பாம்புகளும் கழுகுகளும்!

பாம்புகளும் கழுகளும் ஒன்றுக்கொன்று கடும் பகையானவை. ஆனால் அவைகளும் இயற்கையின் நியதிப்படி சில விஷயங்களை ஒரே மாதிரி தங்களது வாழ்வில் கடைபிடிக்கின்றன. பாம்புகள் பழுதாகிவிட்ட தங்களை தோலை அவ்வப்போது உரித்துக்கொண்டுவிடுகின்றன. கழுகுகள் வாழ்வின் பிற்பகுதியில் தங்களது இறகுகளையும், கால் விரல் நகங்களையும், அலகையும் உதிர்த்துவிட்டு புதிதாக அவற்றை வளர்த்தெடுத்து மீதி வாழ்நாட்களை வலிமையோடு எதிர்கொள்கின்றன. கழுகளுக்கு அது ஒரு கடினமான காலமாக இருக்கும். புதிதாக இறகுகள் வளரும்வரை உணவு தேடிச் செல்ல இயலா நிலை ஏற்படும். ஆனாலும் அவற்றை தாங்கிக்கொண்டு தங்களை புதுப்பித்துக்கொள்கின்றன. அப்படி தங்களை உயிர்பித்துக்கொள்ளாவிட்டால் மீதி வாழ்நாட்களை எதிர்கொள்ள இயலாது என்பது அவற்றிற்குத் தெரியும். மனிதனைவிட அறிவில் சிறியவைகளான இத்தகைய உயிரினங்களே  காலத்தின் அவசியம் கருதி தங்களை மாற்றிக்கொள்ளும்போது, அவைகளைவிட அறிவில் மேம்பட்ட மனிதன் மாறிவரும் சூழ்நிலைகளுக்கேற்ப தன்னை தகவமைத்துக்கொள்வது இன்றியமையாதது. அப்படி மாற்றங்களை எதிர்கொள்ளாத மனிதன் மட்டுமல்ல, எந்த உயிரினமும் தம் வாழ்வில் தோல்வியடையும் என்பது உறுதி. “Comfort Zone” எனும் சௌகரிய வட்டத்தை விட்டு விலகத்  துணிச்சலற்றவர்கள் தங்கள் சுய திறமை என்ன என்பதையே அறியாதவர்களாகிறார்கள்.  இத்தகையவர்களே கடுமையான காலமாற்றத்தில் எளிதில் காணாமல் போகிறார்கள். குறிப்பாக சம்பாத்தியச் சூழலில் மாறிவரும் இன்றைய உலகின் தேவைகேற்ப தங்களை மாற்றிக்கொள்ளாதவர்கள் செய்தொழிலில் கடும் பாதிப்பை சந்திக்கிறார்கள். காலம் சில சமயங்களில் இறக்கமற்றதாகத் தோன்றும். அதற்குக் காரணம் தவிர்க்க இயலாத மாற்றங்கள்தான். காலம் கொணரும் மாற்றங்கள் பல சமயங்களில் தங்களது வாழ்வின் அற்புதங்களை கண்டுகொண்டு அவற்றை அனுபவிக்கவே என்பதை உணர்ந்தால் கவலைப்படத் தேவையில்லை.

10 வருடங்களாக பணியிடத்தில் உயர் பொறுப்பில் இருந்த ஒருவர், திடீரென வேலை போய்  விட்டதால் திகைத்துப்போனார். தொழில் திறமையும் வளமையும் கொடுத்த தெம்பு அவரை எதிர்காலத் சூழலை கணிப்பதை அவசியமற்றதாகச் செய்திருந்தது. இப்போது என்ன செய்வது? என்ற கேள்வியுடன் என்னை அனுகியவருக்காகப் பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னமே கீழே நீங்கள் காண்பது.

கடக உதயம். உதயத்தில் அமைந்த ஜாமச் சனி (வெளிவட்ட சனி) 7 ல் அமைந்த 10 ஆமதிபதி செவ்வாயின் பார்வையை பெறுகிறார். அதே சமயம் மேஷத்தில் இருந்து உள்வட்ட செவ்வாய் நான்காம் பார்வையாக தனது நீச வீட்டில் அமைந்த உதய சனியை பார்க்க, உதய சனி தனது 10 ஆம் பார்வையாக மேஷ செவ்வாயை பார்க்கிறார். உதயத்திற்கு 8 ல் அமைந்த உள்வட்ட சனியும் மேஷ சனியை 3 ஆம் பார்வையாக பார்க்கிறார். இவை கடுமையான தொழில் சூழலை  தெரிவிக்கிறது. மேஷத்தில் அமைந்த செவ்வாய் திக்பலம் பெற்றிருக்க, ஜாமச் செவ்வாயும் மகரத்தில் உச்சம் பெற்றிருப்பதை கவனிக்க. இவை கேள்வியாளர் உயர்ந்த பொறுப்பில் இருந்துள்ளதை குறிப்பிடுகிறது. உதயத்திற்கு 5 ல், சனி சாரத்தில் அமைந்த ஆரூடம் பணியிழப்பை குறிப்பிடுகிறது. 6 ல் தனுசில் அமைந்த கவிப்புடன் ஜாம குரு இணைவு கேள்வியாளரின் வேலை பாதிக்கப்பட்டுள்ளதை தெளிவாக குறிப்பிடுகிறது. உதயம் மிதுனத்தை கடந்து வந்துள்ளதை கவனிக்க. ஜாமச் சந்திரன் உதயத்திற்கு  12 ல் 6 ஆமதிபதி குரு சாரத்தில் மறைந்து கவிப்பின் பார்வையை பெறுவது ஜாதகர் பணியிழப்பை சந்தித்துவிட்டவர் என்பதை தெளிவாக்குகிறது.

இனி பணியிழப்பின் காரணத்தை அறியலாம் வாருங்கள். 10 ல் அமைந்த செவ்வாய் 9 ஆமிட ராகுவை சந்தித்துவிட்டு வந்துள்ளது. இதனால் கேள்வியாளர் தனது பணியில் கடுமையான கசப்பை கடந்து வந்துள்ளது தெரிகிறது. முதலாளியை குறிப்பிடும் 9 ஆமிடத்தில் ராகு நின்று நிர்வாக காரகர் சூரியன் வெளிவட்டத்தில் நிற்க, உள்வட்டத்தில் சூரியன் 12 ல் மறைந்தது இவரது முதலாளி நிர்வாகத்தில் ஏற்பட்ட கடும் பாதிப்புகளை எதிர்கொள்ள இயலாமல் கேள்வியாளரை பணி நீக்கம் செய்திருப்பார் என்பதை குறிப்பிடுகிறது. அதே சமயம் ராகுவை கடந்து செவ்வாய் திக்பலத்தில் தற்போது நிற்பது கேள்வியாளர் சூழ்நிலையை சமாளிக்கும் மன உறுதியுடன் இருப்பதை குறிப்பிடுகிறது. உள்வட்ட சந்திரனும் கேதுவை கடந்து துலாத்தில் திக்பலத்தில் நின்று மேஷ செவ்வாயின் பார்வையை பெறுவது கேள்வியாளர் தற்போது துணிவுடன் இருப்பதை உறுதி செய்கிறது. 10 ஆமிட செவ்வாயை மாற்றத்தின் காரகர் சந்திரனும், ஜீவன காரகர் சனியும் தொடர்புகொள்வது கேள்வியாளருக்கு மாற்றுப்பணி வாய்ப்பு வந்துள்ளதே இவரது மன உறுதிக்கு காரணம் என்பதை குறிப்பிடுகிறது.

பிரசன்னத்தில் 4 ஆமிடத்தில் அமைந்த ஜாம புதன் கன்னியில் கேதுவுடன் அமைந்த ஜாமச் சுக்கிரனுடன் பரிவர்த்தனை அடைந்துள்ளதை கவனியுங்கள். இது கேள்வியுடன் தொடர்புடையது அல்ல என்றாலும் கேள்வியாளர் பணிழப்பால் வீட்டுக்கடனை அடைக்க இயலாமல் போய் விடுமோ என்ற கவலையில் இருப்பதை குறிப்பிடுகிறது. பரிவர்த்தனை தனது சொந்த வீட்டில் இருந்து கேள்வியாளர் இடம் மாறி வசிப்பதையும் குறிப்பிடுகிறது. புதனுடனான பரிவர்த்தனைக்குப் பிறகு வீடு காரகர் சுக்கிரன் துலாத்தில் திக்பலம் பெற்று மேஷத்தில் திக்பலம் பெற்ற செவ்வாயின் பார்வையை பெறுவதாலும், மகரத்தில் ஜாமச் செவ்வாய் வலுவாக நிற்பதாலும் இவரது வீட்டுக்கடனை அடைக்க எந்த பங்கமும் வராது என்பதை குறிப்பிடுகிறது. உண்மையில் கேள்வியாளருக்கு சுக்கிரன், செவ்வாயின் காரகங்கள் வலுவடைந்துள்ளதால் கேள்வியாளர் இவை தொடர்பான தொழில்களில் ஈடுபட்டால் வெற்றியடைவார். கேள்வி இது தொடர்பானது இல்லை என்றாலும் இந்த கூடுதல் தகவல் தெரிவிக்கப்பட்டால் கேள்வியார் பிரசன்னத்தின் துல்லியத்தை எண்ணி மகிழ்வார் என்பதுடன் அது ஜோதிடருக்கும் பெயர் பெற்றுத் தரும்.

மேற்கண்டபடி பிரசன்னத்தை ஆராய்ந்துவிட்டு “இழந்த வேலையை நினைந்து கவலைபடாதீர்கள். தற்போது உங்களுக்கு ஒரு வேலைக்கான வாய்ப்பு வந்திருக்கும். அதை தயக்கமின்றி  ஒப்புக்கொள்ளுங்கள். மேலும் உங்களுக்கு செவ்வாய், சுக்கிரன் வலுவாக உள்ளதால் வீடு, மனை யோகம் சிறப்பாக உள்ளது. அது தொடர்பான தொழில்களில் ஈடுபட்டால் சிறப்பு” என்று பதில் கூறினேன். இதை ஆமோதித்த கேள்வியாளர் கூறியதாவது. “நான் முன்பு மின்சார இயந்திரங்களை கையாளும் நிறுவனத்தில் தலைமை பொறுப்பில் இருந்தேன். தற்போது அதே போன்ற மற்றொரு நிறுவனம் எனக்கு பணி தர தயாராக உள்ளது. சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு மற்றொரு வீட்டில் வசித்து வருகிறோம். சொந்த வீட்டிலிருந்து வரும் வாடகை மூலம் வீட்டுக் கடனை அடைத்து வருகிறோம். எனக்கு Real Estate தொழில் செய்யவும் மிகுந்த ஆர்வம் உள்ளது” என்றார்.

நெருப்பு ராசிகளில் செவ்வாய் மின்சாரத்தை குறிப்பிடும் என்பதை அறிக. பிரசன்னம் செவ்வாய், சுக்கிரன் சார்ந்த விஷயங்களில் கேள்வியாளருக்கு உயர்வுகள் காத்துள்ளதை தெரிவிக்கிறது. அவர் கடந்த வாழ்க்கைச் சூழலிலேயே முடங்கிவிட்டால் வாழ்க்கை அவருக்கு அளிக்கக் காத்திருக்கும் வாய்ப்புகளை அடையாமலேயே போய்விடும் வாய்ப்பு உள்ளதாலேயே கிரகங்கள் அவரது வாழ்வை மாற்றிவிடுகின்றன. நீங்கள் எப்படி ஓரிடத்தில் அடைந்துகிடக்கும் கோழிகளா? அல்லது நல்வாழ்விற்காக கடின சூழ்நிலைகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் கழுகுகளா?   

மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: 8300124501.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

Chip

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

Calm yourself. The storm will pass.

காலம் சுழன்றுகொண்டே இருக்கிறது. மனித வாழ்க்கையும் புதுப்புது சவால்களை சந்தித்துக்கொண்டே இருக்கிறது. சவால்களை எதிர்கொள்ள இயலாதவர்கள் களத்தில் இருந்து வெளியேறுகிறார்கள். உண்மை, நேர்மை, உழைப்பு இவற்றைவிட, இவற்றால் அடையும் பலன் என்ன? என்பதே தற்காலத்தில்

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

Decoding பாதகாதிபதி!

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்தனி காரகங்கள் உண்டு.  ஒவ்வொரு பாவகத்திற்கும் தனியான காரகங்கள் உண்டு. அதேபோல ஒவ்வொரு ராசியும் தனக்கான இயல்புகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனிப்பட்ட குணாதியசங்கள் உண்டு. ஒரு காரக கிரகம்

மேலும் படிக்க »
6 ஆம் பாவகம்

டிரம்பாட்டம்!

நல்ல கல்வி கற்றிருந்தால் மட்டும் போதும், தாய் நாட்டில் இல்லாத வளமைகளை மேலை நாடுகளுக்கு சென்று நமது கல்வியறிவால் நல்ல பணியில் அமர்ந்து வாழ்வின் அதிக பட்ச வசந்தங்களை அனுபவித்துவிட வேண்டும் என்பது பொதுவாக

மேலும் படிக்க »
இந்தியா

Chip

இன்றைய நவீன மின்னணு யுகம் நாளும் பல புதிய  கண்டுபிடிப்புகளுடன் விரைந்து மாற்றங்களடைந்து வருகிறது. தற்காலத் தேவைக்கேற்ற திறமைகளை பெற்றிருந்தால் மட்டுமே இன்று நல்லபடியாக வாழ இயலும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று

மேலும் படிக்க »
இந்தியா

நன்றி!

முன்னோர் வழிபாடு என்பது மனித இனம் தங்களது முன்னோர்களை நன்றியோடு நினைவு கூர்வதற்காக உலகின் அனைத்து பகுதிகளிலும், அனைத்து மதங்களிலும் பல பெயர்களில் கொண்டாடப்படுகிறது. இந்துக்களுக்கு இது மஹாளய பக்ஷம் என்றால், கிறிஸ்தவர்களுக்கு அது

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

செயற்கை கருவூட்டல் எப்போது வெற்றி தரும்?

வாழ்க்கை ஒரு வரம் என்று கிடைத்த வாழ்வை அனுபவித்து வாழ்பவர்கள் ஒரு ரகம். வாழ்க்கை ஒரு எலுமிச்சம் கனியை கொடுத்தால் அதை சாறு  பிழிந்து சுவைப்பது அலாதி என்று கூறி தனக்கேற்றபடி அதை  மாற்றியமைத்துக்கொண்டு

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil