Run… Run….

வாழ்க்கை சில நேரங்களில் நம்மை ஓட விடும், சில நேரங்களில் ஓய்வெடுக்க விடும். சில காலங்களில் கொண்டாட வைக்கும். அத்தகைய காலங்களில் சூழ்நிலைக்கேற்ப நாம் நடந்துகொள்வது நன்மை பயக்கும். “உழைக்க வேண்டிய  காலத்தில் ஓய்வெடுத்தால், ஓய்வெடுக்க வேண்டிய காலத்தில் ஓட வேண்டியிருக்கும்” என்பர். ஆனால் இன்றைய உலக பொருளாதாரச் சூழல் நம் அனைவரையும் நிதானிக்க வைக்கிறது. எதிர்கால வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்று அனுமானித்து அதன்படி இன்று நம்மை தகவமைத்துக்கொண்டால் மட்டுமே நாளைய உலகில் நமக்கான அங்கீகாரம் இருக்கும் என்று உறுதியாகக் கூற முடியும். விரைந்து மாறிவரும் தொழில் நுட்பங்கள் தற்போது அனைவர் மனதிலும் திகைப்பை ஏற்படுத்தும் விதமாகவே உள்ளது. கடந்த இரு தசாப்தங்களை போல இன்று கணினி தொடர்பான கல்வி பயின்று நாளைய தகவல் தொழில் நுட்ப உலகில் கோலோச்சலாம் என்ற கனவுடன் கல்லூரிகளில் பயின்றுகொண்டிருக்கும் மாணவர்களுக்கு தற்போதைய கணினி அறிவு நாளைய உலகிற்கு போதுமானதாக இராது என்பது கவலையளிக்கும் விஷயம். Ai மற்றும் Quantum தொழில் நுட்பங்கள்தான் நாளைய உலகை ஆளும் என்பது தற்போது பரபரப்பான பேச்சாக உள்ளது. இவ்விரு தொழில்நுட்பங்களில் முன்னணி பெறும் நாடுகள்தான் பிற நாடுகளை கட்டுப்படுத்தும் வல்லமை பெறும். “இன்றைய உலகில் அறிவே ஆயுதம்” எனும் நிலையில் நாம் உள்ளோம். அனைத்து தொலில் நுட்பத் துறைகளிலும் தங்களுடன் போட்டியிடும் இந்தியாவை மேற்கத்திய நாடுகள் போட்டியாளராகப் பார்க்காமல் பகைவராக பார்ப்பதை இன்று கண்கூடாகக் காண்கிறோம். இதனால் இப்போது நாம் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டால், இந்தியா வல்லரசாவது என்பது கனவாகிவிடும். எனவே இன்று ஓடினால் அடுத்த ஓரிரு தசாப்தங்கள் நமக்கானதாக மாறும். ஆனால் நமக்கு நீடித்த வளர்ச்சி வேண்டுமாயின் நாம் தொடர்ந்து வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாய விதி.  

இந்நிலையில் தனது தொழிலில் சோர்வுற்ற ஒருவர், என்னதான் நடக்கிறது தனது தொழிலில் என்று என்னை அனுகியதன் பேரில் பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னமே கீழே நீங்கள் காண்பது.

துலாம் உதயத்தில் குரு நின்று 7 ல் வெளிவட்டத்தில் நிற்கும் 1௦ ஆமதிபதி சந்திரனை நேர் பார்வை பார்க்கிறார். இரண்டுமே நீர் கிரகங்கள். சந்திரன் நீர் என்றால், குரு கடல். உதயத்தில் குரு திக்பலம் பெற்று நிற்க, தொழில் ஸ்தானமான 1௦ ஆமிடம் கடகத்தில் ஜாம (வெளிவட்ட) உதயாதிபதி சுக்கிரனுடன் திக்பல சூரியனுடனும், 9, 12 ஆமதிபதி புதனுடனும் இணைந்து  நிற்பதிலிருந்து கேள்வியாளர் சுயமாக தொழில் செய்பவர். அது கடல் சார் தொடர்புடைய வர்த்தக தொடர்பாளராக இருக்க வேண்டும் என்று அறியலாம். புதன் தொடர்பாளரை குறிக்கும்.

உதயத்தில் நிற்கும் குருவே ஆரூடம் அமைந்த 9 ஆமிடமான மிதுனத்தில்  உள்வட்ட உதயாதிபதி சுக்கிரன், சனி ஆகியோருடன் நிற்பதிலிருந்து, கேள்வியாளர் வெளிநாடு தொடர்புடைய தொழில் செய்பவர் என்பதை உறுதியாகக் கூறலாம். 9 ஆமிட ஆரூடம் ராகு சாரத்தில் அமைந்ததால் தொழிலுக்காக கேள்வியாளர் ராகு குறிப்பிடும் நீண்ட பயணங்கள் செய்பவராக இருப்பார். உதயத்தை 7 ஆமிடத்திலிருந்து பயண காரகர் சந்திரன் பார்ப்பதும் இதையே குறிப்பிட்டுகிறது.

வாடிக்கையாளரை குறிப்பிடும் 7 ஆமதிபதி செவ்வாய் 12 ஆமிடத்தில் உச்ச புதனுடன் இணைந்துள்ளார் என்பதால் வாடிக்கையாளர்களை காண கேள்வியாளர் அலைச்சல் மிக்க பயணங்கள் செய்பவராக இருப்பார். ஜாமக்கோளில் 12 ஆமிடம் தொடர்புடைய விஷயங்களில் சில சமயம் தவிர்ப்பது நலம் என்று கூறப்படும் வேளையில், வாடிக்கையாளரை குறிப்பிடும் கிரகம் 12 ல் நிற்பதால், அலைச்சல் இருந்தாலும் வாடிக்கையாளர்களை காண கேள்வியாளர் பயணித்துத்தான் ஆக வேண்டும் என்பதை குறிப்பிடுகிறது.

கவிப்பு லாப ஸ்தானமாக 11 ல் நிற்பது நன்மையே என்றாலும் அவர் உதயாதிபதி சுக்கிரனின் பூரத்தில் நிற்பதால் தனக்கு லாபம் வேண்டுமெனில் கேள்வியாளர் சிரமங்களை பார்க்காமல் தனது கடமையை செய்ய வேண்டும் என்பதை குறிப்பிடுகிறது.

மேற்கண்ட விஷயங்களை ஆராய்ந்துவிட்டு கேள்வியாளரிடம் உங்களது தொழிலில் அலைச்சல்கள் அதிகமிருக்கும். தற்போது இந்த அலைச்சல்கள் அல்லது பயணங்களால் அதிக பயனிருக்காது. ஆனால் நீடித்த வாடிக்கையாளர் தொடர்பை தக்கவைத்துக்கொள்ள இந்த பயணங்கள் நிச்சயம் தேவை. உதயத்திலும், பத்தாமிடத்திலும் திக்பல கிரகங்கள் இருப்பதால் உங்களது தொழில் சிறப்பானதே. தொழிலில் இவ்வித அலைச்சல்கள் தற்காலிகமானவைகளே. நீங்கள் கடல் பயணங்கள், கப்பல் சார்ந்த ஏற்றுமதி தொழில்  தொடர்புடையவராக இருக்க வேண்டும் என்று கூறினேன். அதற்கு வாடிக்கையாளர் “நான் கப்பலில் சரக்கு ஏற்றுமதி தொடர்புடைய Lojistic நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வருகிறேன். அதன் பொருட்டு வாடிக்கையாளர்களை காண பயணங்கள் அதிகம். ஆனால் அதற்கேற்ற பலன்கள் குறைவு என்பதுதான் எனது ஆதங்கம். அதன்பொருட்டுத்தான் உங்கள் ஆலோசனையை நாடினேன்” என்றார். பிரசன்னம் வந்தவர் சூழலை துல்லியமாகக் காட்டியது. தற்போது உள்வட்டத்தில் மிதுனத்தில் நிற்கும் உதயாதிபதி சுக்கிரன் உதயத்தை தொடக்கூடிய அடுத்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு தொழிலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். அதுவரை சோர்வடையாமல் தொழிலில் உங்கள் முயற்சியை தொடருங்கள் என்று கூறினேன்.

மீண்டும் உங்களை மற்றுமொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: +91 8300124501.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

இரண்டாம் பாவகம்

செயற்கை கருவூட்டல் எப்போது வெற்றி தரும்?

வாழ்க்கை ஒரு வரம் என்று கிடைத்த வாழ்வை அனுபவித்து வாழ்பவர்கள் ஒரு ரகம். வாழ்க்கை ஒரு எலுமிச்சம் கனியை கொடுத்தால் அதை சாறு  பிழிந்து சுவைப்பது அலாதி என்று கூறி தனக்கேற்றபடி அதை  மாற்றியமைத்துக்கொண்டு

மேலும் படிக்க »
இந்தியா

Run… Run….

வாழ்க்கை சில நேரங்களில் நம்மை ஓட விடும், சில நேரங்களில் ஓய்வெடுக்க விடும். சில காலங்களில் கொண்டாட வைக்கும். அத்தகைய காலங்களில் சூழ்நிலைக்கேற்ப நாம் நடந்துகொள்வது நன்மை பயக்கும். “உழைக்க வேண்டிய  காலத்தில் ஓய்வெடுத்தால்,

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சுதந்திரம் கிடைத்ததா?  

நாடு இன்று 79 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இத்தனை ஆண்டுகளில் நாம் பல படிகளை கடந்து வந்துள்ளோம். இன்றைய வளர்ந்த மேலை நாடுகள் என்பவை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பிற நாடுகளை அடிமைப்படுத்தியும்,

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

தொழில் மாற்றம்…

இன்று அனைவரும் கேட்பது இன்றைய கடுமையான பொருளாதாரச் சூழல் எப்போது நல்லவிதமாக நிம்மதியாக சம்பாதிக்கும் விதமாக மாறும்? என்பதே. உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் மாற்றங்களுக்கு உட்பட்டவைதான். மாற்றங்களே உயிர்களை  அடுத்த கட்ட வளர்ச்சிக்கு

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

மன்னாரு & கம்பெனி மேனேஜர்…

எனது நீண்ட நாள் வாடிக்கையாளர் ஒருவர் பெங்களூரில் மென்பொருள் துறையில் பணிபுரிபவர். வெகு நாட்களுக்கு முன் அவரது ஜாதகத்தை பார்த்துவிட்டு வேலை அமைப்புகள் சிறப்பாக உள்ளன. ஆனால் வேலையில் அடிக்கடி மாறுதல்களை ஏற்கும் அமைப்பு

மேலும் படிக்க »
Tarot

பணம் செய்ய விரும்பு.

வேகமாக உழைத்தவர்களைவிட விவேகமாக உழைத்தவர்களே விரைந்து முன்னேற இயலும் என்பது கடந்த காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திற்கும் பொருந்தும் விதியாகும். இன்று இந்தியா வளரும் நாடு என்பதியிலிருந்து   வளர்ந்த நாடு எனும் நிலையை நோக்கி வேகமாக

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil