆனால் அவை மற்றொரு கிரகத்துடன் இணைகையில் அதற்கு குணமாறுபாடு ஏற்படும். இணையும் கிரக குணத்தையும் கிரகம் கிரகிப்பதுதான் இதற்குக் காரணம். இதில் மூன்றாவது கிரகமும்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

திருமணத்தடை பரிகாரம்.

இன்று பெரும்பாலான இளைஞர் சமுதாயத்தினருக்கு திருமணத் தடை என்பது பெரும் மன உழைச்சலைத் தருகிறது. கடந்த தலைமுறையினருக்கு அதாவது 199௦ க்கு முன் இருந்தவர்கள் நமது சமுதாயம் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைத்த காலத்தில்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

Beware of Scammers

உலகம் வேகமாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வறுமையின் பிடியில் இருந்து பலகோடி மக்களை தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியால் மீட்டெடுத்துள்ளது என உலக வங்கி பாராட்டியுள்ளது. பலதரப்பட்ட காலாச்சார வேறுபாடுகளைக்கொண்டிருந்தாலும், அடிப்படையில்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil